சீனியர்களுக்கான டேட்டிங் ஆப்ஸ்! - காலம் கடந்துபோன 50 பிளஸ்!
giphy.com |
காதல் யாருக்குத்தான் வராது? ஆனால் அப்போதுதான் நாம் பிசியான கம்ப்யூட்டரைத் தட்டிக்கொண்டு இருப்போம். காதல் அப்படியே காற்றில் கற்பூரமாக கரைந்துபோயிருக்கும். அப்புறம் ஜி. சுரேந்தர்நாத் எழுதிய விகடன் கதையைப் போல, நினைத்துப் பார்த்து படித்துப்பார்த்து கண்ணீர் சிந்த வேண்டியதுதான். இன்று மளிகைக்கடை முதல் அனைத்தும் டிஜிட்டலுக்கு மாறிவிட்டன. அப்புறம் என்ன காதலையும் தள்ளு தள்ளு என்று தள்ளி இணையத்தில் ஏற்ற வேண்டியதுதானே.. ஏற்றி விட்டிருக்கிறார்கள். இது கொஞ்சம் சீனியர்களுக்கானது.
ஆம் 50 பிளஸ் ஆட்களுக்கான ஆப்கள் இது. இதில் அவர்கள் தங்களுக்குப் பிடித்தவர்களைத் தேர்வு செய்து பேசலாம். மணம் செய்யலாம். அதற்குப்பிறகு கிடைக்கும் சாத்தியங்களைப் பொறுத்து ஏதாவது முயற்சிக்கலாம். ஆப்களை பார்த்துவிடுவோமா?
லூமன் - LUMEN
இங்கிலாந்தைச் சேர்ந்த சார்லி லெஸ்டர் என்பவர் உருவாக்கிய ஆப் இது. 2018இல் ஆழ்ந்து யோசித்து லூமன் என்ற ஆப்பை உருவாக்கினார்.
FINALLY
ஜெர்மன்கார ர்கள் இயந்திரங்களை மட்டும்தான் செய்வார்களா? காதலையும் செய்வார்கள் என்பதற்கு இந்த ஆப் சாட்சி. ஜாமோ என்பவர் 2017இல் இந்த ஆப்பை இணையத்தில் ஏற்றினார்.
Disons demain
இந்தியாவிலும் சாதாரண முத்தத்தையும் தாண்டி பிரெஞ்சு முத்த த்திற்காகத்தானே அனைவரும் அடித்துக்கொண்டிருக்கிறோம். தன் கலாசாரத்தை பிற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதில் வல்லவர்களான பிரெஞ்சு ஆட்களின் ஆப்தான் இது. 2017இல் மீட்டிக் என்ற நிறுவனத்தின் தயாரிப்பு இது.
Ourtime
அமெரிக்காவின் தயாரிப்பு. உலகம் முழுக்க பேசிய ஐந்து நிமிடத்தில் வெளிநாட்டுப் பெண்களை மடித்துவிடலாம் என்ற மூடநம்பிக்கையை ஏற்படுத்திய நாட்டினரின் ஆப் இது. கவனமாக பயன்படுத்தவும்.
குறிப்பு- இந்தியாவில் சில ஆப்களின் சேவை கிடைக்காது. இருந்தாலும் முயற்சியுங்கள். விரைவில் அவையும் உங்கள் ஸ்மார்ட்போனில் இடம்பிடிக்க வாய்ப்புள்ளது.
நன்றி - இடி மேகசின்
கிளிக் செய்யுங்கள்...
https://www.ourtime.com/
https://lumenapp.com/
https://www.jaumo.com/