தங்க ஆராய்ச்சி - நூதன வழியில் தங்கம் தேடும் ஆராய்ச்சியாளர்கள்




austin powers love GIF
giphy.com



தங்கத்தைக் கண்டறிய புதிய ஆராய்ச்சி!

ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த நிறுவனம் நிலத்திலுள்ள கனிமங்களை மரங்களின் மூலம் கண்டறியும் முறையைக் கண்டறிந்துள்ளது.

தெற்கு ஆஸ்திரேலியாவில் மர்மோட்டா (marmota) என்ற நிறுவனம் இந்த ஆராய்ச்சியில் வெற்றி பெற்றுள்ளது. மரங்களின் வேர்கள் நிலத்தடியில் ஊடுருவி கனிமச்சத்துகளை உறிஞ்சுகின்றன. இந்த நிறுவனம் அவற்றின் இலைகள், தண்டுகளை ஆராய்ந்து அதிலுள்ள தங்கத்தின் அளவைக் கணித்துள்ளன. மண்ணில் டன்னுக்கு 3.4 கிராம் தங்கம் உள்ளதை மாதிரிகளிலிருந்து கண்டறிந்துள்ளனர். இச்சோதனை முன்னர் நடத்தப்பட்டபோது, இந்த வெற்றிகரமான முடிவு கிடைக்கவில்லை.

மர்மோட்டா நிறுவனம், இலைகளின் மாதிரிகளை சேகரித்து சோதித்தது. அதில் சென்னா வகை மர இலைகளில் அதிகளவு தங்கம் இருப்பது தெரிய வந்துள்ளது. இங்குள்ள பகுதிகளை திறம்பட ஆராய உள்ளோம். இங்குள்ள மரங்களின் இலைகள், தண்டுகள், கிளைகள் ஆகியவற்றை ஆராய்ந்து பார்த்தால் அதிலுள்ள கனிமங்களின் அளவைக் கண்டுபிடிக்க முடியும் என்கிறார் மர்மோட்டா நிறுவன ஆராய்ச்சியாளர் ஆரோன் ப்ரௌன்.
பொதுவாக மண்ணிலுள்ள தங்கத்தை எப்படி ஆராய்வார்கள்?

மண்ணைத் தோண்டி அதன் மாதிரிகளை ஆய்வகத்தில் ஆய்வு செய்துதான் அல்லவா?இங்கு மரங்களின் இலைகளை ஆராய்வது என்பது புதுமையான முறையாகவும் சுலபமாகவும் உள்ளது. கனிம வளங்களை அறிவதற்காக  மண்ணைத் தோண்டும் வேலை மிச்சமாகிறது. இதில் தாவர திசுக்களை 10 ஆயிரம் டிகிரி செல்சியசில் வெப்பப்படுத்தி ஆராயும் பிளாஸ்மா மாஸ் ஸ்பெக்ட்ரோமெட்ரி முக்கியமானது. சுரங்கத்துறையில் இது முக்கியமான கண்டுபிடிப்பாக பேசப்பட்டு வருகிறது.





பிரபலமான இடுகைகள்