கொலைகார தேசம் - அமெரிக்கா




Ted Bundy.
ஜெஃப்ரி டாமர்





அசுரகுலம்

கொலை விழும் நாடு!


அமெரிக்காவில் இன்றுவரை இரண்டு லட்சத்து இருபதாயிரம் கொலை வழக்குகளை என்ன செய்வது எப்படி முடிப்பது என தெரியாமல் போலீஸ் திணறி வருகிறது. இக்கணக்கு தொடங்குவது 1980ஆம் ஆண்டிலிருந்து. போலீஸ்தான் சீரியல் கொலைகார ர்களை பிடித்து மின்சார நாற்காலி, அல்லது விஷ ஊசி போட்டுக்கொல்கிறது. ஆனாலும கொலைகளின் எண்ணிக்கை ஏன் குறையவில்லை.


1900 இல் அமெரிக்க காவல்துறை சீரியல் கொலைகார ர்களை வகைப்படுத்தி வைத்திருந்த து. இம்முறையில் 3 ஆயிரம் பேர் இருந்தனர். ஆனால் இவர்களில் பெரும்பாலானோர் பயன்படுத்திய ஆயுதம் துப்பாக்கியாகவே இருந்தது என்கிறார். மருத்துவர் மைக்கேல் ஆமோட். இக்கொலைகார ர்களின் 52 சதவீதம் பேர் வெள்ளையர்கள், 40 சதவீதத்தினர் கருப்பர்கள். பிற இனத்தவர்கள் மீதி. 1970 முதல் 2005 வரை 93 மூன்று பேர்களை கொலை செய்த சாமுவேல் லிட்டியல் என்ற கொலைகாரப் பெண் இப்பட்டியலில் முன்னணியில் உள்ளார்.


என்ன காரணம்?

தனிமைதான். சீரியல் கொலைகார ர்களில் இளம் வயது பெரும்பாலும் தாயிடமிருந்து பிரிந்து வாழ்வதாகவே இருக்கிறது. இது அவர்களின் மூளை வளர்ச்சியில் பெரும் மாறுதல்களை ஏற்படுத்துகிறது. இதன்விளைவாக, மற்றவர்களின் வலிகளை வேடிக்கை பார்க்க ரசிக்கத் தொடங்குகின்றனர். இது சரியா, தவறா என்பது சமூகத்திற்குத்தான். அவர்களுக்கு அது வாழ்க்கையாகவே மாறுகிறது. சில மருத்துவர்கள் இதனை மரபியல் ரீதியாக அணுகுகிறார்கள். போராட்ட மரபணு அவர்களின் உடலில் உள்ளது. இன்றைய அமெரிக்கர்களில் 30 சதவீதம் என்று வரையறுக்கின்றனர்.


இதற்கு உதாரணம் ராபர்ட் தலே சேஜி என்பவர். இவர் 1944 ஆம் ஆண்டு கனெக்டிகட் சர்க்கஸை தீக்கிரையாக்கி 168 பேர்களை துடிக்க துடிக்க கொன்றார். இவரின் இளம்வயது எப்படி இருந்தது தெரியுமா? சிறு தவறு செய்தாலும் ராபர்ட் தன் கையை எரியும் மெழுகுவர்த்தியின் தீக்கு நேராக பிடித்து தண்டனை பெற வேண்டும். அவரின் அப்பா அப்படித்தான் வற்புறுத்தினார். அதை ராபர்ட்டுக்கு தீவிரமாக செயல்படுத்தி சித்திரவதை செய்தார். இறந்தவர்களைப் பற்றி அவர்கள் கரப்பான் பூச்சிகளைப் போல என்றார் சாமுவேல் லிட்டில். இவர் மாற்றுப்பாலினத்தவர். நிறைய பெண்களை கழுத்தை நெரித்து கொன்றவர், அதற்கும் முன்னரே அவர்களை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தினார்.

ஜெஃப்ரி டாமர் 1978 ஆம் ஆண்டு 17 இளைஞர்களை வல்லுறவுக்குள்ளாக்கி கொன்றார். ஏன் இப்படி கொன்றீர்கள் என்று பத்திரிகைகள் கேட்டபோது, அவர்களை நான் வெறுக்கவில்லை. என்னுடனே வைத்துக்கொள்ள விரும்பினேன் என்றார்.


ஏன் சீரியல் கொலைகாரர்கள் உருவாகிறார்கள்?

உறவுகள் ஏற்படுத்தும் தனிமை, உடல் ரீதியான குறைபாடுகள், உருவம் , குடும்பம் ரீதியான கேலி, கிண்டல்கள்  இவையெல்லாமே மனிதர்களை பாதிக்க கூடியவை. தொழிலதிபர்கள் தங்கள் வெற்றி சீக்ரெட்டுகளை சொல்ல மாட்டார்களே ஒழிய தாங்கள் வெற்றி பெற்ற கதைகளை பகிர ஆசைப்படுவார்கள். அதைப்போலவேதான் சமூகத்தில் வெளியே வர கூச்சப்படும் சீரியல் கொலைகார ர்கள், அவர்கள் செய்யும் கொலையில் தங்களைப் பற்றிய குறிப்பை வைத்துவிட்டே செல்கிறார்கள். சாமர்த்தியசாலிகள் அதை பின்தொடர்ந்தால் கொலைகார ர்கள் பிடிபடுவார்கள். இல்லையென்றால், பலர் சிறிது சிறிதாக சித்திரவதைக்குள்ளாகி உயிர் இழப்பார்கள். இறப்பவர்கள் பலரும் விலைமாது, தனியாக வாழும் பெண், சமூகத்தின் கீழ் நிலையில் உள்ளவர்கள் என்றே இருப்பது தற்செயலானது அல்ல.


 பெண்களின் பங்கு 51 சதவீதமாக உள்ளது. அதாவது கொல்லப்படும் சதவீதத்தில். ஆப்பிரிக்க அமெரிக்கர்களின் பங்கு, 24 சதவீதம்.  1980 களில் நிறைய சீரியல்கள் கொலைகார ர்கள் இருந்தார்கள். இன்று எவ்வளவு பேர் இருப்பார்கள்? அரசு ஒரு சதவீதம் என்கிறது. இத்துறையில் பணியாற்றிய டிடக்டிவ்வான மைக்கேல் ஆர்ட்ன்ஃபீல்டு, 4 ஆயிரம் பேர் இருப்பார்கள் என்கிறார். இவர் இத்துறை சார்ந்த நிறைய நூல்களை எழுதியுள்ளார்.


முதல் மற்றும் இரண்டாம் உலகப்போர் காலகட்டம்  நிறைய சீரியல் கொலைகார ர்களை உருவாக்கியுள்ளது ஆய்வில் தெரியவந்துள்ளது. இக்காலகட்டம் நிறைய குடும்பங்கள் உடைந்து பிரிந்துபோன பிரச்னைகளை கொண்டது. அதேசமயம் இன்று போலீசின் காவல், கேமிராக்கள், சட்டங்கள் என பலவும் இறுகியுள்ளன. இவையும் குற்றங்களை குறைத்துள்ளன என அமெரிக்க காவல்துறை கூறுகிறது.

நன்றி  - தி வீக் இதழ்














பிரபலமான இடுகைகள்