தூக்கம் வரலையா? இந்த டெக் ஐட்டங்களைப் பயன்படுத்துங்க!
பொதுவாக எங்கள் பக்கத்து வீட்டில் மனைவி, அதிகாலையில் எழாவிட்டால் தண்ணீர் பிடித்து வரும் கணவர் அடியே மூதேவி என்று அலறி மனைவியை எழுப்புவார். ரெஸ்ட் எடுத்தா தப்பாங்க என்பார் அவரின் மனைவி. வேலைதான் முக்கியம். ரெஸ்ட் அப்புறம் என்பார் மனைவி. இது நம்ம ஊரூ அலாரம் என நினைத்துக்கொள்ளுங்கள். விஷயம் இதுதான். இதெல்லாம் விட ஸ்மார்ட்டான ஆப், பொருட்கள் சந்தையில் கிடைக்கின்றன. அவற்றில் சில...
காஸ்பர் லைட்
108 பௌண்டுகள் விலை கொண்ட லைட். வாங்கலாமா வேண்டாமா என்பது நிச்சயம் உங்கள் முடிவுதான். இதில் காலையில் எழும்போது உற்சாகமாக இருப்பதற்கான விஷயங்கள் கிடையாது. அதாவது, அதனை செட் செய்யும் மனதில்தான் உள்ளது. எனவே லைட்டை டிம்மாக வைப்பதாக, பிரைட்டாக வைப்பதா என முடிவு செய்து ஆப் மூலம் செட் செய்யலாம்.
அரோமா ஸ்லீப் ஷீப்
தூக்கம் வர வைக்க இன்று செக்ஸ் மட்டும் உதவுவதில்லை. சிறிது நறுமணம் கொண்ட சுகந்தமான சூழலும் அவசியம். பல்வேறு வித எண்ணெய்களைக் கொண்ட இந்த பொருள், உங்கள் தூக்கத்திற்கு உத்தரவாதம் தருகிறது.
டோடோவ்
இந்த கருவியில் உள்ள நீலநிற ஒளி உங்கள் மூச்சின் வேகத்தை நிதானமாக குறைக்கிறது. இதனால் உங்களுக்கு நேர்த்தியான தூக்கம் கிடைக்கிறது.
ஸ்மார்ட் தலையணை
இதில் நீங்கள் படுத்து தூங்கும்போது உங்களுக்கு தேவையான ஒலிகளை ஒலிப்பது போல செட் செய்து கொள்ளலாம். இதன் விளைவாக நீங்கள் ஆழ்ந்து உறங்குவீர்கள்.அப்போது குறட்டை விட்டீர்களா என்பதை தலையணை பதிவு செய்து வைத்து அடுத்தநாள் உங்களுக்கு தகவல்களைத் தரும்.
நன்றி - பிபிசி