தடைசெய்யப்பட்ட மருந்து வகைகள்! - என்னென்ன?
giphy.com |
முதலில் நாம் பயன்படுத்த வேண்டாம் அரசு கூறிய தடுத்த மருந்துகள் இன்று எளிதாக சந்தையில் கிடைக்கின்றன. அவற்றில் சிலவற்றைப் பார்ப்போம்.
எம்டிஎம்ஏ
இந்த மருந்து ரத்தப்போக்கை நிறுத்துவதற்காக பயன்படுகிறது. இதனை ஜெர்மனி நிறுவனமான மேர்க் கண்டுபிடித்தது. இப்போது பெரும்பாலும் மருந்தாக அல்லது பார்ட்டிக்கான போதை வஸ்துவாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. 1913 ஆம் ஆண்டு காப்புரிமை பெற்ற இம்மருந்து, உண்மையாக ஆராய்ச்சி செய்யப்பட்டது 1927ஆம் ஆண்டுதான். இதனை ஆராய்ந்த மேக்ஸ் ஓபர்லின், கடும் நச்சுத்தன்மை கொண்ட பொருள் இது என்று கூறினார். உளவியல் ரீதியான சிகிச்சைக்கு இம்மருந்து பயன்படும் எனவே பயன்படுத்த அனுமதியுங்கள் என மருத்துவர்கள் அரசிடம் கோரினர். 1985 வரை அரசு இதனைப் பயன்படுத்த அனுமதிக்கவில்லை. 2017ஆம் ஆண்டு எஃப்டிஏ இதனை மருத்துவர்கள் பயன்படுத்த அனுமதித்துள்ளது.
ஹெராயின்
மார்பினுக்கு மாற்றாக அதிலிருந்து மக்களை வெளியே கொண்டு வரும் என ஹெராயினை நம்பினர். இதை உங்களால் நம்ப முடிகிறதா?
1874இல் சார்லஸ் ரோம்லி ரைட் என்ற வேதியியலாளர் ஹெராயினை முதன்முதலில் கண்டுபிடித்தார். ஆனால் ஹெராயின் மூலம் என்ன பயன் கிடைக்கும் என்று அவருக்குப் புரியவில்லை. குப்பை என்ற விட்டுவிட்டார். அதற்குப் பிறகு, பேயர் மருந்து கம்பெனி நிறுவனர் ஹென்ரிச் டிரெஸ்சர், இதனை வலி நிவாரணியாக பயன்படுத்தலாம் என்பதைக் கண்டுபிடித்தார்.
பேயர் கம்பெனி வர்த்தகரீதியாக வைத்த பெயர்தான் ஹெராயின். பின்னர் இது மக்களை அடிமையாக்கத் தொடங்கியது. எனவே பேயர் கம்பெனி, ஹெராயின் தயாரிப்பை நிறுத்திவிட்டது.
கோகைன்
கோலாவுக்கான பார்முலா இது என முன்னர் கூறுவார்கள். 1885 ஆம் ஆண்டு ஜான் பெம்மர்சன் என்ற மருந்தியலாளர் கண்டுபிடித்த வேதிப்பொருள் இது. அந்த காலத்தில் சர்வரோக நிவாரணியாக கோகைன் இருந்தது. பற்பசை, வலி நிவாரணி மருந்து, ஏன் ஆண்மை குறைவுக்கு கூட சிக்மண்ட் பிராய்டு இதனைப் பரிந்துரைத்துள்ளார். தொண்ணூறுகளுக்குப் பிறகு இதன் தீமைகள் பரவலாக வெளியே தெரியத் தொடங்க இதனை கண்டுபிடித்தவரே இதனை தடை செய்வது குறித்து பரிசீலித்தார். இன்று உலகம் முழுக்க இதற்கு மருத்துவப் பயன் தவிர்த்து பிறவற்றுக்கு தடை உள்ளது.
குளோரோபார்ம்
1831 ஆம் ஆண்டு மூன்று வெவ்வேறு ஆட்களால் உருவாக்கப்பட்ட வேதிப்பொருள குளோரோஃபார்ம். ஜெர்மனி, பிரான்ஸ், அமெரிக்கா என மூன்று நாடுகளிலும் இதனை தற்செயலாக மூன்று ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்தனர். ஜஸ்டஸ், யூஜென், சாமுவேல் ஆகியோர்தான் அந்த கண்டுபிடிப்பாளர்கள்.
சுந்தர் சி படங்களில் குளோரோபார்ம் இல்லாமல் சவுக்கு கட்டையில் அடித்தாலே மயக்கம் வந்துவிடும். ஆனால் மருத்துவமனையில் அப்படி செய்ய முடியாதே? ஈதருக்கு பதிலாக குளோரோஃபார்ம் மயக்க மருந்தாக வெகு காலம் பயன்பட்டது. பின்னர் இதன் பயன்பாடு புற்றுநோயை ஊக்கப்படுத்த அமெரிக்க அரசு இதனை தடை செய்துள்ளது.