புதிய புத்தகம் பேசுது! - தேசியவாதம் நல்லது!
தி கேஸ் ஃபார் நேஷனலிசம்
ரிச் லோரி
உலகெங்கும் தேசியவாதம் வளர்ந்து வருகிறது. இதை வைத்து பல்வேறு வலதுசாரி வாத கட்சிகள் தேர்தலில் வென்று வருகின்றன. அதற்கு காரணம் என்ற என்று ஆசிரியர் லோரி ஆராய்ந்திருக்கிறார். ஏறத்தாழ ட்ரம்பிசம் முதற்கொண்டு அனைத்து தேசியவாதங்களும் நல்லதுதான் என முடிவு செய்து எழுதியுள்ளார் ரிச் லோரி.
ஃபீமேல்ஸ்
ஆண்ட்ரூ லாங் சூ
அதிகம் விரும்பப்படுவதும், வெறுக்கப்படுவதும் பெண்கள்தான். அந்த பெண்களைப் பற்றியதுதான் இந்த புத்தகம். அனைவரும் பெண்கள்தான் என ஆசிரியர் சொல்லுகிறார். எதை வைத்து என்பதை புத்தகம் படித்து புரிந்துகொள்ளுங்கள். ஆபாச படங்களுக்கு எதிரான பெண்கள், பெண்ணியவாதிகள் என பல்வேறு துறை சார்ந்த பெண்களைப் பற்றியும் ஆசிரியர் கவலைப்பட்டு எழுதியிருக்கிறார்.
இன் டிஃபன்ஸ் ஆஃப் எலைட்டிசம்
ட்ரம்ப் 2016 ஆம் ஆண்டு பாப்புலிச சிந்தனைகளைச் சொல்லி அடித்தட்டு அமெரிக்கர்களின் நம்பிக்கையைப் பெற்றார். அதன்பிறகு பேசியே மக்களின் மனதில் நின்றார். அடுத்த தேர்தலிலும் அவர் வெல்ல வாய்ப்புகள் உள்ளன. எப்படி தன்னை தற்காத்துகொள்கிறது மேல்தட்டு வர்க்கம் என ஜோயல் ஸ்டெய்ன் விளக்கி எழுதிய நூல் இது. டைம் பத்திரிகையில் பல்வேறு பத்திகளை எழுதி பிரபலமானவர் இவர்.
நன்றி -தி வீக்