இடுகைகள்

ஜெர்மன் தூதர் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

தீவிரவாத அமைப்பைச் சந்திப்பது பெருமையா? -ஜெர்மன் தூதர்

படம்
யா ஆர்எஸ்எஸ், கோல்வால்கர், சாவர்கர் காலத்திலிருந்தே ஜெர்மனியின் நாஜிக் கொள்கையை புகழ்ந்து பேசிவருகிறவர்கள். அவர்கள் நாஜி படையினரைப் போலவே ஷாக்கா எனும் பயிற்சி முறைகளை செய்து வருகிறவர்கள். வாஜ்பாய் காலத்தில் அரசு அமைப்புகளுக்குள் ஊடுருவ முயன்று தோற்றவர்களுக்கு, 2014 ஆம் ஆண்டு மோடி ஆதரவு தர இன்று அனைத்து அமைப்புகளையும் உடைத்து நொறுக்கி அதன் நம்பகத்தன்மையை தூள் தூளாக்கி வருகின்றனர். அண்மையில் ஜூலை 17 அன்று ஜெர்மனியைச் சேர்ந்த இந்தியாவிற்கான தூதர், ஆர்எஸ்எஸ் தலைமையகத்தை சுற்றிப்பார்த்து அதனை பெருமையாக சமூக வலைத்தளத்தில் பகிர்ந்தார். இதுவே இணையத்தில் மிகவேகமாக பரவி வரும் செய்தி. ஆர்எஸ்எஸ், கலாசாரத் தளத்தில் முக்கியப் பங்காற்றும் அமைப்பு. கலை, அறிவியல், விவசாயம், தொழில்நுட்பம் என அனைத்து தளத்திலும் இதற்கு கிளை அமைப்புகள் உண்டு. ஜனநாயகத்திற்கு ஆதரவான அனைத்து அமைப்புகளிலும் கிளைபரப்பி வரும் ஆர்எஸ்எஸ் அமைப்பு அதன் ஜனநாயகத் தன்மையை வற்றச்ச்செய்து அதனை மற்றொரு ஆர்எஸ்எஸ் போல ஒற்றைத் தலைமைக்கு கட்டுப்பட்டதாக மாற்றி வருகிறார்கள். 2002 ஆம்ஆண்டு  குஜராத் கலவரத்தில் குற்றம் சாட்டப்பட்டத