இடுகைகள்

எரிச்சல் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

எரிச்சலோடு மன அழுத்ததோடு செய்யும் நாளிதழ் வேலை! - கடிதங்கள் - கதிரவன்

படம்
  29.12.2021 மயிலாப்பூர் அன்புள்ள நண்பர் கதிரவனுக்கு, வணக்கம். நலமா? நாளிதழ் வேலைகள் கடுமையாகிவிட்டன. ஒருங்கிணைப்பாளரைப் பார்த்தால் ரேபீஸ் வந்த நாயைப் போலவே தெரிகிறது. குரல் அப்படித்தான். சீப் டிசைனரே இன்று ஒருவித பதற்றத்தில் குரல் உயர்த்தி கூச்சல் போடத் தொடங்கிவிட்டார். இப்படி வேலை செய்தால் படிப்பவர்களுக்கு எப்படி சந்தோஷம் கிடைக்கும் என்று தெரியவில்லை. எனக்கு நெருக்கடி சூழல்தான் அமைகிறது.  2022ஆம் ஆண்டு தங்களுக்கு சிறப்பாக அமைய வாழ்த்துகிறேன். உங்கள் மனதில் நினைத்துள்ள ஆசைகள் நிறைவேற பிரார்த்திக்கிறேன். தாரகை - ரா.கி.ரங்கராஜன் எழுதிய நாவலைப் படித்தேன். 624 பக்கம். சில நாட்கள் இடைவெளியில் தான் படிக்க முடிந்தது. வேலைச்சுமை தான் காரணம்.  செரிமான பிரச்னை அடிக்கடி ஏற்படுகிறது. பழங்களை உணவில் அதிகம் சேர்க்க வேண்டும். உடல் நலிவுற்றால் மனதும் பலவீனமாகிவிடுகிறது.  புத்தாண்டில் டைரி வாங்கப் போவதில்லை என முடிவு செய்துள்ளேன். போனமுறை வாங்கியதில் அதிகம் எழுதவில்லை. இனியும் எழுதுவேனா என்று தெரியவில்லை. உங்கள் பெற்றோரைக் கேட்டதாக சொல்லுங்கள். நன்றி!  அன்பரசு pinterest

வீரர்களுக்கு உதவும் NH3!

படம்
giphy மிஸ்டர் ரோனி ஸ்மெல்லிங் சால்ட்ஸ் என்பதன் பயன் என்ன? இந்த ஸ்மெல்லிங் சால்ட் என்பது விளையாட்டில் கீழே விழுந்து நினைவு தப்பும் வீரர்களுக்கு சுயநினைவு வருவதற்காக அளிக்கப்படுகிறது. அம்மோனியா, ஆல்கஹால், நீர்சேர்மானம் கொண்டது பொருள் இது. இதனை நுகரும்போது, மூக்கு, நுரையீரல் ஆகியவற்றில் எரிச்சல் ஏற்படும். ஆனால் உடலுக்கு பெரியளவு ஆபத்து கிடையாது. சிலர் இதனை தங்களின் ஊக்கசக்தியாக கருதி நுகர்கிறார்கள். அமெரிக்க கால்பந்து வீர ர்கள் இம்முறையில் ஸ்மெல்லிங் சால்ட்டை பயன்படுத்துகின்றனர். 2006ஆம் ஆண்டு பிரிட்டிஷ் ஜர்னல் ஆஃப் ஸ்போர்ட்ஸ் மெடிசின் என்ற இதழ் இதுபற்றி ஆராய்ச்சி செய்தது. இதில் ஸ்மெல்லிங் சால்ட் எரிச்சல் ஏற்படுத்துவதன் மூலம் சுயநினைவை மனிதர்களுக்கு ஏற்படுத்துகிறது. அதைத்தாண்டிய வேறு பயன் இல்லை என்று கூறியது. நன்றி - பிபிசி