பொக்கிஷத்தை தேடிச்செல்லும் திருடர்களின் வம்சாவளி!
பொக்கிஷத்தை தேடிச்செல்லும் திருடர்களின் வம்சாவளி! தொங்கலா பண்டி அல்லரி நரேஷ், தன்யா அல்லரி நரேஷின் படங்கள் அனைத்துமே வேடிக்கையான வேறு உலகில் நடப்பவை. சின்ன பட்ஜெட் படம் என்பதால், கதை ஆந்திரப் பிரதேசத்தில் நடக்கும் பாடல்கள் மட்டுமே வெளிநாடுகளில் காட்சிபடுத்தப்படும். அதேதான் இந்தப்படத்திலும் கடைபிடித்திருக்கிறார்கள். கதையைப் பார்ப்போம். மூன்று திருட்டு நபர்களின் வாரிசுகள் ஒன்றாக கூடி தங்களது தாத்தா சேகரித்து வைத்த பொக்கிஷங்களை எப்படி கையகப்படுத்துகிறார்கள் என்பதுதான் கதை. பொக்கிஷங்களை தேடிச்செல்லும் கதை என்றால், புனைவாக அழகாக புதிர்களை வைத்து உருவாக்கியிருப்பார்கள் என நினைத்தீர்களா? அப்படியெல்லாம் கிடையாது. அனைத்துமே எளிமையாக நரேஷின் காமெடி டைமிங்கை வைத்து நடந்தேறுகிறது. நாயகன் ஒரு திருடன், அவன், அவனது மாமா, மாமா பிள்ளை என வம்சமே திருடர்கள். இதுபோலவே இன்னொரு பெண்கள் குழு இயங்குகிறது. அதற்கு கோவை சரளா தலைவி. அவரின் இரு தங்கைகளில் ஒருவரே நாயகி. நாயகியை இருமுறை கட்டிப்பிடித்தே காதல் வர வைக்கிறார் நாயகன். காதல் வந்தபிறகு எப்படி புர...