இடுகைகள்

மார்ச், 2021 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

பெண்களை தலைவராக கொண்டுள்ள நாடுகள் சிறப்பான வளர்ச்சியையும் பாதுகாப்பையும் பெற்றுள்ளன! - அனிதா பாட்டியா

படம்
                நேர்காணல் அனிதா பாட்டியா ஐ . நா அமைப்பின் துணைத்தலைவர் பெண்கள் தலைமைப் பொறுப்பு வகிப்பதற்கும் , அரசு பதவிகளில் அமர்வதற்கும் தடையாக உள்ள விஷயங்கள் என்ன ? நாங்கள் இதுபற்றி செய்த ஆய்வில் 80 சதவீத நாடாளுமன்ற உறுப்பினர்கள் ( பெண்கள் ), உளவியல் ரீதியான தாக்குதல்களை சந்தித்தே அந்த இடங்களை அடைந்திருந்தது தெரிய வந்தது மேலும் அலுவலக ரீதியாக முக்கியமான இடங்களுக்கு முன்னேற பல்வேறு உடல்ரீதியான உள்ள ரீதியான வன்முறைகளை பெண்கள் சந்திக்க வேண்டியுள்ளது . நேரடியாக சொல்வது என்றால் , பெண்கள் அரசியலில் ஈடுபடுவதை பல்வேறு நாட்டு அரசுகள் விரும்பவில்லை என்பதே உண்மை . பெண்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கும் தேர்தல் முறை அவர்களுக்கு சரியான வாய்ப்புகளை வழங்குமா ? இந்த முறையில் பெண்களுக்கு வாய்ப்பு கிடைக்கும் என்பது உண்மைதான் . ஆண் வேட்பாளர்களின் அதே எண்ணிக்கையில் பெண்களுக்கும் கட்சிகள் வாய்ப்பளிக்க வேண்டும் . மேலும் , அவர்கள் அங்கு வெற்றி பெறும் வாய்ப்பு என்பதைக் கருத்தில் கொண்டால் பெண்களை தேர்ந்தெடுக்க மாட்டார்கள் . எனவே , பெண்கள் பற்றி முன்முடிவுகளை எடுக்காமல் அவர்களுக்க

பெண்கள் மீதான அத்துமீறலுக்கு உதவுகிறதா ஹோலி பண்டிகை?

படம்
            ஹோலி கொண்டாட்டம் வேண்டாம் ! - அலறும் பெண்கள் ஹோலி கொண்டாடுவது சந்தோஷமான அனுபவம்தான் . ஆனால் இந்தியாவில் பெரும்பாலும் நடைபெறும் வண்ணப்பொடி திருவிழா , தீராத ஏக்கங்களை தீர்த்துக்கொள்ளும் விழாவாக மாறியுள்ளது . இதில் இப்போது கலந்துகொள்ளும் பெண்கள் விலகத் தொடங்கியுள்ளனர் . ஏன் அதில் என்ன பிரச்னை என்கிறீர்களா ? விந்தணுக்களை நிரம்பிய பலூன்களை பெண்கள் மீது வீசுவது , வசதியாக கிடைத்த வாய்ப்பு சிறு பெண்களை அந்தரங்க இடங்களில் தடவுவது , தொடுவது என எல்லை மீறும் அனுபவங்கள் நடந்து வருகின்றன . பொதுவாக இதனைப பற்றி ட்விட்டரில் பதிவு செய்பவர்களை இந்து எதிரிகள் என தேச பக்தர்கள் முத்திரை குத்தினாலும் இந்த சம்பவங்களை பற்றி மூச்சு கூட விட மாட்டார்கள் . இதில் பாதிக்கப்படும் பெண்களின் தவறு என்ன இருக்கிறது ? அவர்கள் எதற்கு வெட்கப்படவேண்டும் ? டெல்லி பல்கலைக்கழகத்தில் படிக்கும் மாணவிகள் ஹோலி தொடங்குவதற்கு ஒரு வாரத்திற்கு முன்னரே ஊருக்கு செல்லத் தொடங்கிவிடுவார்கள் . எதற்காக என்கிறீர்களா ? ஹோலி விழா அன்று பாலியல் ரீதியான அத்துமீறல்களுக்கு சட்டப்பூர்வ அனுமதி இருப்பதால்தான் .

பெண்கள் குழந்தை பெற்றுக்கொண்டு வீட்டு வேலைகளை செய்யவேண்டும் என்பது மூடநம்பிக்கை! பேராசிரியர் லிண்டா ஸ்காட்

படம்
              நேர்காணல் பேராசிரியர் லிண்டா ஸ்காட்   பொருளாதார வல்லுநர்களில் பெண்களின் எண்ணிக்கை குறைவாக இருக்க காரணம் என்ன ? காரணம் , ஆண்களின் மேலாதிக்கம்தான் . பெண்கள் இத்துறையில் வளர்ந்து வந்தாலும் கூட அவர்களை கிண்டல் செய்து விரைவில் வெளியேற்றிவிடுகிறார்கள் . அலுவலகம் வீடு இரண்டையும் சமாளிப்பது என்று கூறப்படுவதை எப்படி பார்க்கிறீர்கள் ? நீங்கள் கூறும் வார்த்தை முழுக்க பெண்களை நோக்கியே கேட்கப்படுகிறது . இதில் நியாயமில்லை . ஆண்களுக்கும் , பெண்களுக்கு்ம் சமத்துவமாக வேலை வழங்கப்படாத நிலையில் இப்படி கேள்வி கேட்கப்படுவது தவறு . பெண்களுக்கு பதவி உயர்வு வழங்கப்படாதது , சம்பளம் உயர்த்தப்படாதபோது நீ்ங்கள் கூறிய வார்த்தை ஒரு மன்னிப்பாக கூறப்படுகிறது . குழந்தைகளைப் பெற்று வளர்க்கும் பெண்களை நோக்கியே இதுபோன்ற வார்த்தைகள் வீசப்ப்படுகின்றன . இந்தியாவில் பெண்களுடைய நிலைமை பற்றி தங்களுடைய கருத்து ? பிற நாடுகளை விட இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியில் பெண்களின் பங்கு குறைவு . பெண்கள் வாழ்வதற்கு கடினமான நாடுகளில் இந்தியாவும் ஒன்று . பெண்கள் கடத்தப்படுவது , பாலிய

தலைநகரான டெல்லியை சட்டங்களால் குதறும் மத்திய அரசு! - மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு ஊதாசீனப்படுத்தப்படும் வரலாற்று களங்கம்!

படம்
          ஆம் ஆத்மி - அரவிந்த் கெஜ்ரிவால்     மத்திய அரசு, மெல்ல தனது கட்சி ஆட்சியில் இல்லாத அனைத்து மாநிலங்களிலும் ஆளுநர்கள் மூலம் ஆட்சி நடத்துவதற்கான முயற்சியைத் தொடங்கியுள்ளது. இதன் காரணமாக பல்வேறு மாநிலங்களில் மாநில உரிமைகள் மெல்ல பறிபோகத்தொடங்கியுள்ளன. இதில் பாஜக ஆட்சியைப் பிடித்துள்ள மாநிலங்கள் கூட விதிவிலக்கின்றி அனைத்து சமாச்சாரங்களும் டெல்லி மூலமே தீர்மானிக்கப்பட்டு வருகின்றன. இதனால் ஒரே பிரதமர் ஒரே நாடு என்று கூறும்படி பிற அதிகாரிகள், ஏன் மக்கள் தேர்ந்தெடுக்கப்படும் முதல்வர் கூட செல்லாக்காசு நிலைக்கு மாறி வருகிறார்கள்.   இதற்கு சாட்சிதான் அண்மையில் டெல்லியில் மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய சட்டம் இதன் காரணமாக அங்கு மக்களால் தேர்ந்தெடுக்ககப்பட்டு ஆறு ஆண்டுகளாக ஆட்சி செய்து வரும் ஆம் ஆத்மி அரசுக்கு இனி எந்த அதிகாரங்களும் இருக்காது. வகுப்பறையில் இருக்கும்போது பாத்ரூம் செல்ல ஆசிரியரிடம் அனுமதி கேட்பது போலவே சாலை, கல்வி, மருத்துவம் என அனைத்து விஷயங்களூக்கும் ஆளுநரின் தலையசைப்பிற்கு யூனியன் பிரதேச முதல்வர் காத்திருக்க வேண்டி வரும்.  அதன் பொருள், இனிமேல் அங்கு தேர்தல் தேவையில்லை

மருத்துவத்தை மக்களுக்காக மாற்ற முயன்றதற்காக பழிவாங்கப்படும் சிறந்த மருத்துவன்! - டாக்டர் ரொமான்டிக் - முதல் பகுதி - கொரியா

படம்
      டாக்டர் ரொமான்டிக்           டாக்டர் ரொமான்டிக்   Genre: Medical, Melodrama, Romance Written by: Kang Eun-kyung Directed by: Yoo In-shik மருத்துவம் மக்களுக்கானதா , மக்களில் செல்வந்தர்களாக உள்ளவர்களுக்காக என்பதைப் பேசும் படைப்பு . டாக்டர் கிம் டீச்சர் முதல் காட்சியில் ஏழை ஒருவருக்கு மருத்துவம் தேவைப்பட்டும் அவருக்கு சிகிச்சை வழங்கப்படவிலை . காரணம் , அங்கு வந்துள்ள விஐபி ஒருவருக்கு உடனடி அறுவை சிகிச்சை செய்யப்பட்டு வருவதால் , அதைப்பற்றியே அனைவரும் கவனித்துக்கொண்டிருக்கின்றனர் . இதனால் சிகிச்சை கிடைக்காத மனிதர் இறந்துபோய்விடுகிறார் . அவரது அம்மா , இயலாமையில் அழ , கோபம் கொள்ளும் அவரது மகன் , அடுத்த நாள் பேஸ்பால் மட்டையை எடுத்துக்கொண்டு வந்து மருத்துவமனையை அடித்து நொறுக்குகிறான் . அப்போது அவனை தடுக்கும் மருத்துவர் , அவனுக்கு மயக்க மருந்து கொடுத்து , உன்னை அவமானப்படுத்தியவர்களை திறமையால் தோற்கடி என்று செய்தி சொல்லிவிட்டு காணாமல் போகிறார் . அந்த சிறுவன் அந்த மருத்துவர் சொன்ன வார்த்தைகளை மறக்கவே இல்லை . நாட்டிலேயே அதிக மதிப்பெண் பெற்று மருத்துவராகிறான் . குறிப்

பொதுமுடக்க காலத்தில் வாசிக்கப்பட்ட முக்கியமான நூல்கள்! - வாசிக்கலாம் வாங்க

படம்
              வேகம் பிடிக்கும் வாசிப்பு கொரானோ காலத்தில் மக்களின் வாசிப்பு நேரம் 9 மணி நேரம் முதல் பதினாறு மணி நேரம் வரை கூடியுள்ளது என நீல்சன் நிறுவன ஆய்வில் தெரிய வந்துள்ளது . பொதுமுடக்கம் காரணமாக வீட்டிலேயே முடங்கி மக்களின் வாழ்க்கையை கொஞ்சமேனும் நிம்மதியாக மாற்றியது புத்தகங்கள்தான் . இவைதான் , மக்களுக்கு உண்மையைத் தேடும் பயணத்திற்கு துணையாக நின்றன . அரசியல் சூழ்நிலை தடுமாற்றம் , நோய்ப்பரவல் , மரணம் , பொருளாதார பிரச்னைகள் என நாடு கடும் போராட்டத்தை சந்தித்து மீண்டு வந்துள்ளது . இப்போது இரண்டாவது அலை தொடங்கியுள்ளது . மேற்கு நாடுகளிலும் மூன்றாவது அலையில் மக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர் . வயது வந்தோருக்கான கட்டுரைகளின் மூலமாக கிடைக்கநும் வருமானம் அமேஸானில் 22. 8 சதவீதமாக அதிகரித்துள்ளது . சுய முன்னேற்றம் , வாழ்க்கை வரலாறு , ஆன்மிகம் , வரலாறு ஆகிய துறைகளும் மக்களால் அதிகம் வாசிக்கப்பட்டுள்ளன . இப்படி வாசிக்கப்பட்ட நூல்களில் சிலவற்றைப் பார்ப்போம் . அன்ஃபினிஸ்டு எ மெமோர் இப்போது அதிகம் விற்றுவரும் சுயசரிதையாகவும் நியூயார்க் டைம்ஸ் விற்பனைப்பட்டிய

உண்மையான காதலைத் தேடும் பயணம்! - காதலை மூழ்கடிக்குமா காமம்?

படம்
        கிராஜூவேட்       கிராஜூவேட்   Director: Mike Nichols Produced by: Lawrence Turman Screenplay by: Calder Willingham, Buck Henry படத்தின் லைன் சிம்பிள்தான் . பென் , தனது கல்லூரிப்படிப்பை முடித்துவிட்டு வீடு திரும்புகிறான் . அடுத்து என்ன செய்வது என்று குழப்பமாக உள்ளது . அவர்களது வீட்டில் அவனுக்கு திருமணம் செய்து வைத்துவிடலாம் என்று சொல்லி நண்பரின் மகள் எலைனைப் பரிந்துரைக்கிறார்கள் . ஆனால் எலைனின் அம்மாவுக்கு வீடு திரும்பிய பென்னின் உடல் மீது மட்டுமே கண் . முதலில் அ்வனை வீட்டுக்கு கூட்டிப்போய் மெல்ல மசிய வைக்கப் பார்க்கிறாள் . ஆனால் அது வேலைக்கு ஆகவில்லை . பென் மிரண்டு போய் திரும்பி பார்க்காமல் வீடு வந்து விடுகிறான் . ஆனால் அடுத்தடுத்த ஹோட்டல் சந்திப்புகளில் தினசரி நீச்சல் பயில்வதைப் போல காமமும் கை வந்த கலையாகிவிடுகிறது . ஒரு பெண்ணுடனே தொடர்ச்சியாக காமம் என்றால் போரடிக்குமே ? பென்னுக்கும் போரடிக்கிறது . அவனை , நண்பரின் மனைவி பயன்படுத்திக்கொள்வதாக நினைக்கிறான் . அப்போது , பார்த்து பல்கலைக்கழகத்தில் படிக்கும் நண்பரின் மகள் எலைன் வருகிறாள் . அவளுக்கு பென்னைப்

எளிதாக கிடைக்கும் பிளாஸ்டிக்!

படம்
                பிளாஸ்டிக் . இன்று சூழலியலாளர்கள் கனவிலும் கூட எதிர்த்து வரும் பொருள் . ஆனால் பிளாஸ்டிக் , புழக்கத்திற்கு வந்தபிறகுதான் மக்களுக்குத் தேவையான தினசரி பொருட்களின் விலை குறைந்தது . இன்று எந்த பொருளையும் எளிதாக எடை குறைந்த மலிவான விலையில் பிளாஸ்டிக்கால் உருவாக்க முடியும் . கச்சா எண்ணெய் , எரிவாயு ஆகியவற்றிலிருந்து பிளாஸ்டிக் பெறப்படுகிறது . கார்பன் கொண்டுள்ள மூலக்கூறுகளை பாலிமர் என்று கூறலாம் . பெரும்பாலான தொழிற்சாலை தயாரிப்பு பிளாஸ்டிக்குகளில் மோனோமர்கள் பயன்படுகின்றன . பிளாஸ்டிக்குகளை மறுசுழற்சி செய்வது என்பது அதனை அதிக வெப்பநிலையில் உருக்கி வேறு ஒரு பொருளாக மாற்றுவதுதான் . தெர்மோபிளாஸ்டிக்குக்குகளை எளிதில் உருக்கினாலும் தெர்மோசெட் வகை பிளாஸ்டிக்குகளை இப்படி மாற்றி வேறு பொருட்களாக மாற்றுவது கடினம் . கச்சா எண்ணெய வளம் என்பது தீர்ந்துபோக கூடியது என்பதால் , கரும்பு , சோளத்திலிருந்து பயோபிளாஸ்டிக் தயாரிக்கும ஆராய்ச்சிகள் நடைபெற்று வருகின்றன . இதன் விளைவாக பிளாஸ்டிக்கை 3 டி பிரிண்டில் முறையில் உறுப்புகளை உருவாக்குவதற்கும் பயன்படுத்த முடியும் . இதிலுள்ள வக

இன்ஸ்டன்டாக இயர்பட்ஸ் மூலமே மொழிபெயர்க்க முடியும்! மார்ஸ் இயர்பட்ஸ்

படம்
              மொழிபெயர்ப்பு இப்போது ஈஸி மொழிபெயர்ப்பு செய்வது எப்போதும் பிரச்னைக்குரிய ஒன்றுதான் . இன்றுவரையிலும் சரியான மொழிபெயர்ப்பாளர் கிடைத்து நூல்கள் தரமாக வெளிவருவது என்பது கடினமாகவே உள்ளது . முன்னணி பதிப்பகங்களில் உள்ள மொழிபெயர்ப்பாளர்கள் கூட வேலைப்பளு காரணமாக அப்படியே கூகுள் டிரான்ஸ்லேட் வசதியைப் பயன்படுத்தி வேகமாக புத்தகங்களை எழுதி வருகின்றனர் . இதனால் என்ன பிரச்னை என்பீர்கள் . நூலை தமிழில் படிப்பதற்கு அதனை அர்த்தம கூட குறைய புரிந்தாலும் சரி ஆங்கிலத்திலேயே புரிந்துகொள்ளலாம் என பல வாசகர்கள் நினைக்கத் தொடங்கியுள்ளனர் . இதற்கு விடிவு இல்லையா என்று சிலர் கேட்கலாம் . 2018 ஆம் ஆண்டு எலக்ட்ரானிக்ஸ் கண்காட்சி விழாவில் மார்ஸ் இயர்பட்ஸ் விற்பனைக்கு வந்தது . நாவர் , லைன் கார்ப்பரேஷன் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளன . குளோவா ஏஐ முலம் இயர்பட்ஸ் செயல்படுகிறது . இதனை குரல் மூலம் கட்டுப்படுத்தி இயக்ககலாம் ஏறத்தாழ அலெக்ஸா , சிரி போலத்தான் . சிறப்பு என்னவென்றால் , இதனை காதில் பொருத்திக்கொண்டே மொழி தெரியாத இருவர் பேசலாம் . சில நொடிகளில் மொழிபெயர்ப்பு நடந்துவிடுவதால்

உண்மைக் காதலை பெண்ணின் உடலில் தேடும் விந்து முந்துதல் பிரச்னை கொண்ட இளைஞன்! - ஹே பிரபு - 2 தமிழ்

படம்
            ஹே பிரபு இந்தியில் எடுக்கப்பட்ட வெப் சீரிஸ்தான் . முதல் பாகத்தைப் பற்றி முன்னமே எழுதியிருக்கிறோம் . அதிக நாட்கள் இடைவெளிக்குப் பிறகு அடுத்த சீசன் வந்திருக்கிறது . அதிக நாட்கள் இடைவெளி இருந்தாலும் அதனை சரிக்கட்டும்படி நிறைய 18 பிளஸ் ஐட்டங்களை சேர்த்திருக்கிறார்கள் . தொடரின் அட்டகாச அம்சம் . மிக இயல்பான தமிழ் கெட்டவார்த்தை வசனங்கள்தான் . இதனை இங்கு எக்சாம்பிள் காட்டினால் சரியாக இருக்காது . எம்எக்ஸ் பிளேயரில் பார்த்துவிடுங்கள் . இந்த சீரிசில் தருண் பிரபுக்கு முக்கியமான பிரச்னைகள் , காதல் , செக்ஸ் , குடும்ப பொறுப்பு , அவனது ட்விட்டர் எதிரி சார்மினாருடன் மோதல் என கலந்துகட்டிய அனுபவம் உள்ளது . கூடுதலாக காமெடிக்கென அவனது நண்பன் சிக்கா அறிமுகமாகிறான் . சிக்கா , ஷாயாலி எனும் ஆடு , அவனது பீம்பாய் வேலையாள் என கலகலப்பு சிலசமயம் கதையோடும் , பெரும்பாலான சமயம் தனியாகவும் பயணிக்கிறது . யூட்யூபில் சூர மொக்ககை வீடியோக்களை தயாரிப்பதுதான் சிக்காவின் முழுநேர , பகுதிநேர , ஏன் ஹாபி கூட . இதனால் அவருக்கு ஏற்படும் காமெடி அனுபவங்கள்தான் காமெடி . 18 பிளஸ் வெப்சீரிஸ் என