பெண்கள் குழந்தை பெற்றுக்கொண்டு வீட்டு வேலைகளை செய்யவேண்டும் என்பது மூடநம்பிக்கை! பேராசிரியர் லிண்டா ஸ்காட்

 

 

 

 

 

Interview: Professor Linda Scott, Consulting Senior Fellow ...

 

 

நேர்காணல்


பேராசிரியர் லிண்டா ஸ்காட்

 

Professor Linda Scott · OverDrive: ebooks, audiobooks, and ...

பொருளாதார வல்லுநர்களில் பெண்களின் எண்ணிக்கை குறைவாக இருக்க காரணம் என்ன?


காரணம், ஆண்களின் மேலாதிக்கம்தான். பெண்கள் இத்துறையில் வளர்ந்து வந்தாலும் கூட அவர்களை கிண்டல் செய்து விரைவில் வெளியேற்றிவிடுகிறார்கள்.


அலுவலகம் வீடு இரண்டையும் சமாளிப்பது என்று கூறப்படுவதை எப்படி பார்க்கிறீர்கள்?


நீங்கள் கூறும் வார்த்தை முழுக்க பெண்களை நோக்கியே கேட்கப்படுகிறது. இதில் நியாயமில்லை. ஆண்களுக்கும், பெண்களுக்கு்ம் சமத்துவமாக வேலை வழங்கப்படாத நிலையில் இப்படி கேள்வி கேட்கப்படுவது தவறு. பெண்களுக்கு பதவி உயர்வு வழங்கப்படாதது, சம்பளம் உயர்த்தப்படாதபோது நீ்ங்கள் கூறிய வார்த்தை ஒரு மன்னிப்பாக கூறப்படுகிறது. குழந்தைகளைப் பெற்று வளர்க்கும் பெண்களை நோக்கியே இதுபோன்ற வார்த்தைகள் வீசப்ப்படுகின்றன.


இந்தியாவில் பெண்களுடைய நிலைமை பற்றி தங்களுடைய கருத்து?


பிற நாடுகளை விட இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியில் பெண்களின் பங்கு குறைவு. பெண்கள் வாழ்வதற்கு கடினமான நாடுகளில் இந்தியாவும் ஒன்று. பெண்கள் கடத்தப்படுவது, பாலியல் வல்லுறவு, தாக்குதல் ஆகியவை காரணமாக பெண்களின் பங்களிப்பு இந்தியாவின் பொருளாரத்தில் குறைவாக உள்ளது.எனவே, இந்தியா நினைத்த உயரத்தை இன்னும் எட்ட முடியவில்லை.


வீட்டிலேயே வேலைக்கு செல்லாமல் இருக்கும் பெண்களைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?


அவர்களுக்கு பொருளாதார ரீதியாக பாதுகாப்பு இல்லை. அப்படி வீட்டிலேயே இருந்து குழந்தை பெற்றுக்கொண்டு வேலைகளை ஏற்று செய்யவேண்டும் எனில், அவர்களுக்கு சமூகரீதியான பாதுகாப்பு அவசியம். அது கிடைக்காதபோது, அவர்களுக்கு வீட்டுப் பொறுப்புகளை ஏற்று செய்ததற்கான அங்கீகாரமும் பயனும் கிடைக்காது. பெண்கள் வீட்டு வேலைகளை செய்தால் போதும். குழந்தைளை மட்டும் பெற்று வளர்த்தால் போதும் என நினைப்பது மூடநம்பிக்கை.


பெண்களின் உழைப்பு எப்போதும் குறைந்த மதிப்பு கொண்டதாகவே பார்க்கப்படுவது ஏன்?


அதற்கு காரணம், அந்த வேலைகளை செய்யும் பெண்களும் கூட அப்படியேதான் நினைக்கிறார்கள். பெண்கள் எப்போதும் அடிமையாகவே வைக்கப்பட்டிருந்தார்கள். அவர்களுக்கு பணம், பொருளாதாரம், சுதந்திரம் என எதுவுமே கிடைக்கவில்லை.நீங்ங்கள் அடிமையாக பிடித்து வைதிருப்பவர்களுக்கு என்ன கொடுப்பீர்கள். அதேதான் வரலாறு முழுவதும் பெண்களுக்கு கிடைத்தது. வன்முறை, கொடுமைகள், சுரண்டல் ஆகியவைதான் நடந்த்து.



டைம்ஸ் ஆப் இந்தியா

சர்மிளா கணேசன் ராம்





கருத்துகள்