அறிவியலை மாணவர்களுக்கு விளக்கும் 50 கட்டுரைகள்!- துளிர் அறிவியல் கட்டுரைகள்

 

 

 

 Space Shuttle, Rocket, Lift-Off, Liftoff, Nasa

 

 

துளிர் 

அறிவியல் கட்டுரைகள்

ப. 152 விலை ரூ. 150


இந்த நூலில் துளிர் இதழில் வெளியான 50 முக்கியமான கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன. இவை அனைத்துமே பொதுமுடக்கம் காரணமாக பிடிஎப் வடிவில் வெளியான துளிர் இதழ்களி்ல் வெளியானவை. 

படிக்க ஏதுவான கட்டுரைகள் என்பதை விட நிறைய விஷயங்களைக் கொண்டுள்ள கட்டுரைகள் என்ற நோக்கில் படித்தால் ஏமாற்றங்களை சந்திக்காமல் இருக்கலாம். 

சோப்புகளை எப்படி வீட்டில் தயாரிப்பது என்ற கட்டுரை சிறப்பாக இருந்தது. எலும்புன்னா எனக்கு பிடிக்குமே என்ற கழுகு பற்றிய கட்டுரை, நோபல் பரிசு 2020, மணற்குளி நண்டுகள் ஆகியவற்றை படிக்க சிறப்பாக இருந்தன. 

 இந்த நூலில் இயற்பியல் வானியல், உயிரியல், வேதியியல், இயற்பியல் என பல்வேறு பிரிவுகள் பேசப்படுகின்றன. கட்டுரைகள் வழியாக அறிவியல் சார்ந்த அணுகுமுறையை எளிதாக புரிந்துகொள்ள முடிகிறது. தமிழ் படிக்கத் தெரிந்த குழந்தைகள் இந்நூலை படிக்க நினைத்தால் இதிலுள்ள தகவல்கள் அவர்களை ஆச்சரியப்படுத்தும் என்பது உறுதி. 


கோமாளிமேடை டீம்


நன்றி 

பாலபாரதி

பிரபாகர், தமிழ்நாடு அறிவியல் இயக்கம்

 

 

கருத்துகள்