சமூக வலைத்தளங்களில் பாலியல் கல்வி நடத்தும் புதிய தலைமுறை மருத்துவர்கள்!

 

 

 

Body, Dark, Feet, Hands, Legs, Model, Nude, Shadow

 

 

ஆன்லைனில் செக்ஸ் கல்வி நடத்துகிறார்கள்!


இன்றைய புதிய தலைமுறை மருத்துவர்கள் சமூக வலைத்தளங்களில் பாலியல் கல்வியை விழிப்புணர்வுக்காக பிறருக்கும் பரப்புரை செய்கிறார்கள். இவர்களுக்கு ஏராளமான பார்வையாளர்களும் கிடைத்துள்ளனர்.


இந்தியாவில் ஆண்களையும் பெண்களையும் பிரித்து வைத்து கல்லூரி நடத்த ஆசைப்படுபவர்களை அதிகம். இந்த சூழலில் வளரும் ஆணோ, பெண்ணோ இருவருக்குமே தங்கள் உடல் பற்றியும், அதன் ஆரோக்கியம் பற்றியும் பலவித கேள்விகள், ஐயங்கள் இருக்கும். ஆனால் இதைப்பற்றி வெளிப்படையாக யாரிடம் கூறுவது? ஆலோசனை பெறுவது என்பதில் தயக்கம் நிலவுகிறது என்பதே உண்மை. யோனியில் கசியும் திரவத்தின் நிறம் மாறுபடுவது பற்றிய கேள்விகளுக்கு கூட இங்கு பெண்ணின் உடல் சார்ந்தும், அவள் நடத்தை சார்ந்தும் விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன. இப்படி கேள்வியை யாரிடம் கேட்பது எனத் தவிப்பவர்களுக்கு ஆதரவாக இரும்பில் முதுகெலும்பு கொண்ட புதிய தலைமுறை மருத்துவர்கள் சமூக வலைத்தளத்தில் இயங்கி வருகிறார்கள். இவர்கள், தாங்கள் இயங்கும் சமூக வலைத்தளத்தில் கூட பாலியல் சார்ந்த விழிப்புணர்வுக்கு பலமுறை தடை செய்யப்பட்டவர்கள்தான். ஆனாலும் அதையெல்லாம் சமாளித்துத்தான் ஆகவேண்டும் என்ற முதிர்ச்சியை தங்களிடம் கேள்வி கேட்பவர்கள் பெறும் திருப்தி மூலம் பெற்றிருக்கிறார்கள்.


இந்த மருத்துவர்கள் தங்கள் பக்கங்களில் பாலியல் கல்வியை குறு வீடியோக்கள், ஜிஃப் படங்கள், பல்வேறு படங்கள் மூலமாக விளக்குகிறார்கள். இப்படி செயல்படுபவர்களை செக்ஸ்பர்ட் என்று குறிப்பிடலாம்.


இன்ஸ்டாகிராமில் டாக்டர் கியூடெரஸ் என்ற பெயரில் செயல்பட்டு வரும் மருத்துவர் தனய்யா நரேந்திரா இப்படிப்பட்டவர்தான். என்னைப் பொறுத்தவரை பெண்களின் கருப்பையை பலரும் அருவெருப்புடன் பார்க்கிறார்கள். குழந்தையை பெற்றெடுக்க உதவும் அதனை முக்கியமான உறுப்பாக பார்க்கிறேன். அதனால்தான் நான் அதனை எனது லோகோவாக தேர்ந்தெடுத்தேன். நான் பாலியல் பற்றிய வீடியோக்களை உருவாக்கி பதிவிட்டபோது, தளத்தில் செயற்கை நுண்ணறிவு தளத்தின் விதிக்கு புறம்பானது என்று கூட தடை செய்யப்பட்டுள்ளது. ஆனால் அதையும் தாண்டித்தான் இப்பணியை செய்து வருகிறோம் என்கிறார்.


இதுபோன்ற தளங்களில் பெண்கள் மட்டுமல்ல, ஆண்களும் கூட தங்கள் பாலியல் நிலை பற்றிய கேள்விகளைக் கேட்டு தெளிவு பெற்று வருகிறார்கள். ஏன் பாலியல் கல்வி தேவை என்றால் பலரும் வீடியோ உலகில் இருந்தாலும் கூட பெண்களின் உடலைப் பற்றிய விண்ணை முட்டும் கற்பனையைக் கொண்டுள்ளனர். பெண்களின் கன்னித்திரை, ஆண்களின் குறி அளவு பற்றிய ஏராளமான வதந்திகள் நிலவி வருகின்றன. அவற்றையும் இதுபோன்ற சமூக வலைத்தள மருத்துவர்களின் பதிவுகள் உடைத்தெறிகின்றன. ஆண்களையும், பெண்களையும் குற்ற உணர்ச்சிக்கு உள்ளாக்காமல் தங்கள் உடலை நேசிக்க வைக்கின்றனவாக இவர்களின் ஆலோசனைகள் உள்ளன.


அண்ணாநகரில் செயல்பட்டு வரும் மருத்துவர் சுரக்‌ஷித் பட்டினா வேறொரு முக்கிய்மான கருத்தையும் கூறினார். எனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பார்வையாளர்கள் பெரும்பாலும் கேட்கும் கேள்வியாக உடலுறவின் போது ஏற்படும் வலியைப் பற்றியதாக உள்ளது என்றார்.


டைம்ஸ் ஆப் இந்தியா


ஹர்ஷிதா குமாயா



கருத்துகள்