நான் எனது கடமையைத்தான் செய்தேன்! - பெரு ஊழல்களை வெளிக்கொண்டு வந்த வழக்குரைஞர்

 






ஜோஸ் டெமிங்கோ பெரஸ்


இவர்தான் இப்போதைக்கு பெரு நாட்டில் அதிகம் பேசப்படும் நபர். பெரு நாட்டின் முன்னாள் அதிபரை ஊழல் குற்றச்சாட்டில் சிறைக்கு தள்ளியவர் இவர்தான்.  இந்த குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டால், மூன்று ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டிய சூழல் உருவாகும். இதனால் முன்னாள் அதிபர் ஆலன் கார்சியா, அந்த அவமானத்திற்கு பயந்து தற்கொலைக்கடிதம் எழுதிவிட்டு தற்கொலை செய்துகொண்டுவிட்டார். 

ஒரு வழக்குரைஞர், வலிமை வாய்ந்த முன்னாள் அதிபரை எப்படி எதிர்க்க  முடிந்தது  என்பது பலருக்கும் ஆச்சரியம். ஆனால் அவரது நண்பர்கள் அவர் வழக்குரைஞராக பணியாற்றி போதிலிருந்து அப்படித்தான். நேர்மையாக இருக்கவேண்டுமென நினைப்பார். பிறரிடமும் அதைத்தான் அவர் எதிர்பார்த்தார். அன்றிலிருந்து இன்றுவரை மாறாமல் இருப்பது அவர்களில் கண்களில் தெரியாத பயம்தான் என்றனர். 

பிரேசிலின் ஓடேபிரச்சிட் என்ற நிறுவனம்தான் ஒப்பந்தங்களைப் பெற பணத்தை வாரி இறைத்திருக்கிறது. இந்த நிறுவனத்திடன் பணம் பெற்றுக்கொண்டு அரசு ஒப்பந்தங்களை கொடுத்துள்ளதாகதான் கார்சியா மீது வழக்கு. தொடக்கத்தில் நான் எந்த பணத்தையும் வாங்கவில்லை என்று கூறியவர், இதில் நிறைய பேர் மாட்டுவார்கள் என்று பயத்துடன் கூறினார். பின்னாளில் இவருக்கு எதிராக வழக்கு போட்டு பெரஸ் கூட ஓடேபிரச்சிட் நிறுவனத்திடம் காசு வாங்கினார் என அபாண்ட குற்றச்சாட்டுகளை சுமத்தினர். ஆனாலும் எதுவும் அவரது பயத்தைப் போக்கவில்லை. மரணம் வென்றுவிட்டது. 

முன்னாள் அதிபர் அலெஜாண்ட்ரோ டோலிடோ, தற்போதைய அதிபர் பெட்ரோ பாப்லோ ஆகியோரும் ஊழல் பட்டியலில் உள்ளனர். பெட்ரோ பாப்லோ வீட்டு சிறையில் வைக்கப்பட்டுள்ளார். அர்ஜென்டினா முதல் மெக்சிகோ வரையில் 800 மில்லியன் டாலர்களை ஓடேபிரச்சிட் நிறுவனம் லஞ்சமாக வழங்கியுள்ளது. 2016ஆம் ஆண்டு பெருவில் நடைபெற்ற ஊழல் வழக்கில் 3.5 பில்லியன் டாலர்களை அபராதமாக கட்டியுள்ளது என்றால் அதன் பணபலத்தை யூகித்துக்கொள்ளுங்கள். 

பெரஸ் தனது பாதுகாப்பிற்கு போலீசாரை வைத்துள்ளார். இவர் எப்போதும் ஊடகங்களுக்கு பேட்டி அளித்தது கிடையாது. ஏன் என்றால் நான் எனது கடமையைச் செய்தேன். இதற்கு எதற்கு பேட்டி என்பது அவரது பதில். சமூக வலைத்தளங்களில் பெரஸை சூப்பர்மேனாக சித்தரித்து மீம்ஸ்கள் சுற்றி வருகின்றன. பெண்களும் அவர் மீது பித்தாக திரிகிறார்கள். இதோடு ஊழலை வெளிக்கொண்டு வந்ததால் அரசியல் கட்சி தொண்டர்களின் கொலை மிரட்டல்களையும் எதிர்கொண்டு வருகிறார்.  நான் இரவில் நிம்மதியாக தூங்குகிறேன். நான் செய்வது பற்றி சமூகம் அறிந்துகொள்ள இன்னும் நாளாகும். இது தொடர்ச்சியான செயல்முறை என்று ட்ரோம் என்ற பத்திரிகையில் பேசியிருக்கிறார். இதுவும் கூட அரிதான பேச்சுதான் அல்லவா?

கத்தோலிக்க மத குடும்பத்தைச் சேர்ந்தவர் பெரஸ். பெரும்பாலும் தனது வீட்டில் மனைவி, குழந்தையுடன் உள்ளார். வேலை முடிந்தால் குடும்பத்துடன்தான் நேரத்தை செலவிடுகிறார். பொது நிர்வாகம் , சட்டம் என இரு பட்டங்களை படித்துள்ளார்.  பெரஸ் ஏற்படுத்திய மாற்றம் என்பது முழுமையானதாக என்று இன்னும் தெரியவில்லை. இந்த வழக்கு எப்படி நடக்கிறது என்பதை இனிதான் பார்க்கவேண்டும் என்று ஊழலுக்கு எதிரான டிரான்ஸ்பரன்சி இன்டர்நேஷனல் பிரிவு இயக்குநர் சாமுவேல் ரோட்டா கூறியுள்ளார். 


Ozy







கருத்துகள்

பிரபலமான இடுகைகள்