காலப்பயணம் செய்து தன் தாயின் உயிரைக் காப்பாற்றும் மகனின் பாசம் வென்றதா? - ஆலிஸ் - கொரியத் தொடர் - 16 எபிசோடுகள்

 

 

 

Alice EngSub (2020) Korean Drama - PollDrama

 

 

 

 

 

 

ஆலிஸ்


கொரிய தொடர்


16 எபிசோடுகள்

 

 

Genre:Science fiction, Romance
Developed by:SBS TV
Written by:Kim Kyu-won, Kang Cheol-gyu, Kim Ga-yeong

August 28 –
October 24, 2020

Sinopsis Drama Korea Alice SBS 2020 Episode 2 | Tentang ... 

டிவியில் காலப்பயணம் மாதிரி மையப்பொருளை எடுத்து ரசிக்க வைக்கமுடியுமா? ஏன் முடியாது என்று சொல்லி சாத்தியமாக்கியிருக்கிறார் ஆலிஸ் தொடர் இயக்குநர்.


காலப்பயணம் என்றால் ஏராளமான சிஜி காட்சிகள் தேவை, தேடுதல், கொலை, குற்றங்கள் தேவை என்று பலர் நினைப்போம். ஆனால் இந்த தொடர் முழுக்க உணர்ச்சிகரமான உறவுகளை மட்டுமே மையமாக வைத்து எடுத்திருக்கிறார்கள். இதனால் பெரிய ஜிம்மிக்ஸ் வேலைகள், எதிர்கால மனிதர்களின் தொழில்நுட்பம் என்று கவலைப்படவேண்டியதில்லை.


Sinopsis Drama Korea Alice SBS 2020 Episode 17 | Tentang ...

பார்க் ஜின், காவல்துறையில் வேலை செய்யும் கேப்டனுக்கு அடுத்த இரண்டாம் நிலை அதிகாரி. இவரது மேலதிகாரி கோ. இவர்தான் அம்மா இறந்தபிறகு, பார்க் ஜின்னை தனது பிள்ளை போல வீட்டில் தங்க வைத்து வளர்க்கிறார். இதற்கு என்ன காரணம் என்று தேடினால், 2010க்கு கதை செல்கிறது. அங்கு ஜின்னின் அம்மா, அப்பா இல்லாமல் பையனை 19 ஆண்டுகளாக வளர்க்கிறார். அவர் வாழும்போது ஜின்னால் அம்மாவிடம் பிரியமாக நடந்துகொள்ள முடிவதில்லை. காரணம். அவரின் பிறப்பு மிக சிக்கலான சூழலில் நடக்கிறது. கதிர்வீச்சினால் பாதிக்கப்பட்ட ஜின்னின் மூளையில் உணர்ச்சிகளைப் புரிந்துகொள்ளும் பகுதி, வளராமல் போய்விடுகிறது

 


Alice dan Drama Korea Terpopuler September 2020 - kumparan.com

 

இதன் பாதிப்பு அவனது பள்ளிப்பருவத்தில் தெரிய வருகிறது. க்யூப்பை நொடியில் ஒன்று சேர்க்கும் திறமையானவன்தான். ஆனால் முயலை விளையாட கொடுத்தால் அதன் காதுகளை வெட்டுவான், பட்டாம்பூச்சிகளை அக்கு அக்காக பிய்த்து எறிவான். பிறரது வலியை உணரமுடியாத பிரச்னை உள்ளது. இதனால் மருத்துவரிடம் பிரச்னையை அறிந்துகொண்டு அதற்கேற்ப அவனுக்கு பல்வேறு பயிற்சிகளை வழங்குகிறாள் அவனது அம்மா யூன் டாய். இதனால் ஓரளவு உணர்ச்சிகளை புரிந்துகொள்ளத் தொடங்குகிறான். இப்படி இருக்கும் நிலையில் யூன் டாய்க்கு பிறந்தநாள் வருகிறது. அன்று அவளும், பார்க் ஜின்னும் ஒன்றாக் அமர்ந்து சாப்பிடுகிறார்கள். அப்போது அவள் பியர் வாங்க கடைக்கு போகிறாள். அங்கு நேரும் அசம்பாவிதத்தால் இறந்துபோகிறாள். இந்த இறப்புதான் பார்க் ஜின்னை காவல்துறையில் அதிகாரியாக சேர வைக்கிறது. இதில் அவன் வென்றானா என்பதுதான் கதை.


தொடரில் பார்க் ஜின்னுக்கு அவனது பள்ளிக்காலத்திலிருந்து அவனை நேசிக்கும் கிம் டியோன் என்ற பெண், இயற்பியல் பேராசிரியராக அவனது அம்மா சாயலில் இருக்கும் யூன் டாயி என்ற இருவரும் ஜோடிகள்.


பார்க் ஜின்னுக்கும், இயற்பியல் பேராசிரியரான யூன் டாயிக்குமான பொருத்தம் ஆச்சரியம். இது என்ன வகை உறவு என அவர்களுக்கே தெரிவதில்லை. ஆனால் பார்க் ஜின்னின் குணாதிசயம் யூன் டாயை ஆச்சரியப்படுத்துகிறது. யூன் டாயின் வயது 32 ஆக இருக்கும்போது பார்க் ஜின்னின் அறிமுகம் கிடைக்கிறது. அவள் வயதுக்கு பார்க் ஜின்னை மகனாக எப்படி பார்ப்பது, அவன் அவனை மெல்ல காதலிக்கத் தொடங்குகிறாள். ஆனால் பார்க் ஜின் தனது அம்மா மீண்டு வந்துவிட்டதாகவே நினைக்கிறான். ஆனால் அவளது குணங்கள், அம்மாவிடமிருந்து வேறுபட்டதாக இருக்கிறது. அதேசமயம் அவனை கல்யாணம் செய்துகொள்ளும் வேகத்தில் பத்திரிகையில் வேலை செய்யும் பள்ளித்தோழி கிம் டியோன் இருக்கிறாள். இவளை தோழி என்றுதான் பார்க் ஜின் முதலிலிருந்து தெளிவாக கூறிவிடுகிறான். ஆனால் இதில் குழப்பமாக தொடரும் உறவு யூன் டாயிக்கும், பார்க் ஜின்னுக்குமான உறவுதான்.


காலப்பயணம் என்பதை மனிதர்கள் எப்படி பார்க்கிறார்கள், அது எப்படி எதிர்கால மனிதர்களை கடந்த காலத்திற்கு சென்று பல்வேறு குற்றங்களை செய்ய வைக்கிறது என்பதை சொன்னது அபாரம். நமது சந்தோஷம் எப்போதும் குறையக்கூடாது, அப்படியே இருக்க வேண்டும் என நினைப்பவர்களாலும், காலப்பயணத்தை தொழிலாக செய்பவர்களுக்கும் ஏற்படும் இடர்ப்பாடு, பார்க் ஜின்னும் அவனது காதலியுமான யூன் டாயியும்தான். அவர்களை ஒழிக்க என்னென்ன முயற்சிகளை செய்கிறார்கள், அதனை எப்படி பார்க் ஜின் எதிர்கொண்டான் என்பதை உணர்ச்சியும் நெகிழ்ச்சியுமாக காட்சி படுத்தியிருக்கிறார்கள். இதில் நகைச்சுவையும் கொண்டு வர முயன்றிருக்கிறார்கள்

 

Alice Korean Drama Reivew | Kdrama Kisses

பார்க் ஜின்னாக நடித்திருப்பவர் செம ஹேண்ட்சமாக இருக்கிறார். கூடுதலாக இவரின் அப்பாவாக வருபவரும் சிறப்பாக நடித்திருக்கிறார். பார்க் ஜின், உணர்ச்சிகள் இல்லாதவர் என்பதால் குறைவான பேச்சுதான். அதிக உணர்ச்சிகளை வெளிப்படுத்தவும் அவசியமில்லை. ஆனால் இதற்கு ஈடுகட்டும்விதமாக கிம் டியோன், யூன் டாயி கெஞ்சலும் கொஞ்சலுமாக சிறப்பாக உணர்ச்சிகளை கொட்டி நடித்திருக்கிறார்கள்.


கடந்த கால நினைவுகள்தான் எதிர்காலத்தை உருவாக்குகிறது என்பதை வலுவாக சொல்லியிருக்கிற தொடர்.


கோமாளிமேடை டீம்

thanks mx player

 

more information...

https://en.wikipedia.org/wiki/Alice_(South_Korean_TV_series)

கருத்துகள்