இந்த தேர்தலில் நாங்கள் வெல்ல விரும்புகிறோம்! - கமல்ஹாசன், தலைவர், மக்கள் நீதி மய்யம்

 

 

 

 

 

 

Drinking can be cut down, but body will not accept ...

 

 

 

கமல்ஹாசன்

மக்கள்நீதிமய்யம் தலைவர்


நீங்கள் கடந்த மக்களவை தேர்தலில் 3.7 சதவீதம் வாக்குகளைப் பெற்றீர்கள். இப்போது எந்தளவு வாகுகளைப் பெறுவீர்கள் என்று ஏதேனும் திட்டமிடல் உள்ளதா?


நான் எந்த ஆய்வுகளையும் நம்புவதில்லை. மக்களை மட்டுமே நம்புகிறேன். மக்களுக்கு எங்கள் மீது ஆர்வம் உள்ளது. அதை மட்டுமே நம்பி தேர்தலை சந்திக்கவிருக்கிறோம்.


2019ஆம் ஆண்டிலிருந்து என்ன விஷயங்கள் கற்றுக்கொண்டீர்கள்?


அந்த ஆண்டில்தான் அரசியல்வாதியாக நாங்கள் களம் கண்டோம். நாங்கள் நிறைய விஷயங்களை சரிசெய்துகொண்டிருக்கிறோம். நாங்கள் மூன்றிலக்க எண்ணிக்கையை மனதில் கொண்டிருக்கிறோம். நாங்கள் பத்து சதவீத த்தை கடக்க முடியும் என்று ஆய்வாளர்கள் சொன்னால் அதுவே எங்கள் வெற்றி. நாங்ங்கள் இந்த விளையாட்டில் இருக்கிறோம் என்பதை விட விளையாட்டை மாற்றுவோம் என்று சொல்ல விரும்புகிறேன்.


உங்கள் நம்பிக்கை சரிதான். உண்மையை புரிந்துகொள்ளவேண்டுமே?


நாங்கள் இத்தேர்தலில் வெல்லப்போகிறோம் என்று கூறவில்லை. நாங்கள் வெல்ல விரும்புகிறோம் என்றுதான் கூறுகிறேன். வெற்றி, தோல்வி என எது நடந்தாலும் நீங்கள் மக்கள்நீதி மய்யத்தை தமிழ்நாட்டிலிருந்து நீக்கிவிட முடியாது. நாங்கள் மூன்று ஆண்டுகளாக செயல்பட்டு வந்துள்ளோம். எங்கள் எதிரிகள் யாரென்றால் ஊழலுக்கு எதிரான குற்றச்சாட்டுகளுக்கு பயப்படாத ஆட்கள்தான்.


யார் அந்த எதிரிகள்?


இரு கட்சியிலும் இருக்கிறார்கள். ஒரு கட்சி ஆட்சியில் உள்ளது. மற்றொரு கட்சி இல்லை. ஒரு கட்சி தலைமை இல்லாமல் வாலால் மட்டும் துடித்துக்கொண்டிருக்கிறது.் மற்றொன்று அதிக விஷம் கொண்டது. இந்த இரு விலங்குகளையும் அகற்றவேண்டும். இது தனிப்பட்ட தாக்குதலாக நான் கூறவில்லை.


நீங்கள் உங்களை மாற்று என்று கூறிக்கொள்கிறீர்கள். எப்படி மாறுபடுகிறீர்கள்?


எங்கள் கட்சி வேட்பாளர்கள் யாருக்கும் குற்றப்பிண்ணனி கிடையாது. சமூகசேவை செய்துவந்த திறனைக் கொண்டவர்கள். இவர்கள் யாருக்குமே பல்வேறு திறன்கள் இருந்தாலும் அரசியல்கட்சி நடத்திச்செல்லும் திறமை கிடையாது. இதை சொல்லும் நானே கூட அப்படித்தான். பணத்தை நம்பி நாங்கள் அரசியலுக்கு வரவில்லை.


அப்படியென்றால் எப்படி தேர்தலில் போட்டியிடுவீர்கள்?


நான் பணத்திற்காக சினிமாவில் நடித்து வருகிறேன். நான் சம்பாதித்த அனைத்தையும் அதில்தான் முதலீடு செய்துவருகிறேன். நான் இத்தனை ஆண்டுகாலம் பெற்ற பணம் அனைத்தும் இப்படி முதலீடு செய்து பெற்றதுதான்.


அரசியல் கொள்கை, தேர்தல் அறிக்கைக்காக மக்கள் வாக்களிக்க மாட்டார்கள். இதனை எப்படி உடைக்கப் போகிறீர்கள்?


நான் சினிமாவில் பல்வேறு பார்முலாக்களை உடைத்து ஜெயித்துள்ளேன். அரசியல் களத்திலும் அப்படித்தான் வெல்லுவேன். இதனை சிவாஜி கணேசன், எம்ஜிஆர் போன்ற மேதை்கள் கூட செய்யவில்லை.


நீங்கள் சொல்லுவது சரிதான். ஆனால் நீங்களும் உங்கள் கட்சி வேட்பாளர்களும் கூட நகரங்களில்தானே போட்டியிடுகிறீர்கள்?



என்னை முதலில் மயிலாப்பூரில்தான் போட்டியிடச் சொன்னார்கள். ஆனால், சாதி காரணத்தைக் காட்டுவார்கள் என கோவையில் போட்டியிடுகிறேன். அங்கு சாதி சார்ந்த கட்சிகளோடு போட்டியிட்டு வெல்லப்போகிறேன்.


அரசு அமைக்க பிற கட்சிகளுக்கு ஆதரவு தருவீர்களா?


இரண்டு மோசமான கட்சிகளுக்கு ஆதரவு தருவதற்கு பதிலாக நாங்கள் அடுத்த தேர்தலை விரும்புகிறோம்.


ஸ்டாலின், இபிஎஸ் என இரண்டுபேரில் முதல்வராக யாரைத் தேர்ந்தெடுப்பீர்கள்?


இருவரையும் தவிர்த்துவிடுவேன். இவர்களை முதல்வராக தேர்ந்தெடுக்க நான் ஏன் அரசியலுக்கு வரவேண்டும்?


டைம்ஸ் ஆப் இந்தியா


அருண்குமார்



கருத்துகள்

பிரபலமான இடுகைகள்