செயற்கை வைரங்களை நோக்கி நகரும் வைர விற்பனை நிறுவனங்கள்! - இயற்கை வைரத்தை அகழ்ந்தெடுக்க கூடுகிறது பொருட்செலவு

 

 

 

 Lady, Black Dress, Jewellery, Dress, Black, Woman

 

 


செயற்கை வைரங்களை நோக்கி நகரும் உலகம்!


செய்தி


ஆஸ்திரேலியாவின் கிழக்கு கிம்பர்லி பகுதியில் செயல்பட்டு வந்த பழமையான ஆர்கைல் வைரச்சுரங்கம், லாபகரமாக இயங்கவில்லை என்பதால் மூடப்பட்டிருக்கிறது.


பல்வேறு நாடுகளில் இயங்கி வரும் வைரச்சுரங்கங்கள் காமதேனு போல வைரங்களை கொடுத்துக்கொண்டே இருக்காது. ஆர்கைல் வைரச்சுரங்கம் லாபகரமாக இயங்கவில்லை என்று அதன் உரிமையாளர் ரியோ டின்டோ கூறி, அதனை மூடியுள்ளார். 1983ஆம் ஆண்டு முதல் இயங்கத் தொடங்கிய இச்சுரங்கத்தில் 8 கோடியே 65 லட்சம் கேரட் வைரங்கள் வெட்டி எடுக்கப்பட்டுள்ளன. உலகில் விற்பனையாகும் 90 சதவீத பிங்க் வைரங்கள் ஆர்கைல் சுரங்கத்திலிருந்துதான் பெறப்பட்டன. தொண்ணூறுகளில் அதிக விலைக்கு விற்காத தரம் குறைந்த பழுப்பு மற்றும் பல்வேறு நிறமுடைய வைரக்கற்களை வாங்கி, பட்டை தீட்டி விற்பனை செய்தது இந்தியாவிலுள்ள குஜராத் மாநில வியாபாரிகள்தான்.


ஆர்கைல் சுரங்கம் மூடப்படுவதால் இனி இருப்பிலுள்ள வைரங்களை நகை வணிகர்கள் விற்கலாம். அரியவை என்பதால் அதன் விலை அதிகரிக்கப்பட வாய்ப்புள்ளது. இனி விற்பனைக்கு வரும் வைரங்கள் ஆய்வகத்தில் உருவாக்கப்படுபவையாகவும் இருக்க அதிக வாய்ப்புண்டு. ’’ஆர்கைல் சுரங்கம் மூடப்படுவது புகழ்பெற்ற கலைஞர் திடீரென மறைவதைப் போல உள்ளது.’’ என்கிறார் நியூயார்க் நகை வணிகரான லாரி ஜே வெஸ்ட். பிங்க் நிற வைரங்கள் விலை அதிகமாகும் வாய்ப்பு உள்ளதால் ஆய்வகத்தில் தயாரிக்கப்படும் செயற்கை வைரங்கள் விற்பனை அதிகரிக்கலாம்.


1955ஆம் ஆண்டு ஜெனரல் எலக்ட்ரிக் நிறுவனம் ஆய்வகத்தில் செயற்கை வைரங்களை தயாரிக்க முடியும் என்று நிரூபித்துக் காட்டியது. இந்த வைரங்களை ரூ.36,770 என்ற விலைக்கு வாங்கமுடியும். 2018 ஆம் ஆண்டு முதல் தென்னாப்பிரிக்க வைர விற்பனை நிறுவனமான டீபீர்ஸ், ஆய்வகத்தில் தயாரிக்கப்பட்ட வைரங்களை இங்கிலாந்தில் விற்கத்தொடங்கியுள்ளது. ஒரு காரட்டிலான வெள்ளை, நீலம், பிங்க் நிற வைரங்களில் விலை ரூ.58,833. ஒரு கேரட் இயற்கை வைரத்தின் விலை ரூ.1,32, 375லிருந்து தொடங்குகிறது.


இயற்கையாக சுரங்கத்தில் வெட்டி எடுக்கப்படும் வைரங்கள் சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்துவது உண்மை. அதேபோல செயற்கையாக வைரங்களை உருவாக்குவதிலும் மின்சாரம் அதிகம் செலவாகிறது என்ற உண்மையை ஒப்புக்கொள்ளவேண்டும். சூழலுக்கு பாதிப்பில்லை என்று சொல்லி செயற்கை வைரங்களை விற்பனை செய்யாதீர்கள் என அமெரிக்க வர்த்தக கமிஷன் வைர விற்பனையாளர்களை எச்சரித்துள்ளது. அதிகளவில் செயற்கை வைரங்கள் தயாரிக்கப்பட்டால் அதன் விலை குறையும் என வைர நிறுவனங்கள் கூறுகின்றன. நிலங்களில் வைரங்கள் தீர்ந்துவிட்டால் வைர நிறுவனங்கள் கடலின் படுகைகள் மீது கவனத்தை திருப்பவும் வாய்ப்புள்ளது.


தகவல்


FE


Shopping for a diamond is about to change


victoria gomelsky (NYT)



கருத்துகள்