பத்திரிகையாளர்களின் பத்திரிகையாளர் - ஏ ஜி நூரானி - அஞ்சலிக் குறிப்பு
அஞ்சலி ஏஜி நூரானி 1930-2024 காபூர் பாய் என அழைக்கப்படும் நூரானி, அரசியலமைப்பு சட்டத்தை அறிந்த கூர்மையான மனிதர்களில் ஒருவர். கல்வியாளர், வழக்குரைஞர், சுயசரிதையாளர், வரலாற்று அறிஞர், அரசியல் விமர்சகர், சிந்தனையாளர் என பல்வேறு தளங்களில் இயங்கி வந்தவர், அப்துல் காபூர் மஜீத் நூரானி. தனது தொண்ணூற்று மூன்று வயதில் ஆகஸ்ட் 29 ஆம் தேதி இயற்கை எய்தினார். முன்னாள் உச்சநீதிமன்ற வழக்குரைஞராக பணியாற்றிய நூரானி, சட்டம், அரசியல், வெளிநாட்டு உறவுகள் என பன்முகத்தன்மை கொண்ட தளங்களில் இயங்கி வந்தார். பாம்பே உயர்நீதிமன்றத்தில் வழக்குரைஞராக பயிற்சி செய்தார். எகனாமிக் அண்ட் பொலிட்டிகல் வீக்லி, தைனிக் பாஸ்கர், தி இந்து, பிரன்ட்லைன் ஆகிய நாளிதழ்களில் கட்டுரைகளை எழுதியிருக்கிறார். பிரன்ட்லைனில் காஷ்மீர் பற்றி நுட்பமான பல்வேறு தகவல்களோடு கட்டுரைகளைத் தொடர்ந்து எழுதி வந்தார். இந்திய பாகிஸ்தான் பிரிவினைக்கு காரணமாக அரசியல் சூழல்களைப் பற்றிய கட்டுரைகளை எழுதியுள்ளார். மனிதகுல வரலாற்றில் பத்து முக்கிய சம்பவங்களில் ஒன்று என இந்திய பாகிஸ்தான் பிரிவினையைக் குறிப்பிட்டார். குடிமகன்களின் உரிமை, பேச்சுரி...