அதிகாரத்திற்கு பணிதல் இயல்பானதுதானா?
அறிவியல் கேள்வி பதில்கள் மிஸ்டர் ரோனி குற்றவாளிகளை ஆவணப்படுத்துதல் என்றால் என்ன? ஒரு கொலைக்குற்றம் நடைபெறுகிறது. அதை செய்தவர் குறிப்பிட்ட பாணியைக் கையாள்கிறார். அதிலுள்ள உளவியல், நிலப்பரப்பு, குண இயல்பு ஆகியவற்றை சேகரித்து ஊகித்து எழுதி வைப்பதே ஆவணப்படுத்துதல் ஆகும். அதாவது புரோபைலர். என்பிசி என்ற தொலைக்காட்சியில் புரொபைலர் என்ற தொடர் வெளியானது. குற்றவாளிகளின் அடையாளங்களை ஆவணப்படுத்துதல் பற்றி ஏராளமான தகவல்களை செயல்பாடுகளை இத்தொடர் கொண்டிருந்தது. அதன் வழியாக புகழ்பெற்றது. இது அறிவியல் பூர்வமான முறையா என விவாதம் இன்றுமே நடைபெறுகிறதுதான். பாலியல் குற்றவாளிகளைப் பிடிக்க குற்றவாளிகளை ஆவணப்படுத்தும் முறை பெரிதும் உதவுகிறது. குற்றவாளியின் மனம் என்பது இருக்கிறதா? குற்றங்களை ஒருவரது முன்னோர் செய்திருக்கலாம். சில தலைமுறைகள் அப்படியே செய்து வந்திருக்கலாம்.அதற்காக இப்போதுள்ள அத்தலைமுறையினரை சிறையில் அடைத்தால் எப்படி இருக்கும்? குற்றமனம் என்பதை அந்த வகையில் ஆவணப்படுத்தி கூற முடியாது. மனநிலை குறைபாடுகளை ஆவணப்படுத்தும் நூல்கள் உள்ளன. அவற்றை வாங்கிப்படித்து தெளிவு பெறலாம். எப்போதுமே சமூக ...