நூல் வெளி
இயந்திரம் மலயாற்றூர் ராமகிருஷ்ணன் என்பிடி கபியாஸ் அதிகாரப்படிக்கட்டுகளை இடையறாது தேடிப்பயணிக்கும் ஒரு மனிதனின் கதை. அவனின் பயணவழியே பிற மனிதர்களின் வாழ்வும் நம் கண்களுக்கு வசப்பட கதை நகர்கிறது. பாலகிருஷ்ணன் எனும் வசதியில்லாத அந்தஸ்து குறைந்த ஒரு மாணவன் ஐ.ஏ. எஸ் தேர்ச்சி பெறுகிறான். ஆனால் அந்த மகிழ்ச்சியைக்காட்டிலும் அவனுக்கு அவன் குடும்பம் இருக்கும் கீழ்நிலையில் மற்ற மாணவர்களான வசதி நிறைந்த குரியன் உள்ளிட்டோரை நினைத்து ஏங்குகிறான். தொடர்ந்து தன் வாழ்வை குரியனுக்கு நிகராக ஆக்கிக்கொள்ள நினைத்து திட்டமிட்டு திருமணம், நட்பு ஆகியவற்றை தேர்ந்தெடுத்துக் கொள்கிறான். ஆனால் அந்...