இடுகைகள்

வழுக்கை லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

ஆண்களுக்கு தலை நடுவிலிருந்து வழுக்கையாவது ஏன்? மிஸ்டர் ரோனி

படம்
  பதில் சொல்லுங்க ப்ரோ? மிஸ்டர் ரோனி பதில் சொல்லும்போது தலையை சொறிவது ஏன்? இயல்பாகவே இரண்டு வாய்ப்புகளை கொடுத்து இரண்டில் ஒன்று என்றால் பலரும் எதை தேர்ந்தெடுப்பது என தலையை சொறிவார்கள். அது இயல்பானதுதான். இதனை உயிரியலில் டிஸ்பிளேஸ்மென்ட் ஆக்டிவிட்டி என்று கூறுகிறார்கள். மனிதர்களுக்கு மட்டும் இந்த பழக்கம் இல்லை பறவைகளுக்கும் கூட உண்டு. பறவை ஆபத்தான சூழலில் தாக்கவா, ஓடிவிடவா என இரு வாய்ப்புகள் உள்ள நிலையில் பதற்றத்துடன் தரையை கொத்துகிறது.  பதற்றத்தில் இருக்கும்போது யோசிக்கிற போஸில் உள்ளதால் அதன் பதற்றம் கூட தணிகிறது என நினைக்க வாய்ப்புள்ளது. 2017இல் செய்த ஆய்வில் மக்காவ் வகை குரங்குகள் இப்படி ஏதேனும் தீவிர யோசனையில் தலையை சாய்த்து சொறிந்துகொண்டிருக்கிற குரங்கை அணுக பயந்து நின்றிருக்கின்றன. அது யோசிக்கிற நிலையில் அதனை தாக்குவது தவறு என்பதை அதன் சொறிகிற பாவனை ஏற்படுத்தியிருகிறது. தலையை சொறிகிற பழக்கம் அப்படியே பாரம்பரியமாக நமது உடலுக்குள் பொதிந்து வந்திருக்கிறது என்று கூறலாம்.  மீன்களால் தன்னை உணர முடியுமா? முடியாது. ஆனால் முகரும் சக்தியால் பிற மீன் இனங்களை அடையாளம் அறிய முடியும். தன்னுடைய

வழுக்கையால் அவமானமா? பாலா சொல்லும் பாடம் அதிரடி!

படம்
பாலா இயக்கம் - அமர் கௌசிக் கதை - நீரன் பட், பாவெல் பட்டாச்சார்ஜி இசை சச்சின் ஜிகார், பிராக், ஜானி ஒளிப்பதிவு அனுஜ் ராகேஷ் தவான் இளம் வயதிலிருந்து ஷாருக்கான் ரசிகராக உள்ளவனுக்கு இருபத்தைந்து வயதில் முடியெல்லாம் கொட்டி வழுக்கையாக மாறினால் என்னாகும்? அதேதான். அவமானம், வேலையில் பதவியுயர்வு சிக்கல், குடும்ப உறவுகளிலும் விரிசல். அத்தனையையும் கடந்து அவன் எழுந்து நிற்பதுதான் கதை. அதாவது தன் குறையை தானே உணர்ந்து ஏற்கிறான். பிளஸ் இதுபோன்ற ஸ்கிரிப்டை செலக்ட் செய்து நடித்த ஆயுஷ்மான் குரானா. பிரமாதமாக நடித்திருக்கிறார் என்பதை விட கதையை புரிந்துகொண்டு நடித்திருக்கிறார். படம் பார்த்த நண்பர், இறுதியில் தன் விக்கை கழற்றி கண்களைத் துடைக்கும்போது அவரின் கண்களும் கலங்கிவிட்டது. அந்தளவு பார்வையாளர்களை தன் நடிப்போடு இணைய வைத்துவிடுகிறார். பூமி பட்னாகரும் கருப்பு கலரில் சில காட்சிகளில் அய்யே சொல்ல வைத்தாலும் நடிப்பில் திடமாக காலூன்றி நிற்கிறார். மைனஸ் டிக் டொக் பெண்ணாக வரும் யாமி கௌதம். அவரின் குணம், எதிர்பார்ப்பு என்பதை ஆயுஷ்மான் புரிந்துகொண்டாலும் அவர் ஆயுஷ்மானை பிரியும் முட