இடுகைகள்

உ வே சா லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

சங்க இலக்கிய நூல்களை அச்சு நூலாக்கி காப்பாற்றிய தமிழ் ஆர்வலர்! - என் சரித்திரம் - உ வே சா

படம்
  என் சரித்திரம் உ வே சா விகடன் பிரசுரம் நூல் எழுநூறு பக்கங்களுக்கும் அதிகம். தொடக்கத்தில் நூலை படிப்பதில் எவருக்கும் தடுமாற்றம் இருக்கலாம். ஆனால் உ வே சா, மீனாட்சி சுந்தரம் பிள்ளை அவர்களிடம் சேர்ந்து தமிழ் இலக்கியங்களை, பாடல்களை கற்கும் பகுதிக்கு வந்துவிட்டால் அதற்குப் பிறகு நூலை கீழே வைக்க முடியாது. ஏராளமான தமிழ் சங்க இலக்கியங்களை ஒலைச்சுவடிகளிலிருந்து அச்சு நூலுக்கு மாற்றியவர், உ வே சா. தமிழ் கற்ற பண்டிதராக மடமொன்றில் பணியாற்றிக் கொண்டிருப்பவர், தியாகராசர் மூலம் கும்பகோணம் பள்ளியில் ஆசிரியராக பணிக்குச் சேர்க்கிறார். பிறகும் கூட ஓய்வெடுக்காமல் சிலப்பதிகாரம், மணிமேகலை என பல்வேறு சங்க இலக்கிய நூல்களை ஊரெங்கும் தேடிப் பிடித்து அதன் பிழைகளை களைந்து அச்சு நூலாக மாற்றுகிறார். உண்மையில் இந்த பயணத்தில் திருவாவடுதுறை ஆதீனம் அவருக்கு துணையாக நிற்கிறார். பொருளுதவி செய்கிறார். உ வே சாவின் குடும்பம் கும்பகோணத்தில் வீட்டைப் பிடித்து குடியேற உதவுகிறார். நூலில் உ வே சாவின் தனிப்பட்ட வாழ்க்கை, மக்கட்பேறு பற்றிய அதிக குறிப்புகள் ஏதுமில்லை. முழுக்க தமிழுக்கான உழைப்பு, அதில் ஏற்படும் தடுமாற்றங