இடுகைகள்

பெருமாள் முருகன் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

முருகேசன்களின் வாழ்வில் நிறைந்துள்ள பல்வேறு உணர்ச்சிப்போராட்டங்கள் - மாயம் - பெருமாள் முருகன்

படம்
  பெருமாள் முருகன் மாயம் பெருமாள் முருகன் மாயம் - பெருமாள் முருகன் சிறுகதைகள்  காலச்சுவடு நூலின் தலைப்பை முருகேசனின் கதைகள் என்றே கூட சொல்லிவிடலாம். தவறில்லை. அனைத்து கதைகளிலும் நாயகன், கதை நாயகன் முருகேசுதான். பெரும்பான்மையான கதைகள் திருமணமாகும் முயற்சி, திருமணம், திருமணமான பிறகு வாழ்க்கை என திருமணத்தை மையமாக கொண்டுள்ளது.   மொத்தம் இருபது கதைகள், மாயம் என்ற நூல்தொகுப்பில் உள்ளன. பரிகாரம் என்பது, மாயவாத கதை என்றால் இதுமட்டுமே. மற்ற கதைகள் அனைத்துமே எளிமையான வாசகங்களால் அமைந்த கதைகள். அதன் முடிவு கூட பெரியளவு அதிர்ச்சி, மகிழ்ச்சி என முடிவதில்லை. சீரான தன்மையில் உணர்ச்சிகளையும் மெல்ல பரப்பி காவிரி நீர் போல சலசலத்து செல்கிறது. பரிகாரம் கதை, ஜோதிடத்தால் மனதுக்குள் ஏற்பட்ட பதற்றம், பீதி எப்படி ஒருவனை பித்தாக்குகிறது என்பதை கூறுகிறது. இந்தக் கதை அதன் வார்த்தைகள், கதையின் போக்கு என்ற வகையில் ஈர்ப்பானதாக உள்ளது. காதல், காமம், குற்றவுணர்ச்சி, பொறாமை, இரக்கம், விரக்தி ஆகிய உணர்வுகளை இக்கதைகளில் ஆசிரியர் சிறப்பாக பயன்படுத்தியுள்ளார். பெரும்பாலான பாத்திரங்கள் மேற்சொன்ன உணர்ச்சிகளை கதைகளில் வெள

சங்க கால பாடல்களை மாற்றி எழுதிய தமிழ் உரையாசிரியர்கள் - கெட்ட வார்த்தை பேசுவோம் - பெருமாள் முருகன்

படம்
  கெட்ட வார்த்தை பேசுவோம் பெருமாள் முருகன் காலச்சுவடு பதிப்பகம் பக்கம் 166 எழுத்தாளர் பெருமாள் முருகன் பா.மணி என்ற பெயரில் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு. இதனை முதலில் ஒரு சிற்றிதழில் எழுதி பிறகு காலச்சுவடு மூலம் நூலாகியிருக்கிறது. அதனால்தான் இந்த நூலை நாம் எளிதாக படிக்க முடிந்திருக்கிறது என்றும் கூறலாம். கெட்ட வார்த்தை பேசுவோம் என்ற நூல், தமிழில் உள்ள கெட்டவார்த்தைகள் என கூறப்படும் பிறப்பு உறுப்புகள் பற்றிய சொற்களை எப்படி சங்க்காலம் முதல் இன்றுவரை மறைத்திருக்கிறார்கள் என்பதை ஆராய்கிறது. அகநானூறு, கலித்தொகை ஆகிய நூல்கள் அதன் பாடல் வடிவில் சரியாகவே இருக்கின்றன. ஆனால் அதற்கு உரை எழுதியவர்கள் வரலாற்று நினைவோடு பிற்கால மாணவர்கள் சமூகத்தினர் தம்மை எப்படி நினைவில் வைத்திருக்கவேண்டும் என யோசித்து அதை மாற்றினார்கள் என்பதை பெருமாள் முருகன் விவாதிக்கிறார். அத்தியாயத்தின் முடிவில் மேற்கோளாக காட்டப்பட்ட நூல்களையும் கொடுத்திருக்கிறார். இதன்மூலம் இந்தவகையில் ஒருவர் ஆய்வு செய்ய விரும்பினால் பணி எளிதாக இருக்கும். நூலில் அதிகம் பேசப்படுவது பெண்குறியாக அல்குல் சொல்லைப் பற்றித்தான். இதை பொருள

மனிதர்களின் மனதில் உள்ள அக ஒளியை வெளிக்காட்டும் கதையுலகம் - சித்தன்போக்கு - பிரபஞ்சன்- காலச்சுவடு

படம்
  எழுத்தாளர் பிரபஞ்சன் சித்தன் போக்கு - பிரபஞ்சன்  தொகுப்பு - பெருமாள் முருகன்  காலச்சுவடு பதிப்பகம்  மின்னூல்  எழுத்தாளர் பிரபஞ்சன் மொத்தம் இருபது கதைகள். அத்தனையும் மனிதர்களின் மனிதநேய பக்கங்களைக் காட்டுபவைதான். இதில் பாதுகை, பாண்டிச்சேரி போர்ச்சுகீசியர்களின் நிறவெறியைக் காட்டும் கதை. பெரும்பாலும் இந்த கதையை மாணவர்கள் துணைப்பாட நூலில் படித்திருக்கவே வாய்ப்பு அதிகம்.  பெருமாள் முருகன் தொகுத்துள்ள கதைகள் அனைத்துமே திரும்ப திரும்ப படிக்கலாம் என்ற ஆர்வத்தைத் தூண்டுபவைதான். அனைத்து கதைகளுமே அப்படியான பல்வேறு மனிதநேய அம்சங்களைக் கொண்டுள்ளன. மனிதர்களின் கோபம், கீழ்மையான எண்ணங்களைத் தாண்டிய பிறர் மீதான அக்கறை வெளிப்படும் கதைகள்தான் பிரபஞ்சனின் இத்தொகுப்பின் முக்கியமான தன்மை என்று கூறலாம்.  ஒரு மனுஷி,  குமாரசாமியின் பகல்பொழுது, குருதட்சிணை, தியாகி, ஒரு ஊரில் இரண்டு மனிதர்கள், ருசி, தபால்காரர் பொண்டாட்டி ஆகிய கதைகள் பிடித்தமானவையாக இருந்தன. இவற்றை திரும்ப திரும்ப படிக்கலாம். அந்தளவு நிறைவான வாசக அனுபவத்தைக் கொடுத்தன. இத்தொகுப்பை வாசிப்பவர்களுக்கு வேறு கதைகள் இப்படியொரு உணர்வைக் கொடுக்கலாம். அத

அபூர்வ வெள்ளாட்டின் கதை - பூனாச்சி - பெருமாள் முருகன்

படம்
அன்ஸ்ப்லாஸ் பூனாச்சி அல்லது ஒரு வெள்ளாட்டின் கதை  பெருமாள் முருகன்  காலச்சுவடு  சமூகம் சார்ந்த பிரச்னைகளைச் சொல்லி படாதபாடு பட்ட பெருமாள் முருகனின் கதை. எளிமையாக மேய்ச்சல் நிலத்தில் மேயும் வெள்ளாட்டை வைத்தை கதையை எழுதிவிட்டார்.  இவர்களுக்கு அதிசயம் போல கிடைக்கும் கருப்பு மூடு ஆடுதான் பூனாச்சி, உருவ அளவில் பொசுக்கென இருக்கும் ஆட்டுக்குட்டியை வழிப்போக்கர் கிழவனுக்கு இலவசமாக கொடுத்துவிட்டு போகிறார். வீட்டுக்கு கொண்டு போனால் அது பூனைக்குட்டியா என்று கேட்கிறாள் கிழவி. அளவில் மிகச்சிறியதாக இருப்பதால் ஏதோ புழு போலத்தான் அவர்களுக்கு தெரிகிறது. முழு கருப்பு நிறம் என்பதால் இருக்கும் ஆடுகளிலும் மிகவும் வித்தியாசமாக இருக்கிறது.  இந்த ஆட்டுக்குட்டி எப்படி அவர்களின் வாழ்க்கையை மாற்றுகிறது, அதன் சிறப்பு என்ன என்பதை பின்னாளில் கிழவனும் கிழவியும் அறிகிறார்களா என்பதுதான் கதை.  நாவல் மொத்தம் 169 பக்கங்கள்தான். வேகமாக வாசிக்க முடியும் எளிமையான கதையும் கூட.  கதையின் முடிவு தொன்மைக் கதை போன்ற தோற்றத்தை உருவாக்குகிறது. மேய்ச்சல் நிலத்தில் வானம் பார்த்த பூமியில் ஆடு மேய்ப்பவர்களின் வாழ்க்கை இது. நாவல் முழுவது