இடுகைகள்

ஆளுமைகள் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

மகத்தான இயற்பியல் ஆளுமைகள்! - அல்ஹசன், ஆர்க்கிமிடிஸ், லூயிஸ் ஆல்வரெஸ்

படம்
  அல்ஹசன் (Alhazen 965 -1040) அல்ஹசம் பல்துறை வல்லுநர். வடிவியல், இயற்பியல், மருத்துவம், வானியல் ஆகிய துறைகளில் வித்தகர். பியூட் எமிரேட்டிலுள்ள பஸ்ரா எனும் நகரத்தில் (இராக்) அல்ஹசன் பிறந்தார். இவரது உருவம் கூட தோராயமாக வரையப்பட்டதுதான்.  அரசு அமைச்சராக பணியாற்றிய அல்ஹசன், தனக்கு கிடைக்கும் ஓய்வு நேரத்தில் கணிதம், வானியல் உள்ளிட்ட பல்வேறு துறைகளிலும் கண்டுபிடிப்புகளைச் செய்தார். கண்ணாடிகள் பற்றி அல்ஹசன் எழுதிய புக் ஆஃப் ஆப்டிக்ஸ் நூல் (Book of  Optics) முக்கியமானது. வாழும் காலத்தில் 90 கண்டுபிடிப்புகளை உருவாக்கியவர், கணிதம் மற்றும் ஆடியியல் துறைகளில் முக்கியமான கண்டுபிடிப்புகளைச் செய்துள்ளார்.  2 ஆர்க்கிமிடிஸ் (கி.மு.287 - கி.மு.212) முந்தைய காலத்தைச் சேர்ந்த செவ்வியல் கண்டுபிடிப்பாளர். கணிதவியலாளர், இயற்பியலாளர், வானியலாளர், ஆயுத வடிவமைப்பாளர் என பல்வேறு பணிகளில் வல்லுநர்.  தோராயமாக கி.மு.287 ஆம் ஆண்டு பிறந்த ஆர்க்கிமிடிசின் தந்தை, வானியலாளர். இவர், சிசிலி எனும் தீவிலுள்ள சைரகஸ் எனும் நகரில் பிறந்து வளர்ந்தார்.  சிறிய அளவில் விசையைப் பயன்படுத்தி பெரிய பொருட்களை நகர்த்தும் விதத்தைக் கண்

வரும் வாரத்தில் நாம் கவனிக்க வேண்டிய ஆளுமைகள், தினங்கள்!

படம்
pixabay அகஸ்டோ போல் மார்ச் 16,1931 பிரேசில் நாட்டு நாடக கலைஞர்.  இடதுசாரி கருத்துகளைச் சொல்ல தியேட்டர் ஆஃப் தி ஆப்ரஸ்டு என்ற நாடக அமைப்பைத் தொடங்கினார். நாடக வடிவங்களைப் பற்றியும், தனது அரசியல் செயற்பாடு பற்றியும் நூல்களை எழுதியுள்ளார். தேசிய தடுப்பூசி தினம் மார்ச் 16,1995 இந்தியாவில் ஆண்டுதோறும் மார்ச் 16ஆம் தேதி தேசிய தடுப்பூசி தினமாக அனுசரிக்கப்படுகிறது. இத்தினத்தில் குழந்தைகளுக்கு போலியோ சொட்டுமருந்து வழங்கப்படுகிறது. 2014ஆம் ஆண்டு மார்ச் 27 அன்று போலியோ இல்லாத நாடாக இந்தியாவை, உலக சுகாதார நிறுவனம் அறிவித்தது. நோர்பட் இல்லியக்ஸ் மார்ச் 17, 1806 நோர்பட் அமெரிக்காவைச் சேர்ந்த கண்டுபிடிப்பாளர், வேதியியல் பொறியியலாளர். இவர், சர்க்கரை தொழில்துறைக்காக கண்டுபிடித்த மல்டிபிள் எஃபக்ட் எவாபெரேட்டர் இவரை உலகிற்கு அடையாளம் காட்டியது. எகிப்து நாட்டின் தொன்மை வரலாறு பற்றிய ஆய்வையும் செய்து வந்தார். ரிச்சர்ட் பி ஸ்ட்ராங் மார்ச் 18, 1872 அமெரிக்காவின் ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர். பிளேக், காலரா, வயிற்றுப்போக்கு போன்ற நோய்களைப் பற்றிய விரிவான ஆய்வுகள

டைம் 100 - திறமைக்கு மரியாதை

படம்
டைம் 100 கல்விக்கரம் - FRED SWANIKER ஆப்பிரிக்கர். இன்று அங்கு 60 சதவீத மக்கள்தொகையினர் 25 வயதுக்குள் உள்ள இளைஞர்கள்தான். அங்குள்ள இளைஞர்களுக்கு கல்வி அளித்து அவர்களை தலைவர்களாக்கும் கல்வி முயற்சியை ஃபிரெட் ஸ்வானிகர் தொடங்கியுள்ளார். சொல்லாத கதைகள் - LYNN NOTTAGE மனிதநேயம் பேசும் கதைகள், நாடகங்களுக்கான உழைப்புதான் லின் நோட்டேஜின் பெயர் சொல்லும் படைப்புகளுக்கான காரணம். இவரின் ஸ்வெட் எனும் நாடகத்திற்காக நாடு முழுவதும் அலைந்து அதனை உருவாக்கினார். இதற்கு அங்கீகாரமாக இரண்டாவது முறையாக புலிட்சர் பரிசைப் பெற்றுளார் லின். இனவெறி, மதம் ஆகியவற்றைக் கடந்து மனிதநேயம் பேசும் படைப்புகளை உருவாக்க முனையும் லின்னின் உழைப்பு ஆச்சரியமானது. பாராட்டப்பட வேண்டியது. பெண்களுக்கான குரல் Aileen Lee பலரும் கூகுளில் பெண்களுக்கு மதிப்பில்லை, ஊதியம் குறைவு என்று பேசுவதோடு நின்றுவிடுவார்கள். ஆனால் அய்லீன் லீ ஆல் ரெய்ஸ் என்ற தன்னார்வ நிறுவனத்தை தொடங்கி பெண்கள் பலருக்கும் விழிப்புணர்வு பிரசாரத்தை செய்து வருகிறார். ஆண்களின் நெருக்கடிகளால் தவித்த பெண்களுக்கு தன்னம்பிக்கை தந்துள்ளார். TA

வெளிச்சம் எங்கோ புலப்படுகிறது

வெளிச்சம் எங்கோ புலப்படுகிறது ஆளுமைகளின்          கடிதங்கள் இரா.முருகானந்தத்திற்கு எழுதியவை காப்புரிமை: இரா.முருகானந்தம்               All Rights Reserved. வலைப்பூவடிவ பதிப்பு உரிமை : ஆரா பிரஸ் நூல்தொகுப்பு: ஷான் ஜே, ஜோஸஃபின் ஆசிரியரின் அனுமதி பெற்று பிரசுரிக்கப்படுகிறது. வாசிக்கலாம் ஆனால் வணிகரீதியில் பயன்படுத்தக்கூடாது. சுந்தர ராமசாமி                                            18.09.2001 அன்புள்ள திரு. இரா.முருகானந்தம் அவர்களுக்கு,      வணக்கம். உங்கள் 15.08.2001 கடிதம் கிடைத்தது. மகிழ்ச்சி. உடல்நலம் சற்றுக்குறைவாக இருந்ததால் பதிலெழுதப் பிந்தி விட்டது. மன்னியுங்கள்.      இன்னும் ஐந்தாறு மாதங்கள் நான் இங்குதான் இருப்பேன். வசதி இருக்கும்போது நீங்கள் வரலாம். நீங்கள் வெகுதூரத்தில் இருந்து வருவதால் வருவதற்கு முன் தொலைபேசித்தொடர்பு கொண்டு என் இருப்பை உறுதி செய்துகொள்ள வேண்டும்.(என் தொலைபேசி எண்: 223159) என்னை சந்திக்கவேண்டும் என்பதற்காக நீங்கள் உங்களை அதிகம் அசௌகரியப்படுத்திக்கொள்ளக்கூடாது. இந்தப்பக்கம் வர நேர்ந்தால் அவசியம் இங்க