இடுகைகள்

நம்பிக்கை மனிதர்கள் 2019 லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

எதிர்கால நம்பிக்கை மனிதர்கள் 2019 - 2020

படம்
பபி தாஸ், எம்ப்ராய்டரி கலைஞர் காலம் எல்லோருக்கும் ஒரேவித வாய்ப்புகளைத்தான் வழங்குகிறது. நாம் அதில் டிவி பார்க்கிறோமோ, அல்லது டிவியில் நம்மை பிறர் பார்க்கும்படி வேலை பார்க்கிறோமா என்பது நம் கையில்தான் உள்ளது. யாராக இருந்தாலும் துறை சார்ந்தவர்கள் தங்கள் துறையில் இவர் ஊக்கமூட்டும்படி வளர்கிறார் என்று நம்புவார்கள். அதனை பிறருக்கும் கூறுவார்கள். அப்படி சிலர் சிலரை சிறப்பாக வருவார்கள் என்று கூறுகிறார்கள். அவர்களைப் பார்ப்போம். அமர் கௌசிக், - 36 சினிமா இயக்குநர் அமர் கௌசிக்கின் பாலா, ஸ்த்ரீ படங்களைப் பார்த்து வியந்தேன். அதில் நிறைய மேம்படுத்தல்களை என்னால பார்க்க முடிந்தது. குறிப்பிட்ட பட்ஜெட்டில் கதையும் நிறைவாக நட்சத்திரங்களையும் வைத்து படம் செய்வது கடினம். இதனை அமர் கௌசிக் எளிதாக செய்கிறார். இவரின் கதை சொல்லும் முறையும் ரசிக்கும்படி இருக்கிறது. - சுஜய் கோஷ் - திரைப்பட இயக்குநர் சாரா அலிகான் 24, விக்கி கௌசல் 31 திரைப்பட நடிகை, நடிகர் இந்த இரு நடிகர் நடிகையும் நட்சத்திரங்களாகும் அந்தஸ்து பெற்றவர்கள். கதையின் தேர்வு, அதை வைத்து மக்களை ஈர்ப்பது என்று தொடங்கி இவர்களின் ம...

கறுப்பின எழுத்தாளர்களுக்கு கௌரவம் தேடித்தந்த பெண்மணி!

படம்
ozy தாளின் வெற்றுப்பக்கத்தை ஜெர்கின்ஸ் பார்த்து டெட்லைன் ஆச்சே என்று பதற்றம் கொண்டதில்லை. இருபத்தாறு வயது என்றாலும் வார்த்தைகள் தாளில் கொட்டுகின்றன. அத்தனையும் எளிய மனிதர்களுக்கான சொற்கள். அப்படியிருக்க கவலை என்ன? படைப்பு என்பது கதையோ, கட்டுரையோ, நாவலோ உழைப்பு ஒன்றுதான். ஜெர்கின்ஸூம் கட்டுரை சரியாக வரவேண்டுமென பசியோடு உணவை மறுத்து கணினியோடு போராடியவர்தான்.  திஸ் வில் பி மை அன்டூயிங்: லிவிங் அட் தி இன்டர்செக்ஷன் ஆஃப் பிளாக், ஃபீமேல் அண்ட் ஃபெமினிஸ்ட் இன் (வொய்ட் ) அமெரிக்கா என்ற இவரின் நூல் நியூயார்க் டைம்ஸ் பத்திரிகையில் ஏழாவது இடம் பிடித்து சாதித்த நூல். நான் என் எழுத்தின் வழியே விவாதங்களை உருவாக்க விரும்புகிறேன்.  பிரின்ஸ்டன் பல்கலைக்கழகத்தில் ரஷ்யன், ஜப்பானிய மொழி இலக்கியங்களைக் கற்றவர் ஜெர்கின்ஸ். கிரியேட்டிவ் எழுத்துபற்றிய படிப்பை பெனிங்டன் கல்லூரியில் படித்தவருக்கு ஆறு மொழிகளை பேசத்தெரியும். வகுப்பில் ஒரே கறுப்பினப் பெண் மாணவி இவர்தான்.  தன் பதினான்கு வயதிலிருந்து நாவல்களை எழுதி வருகிறார் ஜெர்கின்ஸ். தெற்கு நியூ ஜெர்சியில் வாழ்ந்து வந்தவர், ...