அறிவியல் கேள்வி பதில்கள் - புவியியல்
அன்டார்டிகாவில் உள்ள ஐஸ்கட்டியின் தடிமன் என்ன? தோராயமாக அதை கூறவேண்டுமெனில் , 6,600 அடி நீளத்திற்கு ஐஸ்கட்டி இருக்கலாம் என அறிவியலாளர்கள் மதிப்பிடுகிறார்கள். சில இடங்களில் ஐஸ் மூன்று கி.மீ. அளவுக்கு தடிமனமாக உள்ளது. மேலும் உலகில் உள்ள தொண்ணூறு சதவீத ஐஸ்கட்டி, அன்டார்டிகாவில்தான் உள்ளது. அன்டார்டிகாவில் கால்பதித்த முதல் மனிதர் யார்? உலகின் பத்து சதவீத நிலப்பகுதி அன்டார்டிகா கண்டம் கூறலாம். ஐந்தாவது பெரிய கண்டம். யார் முதலில் கால்பதித்த மனிதர் என்பதில் நிறைய சந்தேகங்கள் உள்ளன. 1773-1775 காலகட்டத்தில் கால்பதித்தவர் என பிரிட்டிஷை சேர்ந்த கேப்டன் குக்கை கைகாட்டுகிறார்கள். இவருக்கு அடுத்து நாதேனியல் பால்மர், பால்மர் பெனிசுலா என்ற இடத்தைக் கண்டறிந்தார். அவருக்கு அப்போது அது ஒரு தனி கண்டம் என்பது தெரியாது. அந்த ஆண்டு 1820. அவருக்குப் பிறகு , அதே ஆண்டில், ஃபேபியன் காட்டிலெப் வோன் பெலிங்ஹாசன் என்பவர் அங்கு சென்றார். இவருக்கு அடுத்து 1823ஆம் ஆண்டு, ஜான் டேவிஸ் என்பவர், அன்டார்டிகாவிற்கு சென்று வெடல் சீ என்ற பகுதியை கண்டறிந்தார். 1840ஆம் ஆண்டு, அன்டார்டிகா சென்ற சார்லஸ் வில்கெஸ், அதை ஒ...