இடுகைகள்

நோட்ரே டாமே லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

உயிர் பிழைத்த தேனீக்கள்!

படம்
பிரான்சில் நோட்ரே டாமே தேவாலயத்தில் தீவிபத்து நடைபெற்றது.அதில் அங்கிருந்த ஒரு லட்சத்து 80 ஆயிரம் தேனீக்கள் தீ விபத்தில் மாட்டாமல் தப்பித்துள்ளதை உறுதி செய்துள்ளது பறவையியலாளர் குழு. இறைவனுக்கு நன்றி சொல்ல வேண்டும். நெருப்பு தேனீக்களை தீண்டவில்லை என்கிறார் நிக்கோலஸ் ஜீன்ட் என்ற தேனீவளர்ப்பாளர். அங்கு ஒரு கூட்டில் 60 ஆயிரம் தேனீக்கள் என ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட தேனீக்கள் வாழ்ந்து வந்தன. சுவர், விட்டம் என அனைத்தும் தீயால் எரிந்து போனாலும் தேனீக்கள் பிரச்னையின்றி தப்பித்திருக்கின்றன. நகரம் முழுக்க 700 தேனீ வளர்ப்பிடங்கள் உள்ளன. கதீட்ரலில் மூன்று இருந்தன. கதீட்ரல் விபத்தானது நிச்சயம் வருத்தமான செய்திதான். அதேசமயம், தேனீக்கள் உயிர் பிழைத்தது எனக்கு மகிழ்ச்சி என்கிறார் நிக்கோலஸ்.  நன்றி: கார்டியன்

நெருப்புக்கு பலியான கதீட்ரல்!

படம்
பிரான்சின் பாரிசிலுள்ள பழமையான கதீட்ரல் தீ விபத்தால் உருக்குலைந்து போயுள்ளது. இதனை திரும்ப சரி செய்வதற்கான முயற்சிகளை அரசு எடுக்கவுள்ளது. அதனைப் பற்றிய செய்திகளைப் பார்த்து விடுவோம். ஓராண்டுக்கு பதிமூன்று மில்லியன் பார்வையாளர்கள் நோட்ரே டேமுக்கு வருகை வந்துள்ளனர்.  தீ விபத்திலிருந்து மீள தேவைப்படும் தொகை 6.8 மில்லியன் டாலர்கள்.  தொன்மையான கட்டிடத்தை மீட்டு மறு உருவாக்கம் செய்ய ஆப்பிள், லோரியல் ஆகிய நிறுவனங்கள் கொடுக்க முன்வந்துள்ள தொகை 790 மில்லியன் டாலர்கள்.  சேதமான ஓக் மரங்கள், பதிமூன்றாம் நூற்றாண்டைச் சேர்ந்தவை.  பிரெஞ்சு புரட்சியின்போது 28 மன்னர்களின் சிலைகள் உடைத்து நொறுக்கப்பட்டன.  நன்றி: க்வார்ட்ஸ் படம்: ஏபிசி நியூஸ்