நெருப்புக்கு பலியான கதீட்ரல்!
பிரான்சின் பாரிசிலுள்ள பழமையான கதீட்ரல் தீ விபத்தால் உருக்குலைந்து போயுள்ளது. இதனை திரும்ப சரி செய்வதற்கான முயற்சிகளை அரசு எடுக்கவுள்ளது. அதனைப் பற்றிய செய்திகளைப் பார்த்து விடுவோம்.
ஓராண்டுக்கு பதிமூன்று மில்லியன் பார்வையாளர்கள் நோட்ரே டேமுக்கு வருகை வந்துள்ளனர்.
தீ விபத்திலிருந்து மீள தேவைப்படும் தொகை 6.8 மில்லியன் டாலர்கள்.
தொன்மையான கட்டிடத்தை மீட்டு மறு உருவாக்கம் செய்ய ஆப்பிள், லோரியல் ஆகிய நிறுவனங்கள் கொடுக்க முன்வந்துள்ள தொகை 790 மில்லியன் டாலர்கள்.
சேதமான ஓக் மரங்கள், பதிமூன்றாம் நூற்றாண்டைச் சேர்ந்தவை.
பிரெஞ்சு புரட்சியின்போது 28 மன்னர்களின் சிலைகள் உடைத்து நொறுக்கப்பட்டன.
நன்றி: க்வார்ட்ஸ்
படம்: ஏபிசி நியூஸ்