அம்மை ஊசி போடுங்க - அமெரிக்கா அட்வைஸ்!
படை எடுக்கும் அம்மை!
மீண்டும் தொற்றுநோய்களின் படையெடுப்பு தொடங்கிவிட்டது. இதோடு மக்கள் தொற்றுநோய் தடுப்பூசி பல்வேறு பக்கவிளைவுகளைக் கொண்டது என்று கூறி அதனைத் தவிர்க்கும் செயல்பாடுகளை சில தன்னார்வ குழுக்களுடன் சேர்ந்து செய்து வருகின்றனர்.
பல்வேறு அறிவியல் சோதனைகளிலும் பக்கவிளைவுகள் பாதிப்புகள் உண்டு. ஆனால் இன்று தடுப்பூசிகள் கண்டுபிடிக்கப்பட்டபின்புதான், பல்வேறு தொற்றுநோய்கள் கட்டுப்படுத்தப்பட்டன. ஆனால் இயற்கை மருத்துவர்கள் நோயின் தோற்றமும் முடிவும் குறிப்பிட்ட கால வரையறைக்குட்பட்டன. அது இயல்பாக தோன்றி இயல்பாக முடிவுக்கு வந்துவிடும் என்று கூறுகின்றனர்.
மரணத்தை ஏற்றுக்கொள்வது சரி. ஆனால் இது பக்கத்து வீட்டுக்கார ருக்கு ஏற்படும் வரைதான். உங்கள் தந்தைக்கோ, தாய்க்கோ அம்மை தாக்கும் அபாயம் ஏற்பட்டால், அல்லது தாக்கினால் இதேபோல கொண்ட கொள்கையில் உறுதியோடு இருக்க முடியுமா?
சாத்தியமில்லை. தற்போது அமெரிக்கா 1989 ஆம் ஆண்டு பிறந்தவர்களுக்கும் தடுப்பூசி அவசியம் என்று அறிவித்துள்ளது. இம்மாதம் அமெரிக்கா - இஸ்ரேல் விமானத்தில் பணிப்பெண்ணாக பணிபுரியும பெண்மணிக்கு தொற்றுநோய் கண்டறியப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. இதனால், அம்மைக்கு இடப்படும் தடுப்பூசி மருந்தின் டோஸ் இரண்டாக வழங்கப்படும் என தெரிகிறது.
உடனே டவுன்பஸ்ஸை பிடித்து ஜிஹெச்சுக்கு டிக்கெட் வாங்கிவிடாதீர்கள். 1963 - 67 ஆம் ஆண்டில் ஊசி போட்டவர்களுக்கு வைரஸ் தடுப்பூசியின் செயல்திறன் குன்றியிருக்கும். அவர்கள் மீண்டும் ஊசி போட்டுக்கொள்வது நல்லது என்கிறது அரசு.
காதிருப்போர் கேட்க கடவர்.
படம் மற்றும் செய்தி - நன்றி: கிஸ்மோடோ