மூளையின் எண்ணங்கள் பேச்சாக...
மூளையின் எண்ணங்கள் பேச்சாக...
அண்மையில் மூளையின் எண்ணங்களை அப்படியே நாம் புரிந்துகொள்ளும் விதமாக பேச்சாக்கும் கருவியை ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
கலிஃபோர்னியா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள், இதற்கான ஆராய்ச்சியைத் தொடங்கியுள்ளனர். இதற்காக குழந்தைகளின் கதைகளைத் தேர்ந்தெடுத்து இம்மாடலைத் தேர்ச்சியடையச் செய்துள்ளனர்.
கருத்துகளைப் புரிந்துகொண்டு, அதனைப் பேச்சாக மாற்றுவதற்கான முயற்சிகளை ஆராய்ச்சியாளர்கள் செய்து வருகின்றனர். இந்த ஆராய்ச்சியில், 69 சதவீத வார்த்தைகள் புரிந்துகொள்ளும் விதமாக உள்ளன. மேலும் 25 வாய்ப்புகள் இதற்காக அளிக்கப்பட்டுள்ளன.
உரையாடல்கள் மற்றும் அதன் ஒலிகள் என்பதை வகைப்படுத்துவது கடினமான ஒன்று. மூளையிலுள்ள பேச்சு மையங்கள் சிக்னல்களை ஒலியாக மாற்றுவது ஆகியவற்றை செய்ய முயற்சிக்கிறோம் என்கிறார் கோபால அனுமன்சிபள்ளி.
-நியூஸ்அட்லஸ்