பெண்களுக்கு ஏற்படும் மன அழுத்தத்தை தீர்ப்பது எப்படி?
மருத்துவர் பரிந்துரைக்கும் மருந்துகள் இவர்களுக்கு ஒத்துக்கொள்ளவில்லை; நகரில் நடைபெறும் விபத்துகளில் 47 சதவீதம் இவர்கள் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுகின்றனர். மணிக்கணக்கில் வேலை பார்த்தும் சரியான அங்கீகாரம் கிடைக்கவில்லை என்று கூறினாலே தெரிந்துவிடும். ஆம் இத்தனையிலும் பாதிக்கப்படுவது பெண்கள்தான். அவர்களைப் பற்றிய நூல்தான் இது.
உலகம் முழுக்க கல்வி, அறிவியல், சமூகம், தொழில்துறை சார்ந்த ஆய்வுகளிலிருந்து தரவுகளைத் தேர்ந்தெடுத்து அடுக்கி பெண்களை எப்படி உலகம் மறந்துபோனது என குற்றவுணர்ச்சியைத் தூண்டியுள்ளார் ஆசிரியர்.
உலகில் பல்வேறு விலங்குகளின் உணர்ச்சிகளைக் குறித்து ஆசிரியர் வால் விலாவரியாக எழுதியுள்ள நூல்தான் இது. மாமா எனும் சிம்பன்சியின் வாழ்வு வழியாக அதன் உடல்மொழி, தகவல் தொடர்பு ஆகியவற்றைப் பற்றி விளக்கியிருக்கிறார்.
பெண்களுக்கு ஏற்படும் மன அழுத்தம், அதனை தீர்ப்பது எப்படி என எமிலி, அமேலியா ஆலோசித்து எழுதிய நூல்தான் இது. இதில் பெண்களின் மனது, ஒப்பீடு, சமூகத்தின் அழுத்தம் ஆகியவை தீவிரமான விவாதத்திற்குரியதாக எழுதப்பட்டுள்ளது.
- கோமாளிமேடை டீம்