காமெடி செய்த திருடர்கள்!



New Illustrations by Oleg Gert – Inspiration Grid | Design Inspiration




காமெடி திருடர்கள்!



கம்பி எண்ண வைத்த கழுதை!


கொலம்பியாவில் நடந்த கூத்து இது. மளிகைக் கடை ஒன்றை திருடர்களை சுழி சுத்தமாக கத்தி கபடாக்களை வைத்து கொள்ளையடித்தனர். அதெல்லாம் பிரச்னையில்லை. கல்லாவில் உள்ள பணத்தைக்கூட துடைத்து எடுத்தாயிற்று. ஆனால், போலீசில் பத்து நிமிடங்களில் மாட்டிக்கொண்டார்கள்.

உணவு மற்றும் ரம் பாட்டில்களை திருடிய கொள்ளையர்கள் அதனை மோட்டார் வண்டியில் ஏற்றியிருக்கலாம். எகானாமி முக்கியம் என்று நினைத்தார்களோ, மேக் இன் கொலம்பியா திட்டத்தை பின்பற்றலாம் என நினைத்தார்களோ மாட்டிக்கொண்டார்கள். காரணம் , கழுதைதான். ஏராளமாக சுமையை ஏற்ற, அது பச்சாவோ, ஆபத்து, ஐம் இன் டேஞ்சர் என அத்தனை மொழிகளிலும் ஆபத்தை கத்தி கதறி உலகிற்கு சொல்ல, அருகில் நின்ற போலீஸ் உஷாராகி திருடர்களை அடித்து உதைத்து வெளுத்து விட்டனர்.

முக்கியமான தகவல் அந்த கழுதையின் பெயர் எக்ஸேவி.


ரெடியா இருங்க ப்ரோ!


நம் நண்பர்களில் சிலர் கூட இப்படித்தான். எங்கு செல்லும்போதும் முன்னேற்பாடுகளை அடுக்கிக்கொண்டே இருப்பார்கள். பஸ் இருக்குமா, பாத்ரூமில் பக்கெட் வச்சுருப்பாங்களா, சில்லறை வச்சிருக்கியா, வழி தெரியுமா என பக்காவாக பிளான் போடுவார்கள். பிராக்டிக்கலாக இது எதுவும் நடக்காது. ஆல்பெர்ட் பெய்லியும் கூட அப்படித்தான். கனெக்டிகட்டில் உள்ள ஃபேர்பீல்டில் உள்ள வங்கியில் ஆட்டையைப் போட ஆசையாக இருந்தார்.

ஆனால் தான் உள்ளே போகும்போது பேங்க் அதற்கு தயாராக இருந்தால், நேரம் விரயமாகாதே என ஐன்ஸ்டீனைவிட ஆழமாக யோசித்தார். அங்குதான் சனி வந்து உட்கார்ந்து தொலைத்தது. கையை வெச்சுக்கிட்டு சும்மா இருக்காமல், ஹலோ பேங்கா, நான் இத்தனை மணிக்கு அங்க கொள்ளையடிக்க வரலாம்னு இருக்கேன். நான் ரெடி நீங்க ரெடியா?  என்று பக்குவமாக கேட்டிருக்கிறார்.

சும்மா இருப்பார்களா பேங்க்காரர்கள்? வட்டி கட்டுபவனையே வாயில் அடித்து போஸ்டர் ஒட்டி அவமானப்படுத்துவார்கள். திருடனை விடுவார்களா? உடனே போலீஸ் படையைக் கூட்டி வந்து தயாராக இருந்தனர். ஆசையோடு பேங்க் வந்த ஆல்பெர்ட்டை போலீஸ் ஆன் தி ஸபாடில் காரில் அள்ளிப்போட்டு பண்றது திருட்டு போன் போட்டு ஆர்டர் பண்ணி திருடுவியா என குமுறுகஞ்சி காய்ச்சியது. வங்கி ஹேப்பி அண்ணாச்சி.

துப்பாக்கியா? பேக்கா?

லண்டனிலுள்ள ஹாலிஃபேக்ஸ் என்ற வங்கி. பரபரப்பாக இயங்கிக்கொண்டிருக்கிறது. திடீரென ஒரு சத்தம். துப்பாக்கியைக் காட்டியபடி ஒருவர் கேஷியரை மிரட்டுகிறார். அவரும் பணிந்து பேக்கைக் கொடுங்க என்று சொல்ல, அசைன்மெண்ட் பதற்றத்தில் சிறிய தவறு செய்ய அந்த சம்பவமே காமெடி ஆகிவிட்டது. ஆம். பேக்குக்கு பதிலாக துப்பாக்கியை கேஷியரிடம் மாற்றிக் கொடுத்துவிட்டார்.

டக்கென சுதாரித்து துப்பாக்கியை பிடுங்க முயன்றும் முடியவில்லை. எனவே திருடர் டக்கென் பேக்கை கீழே போட்டுவிட்டு ஊழியர் வைத்திருந்த சைக்கிளைத் திருடிக்கொண்டு ஓடிவிட்டார்.

நன்றி: லிஸ்ட்வெர்ஸ்.காம்
படம்: பின்டிரெஸ்ட்












பிரபலமான இடுகைகள்