இடுகைகள்

மக்கள் கருத்து லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

கருத்து சொல்லுங்க பாஸ்! - வற்புறுத்தப்படும் கார்ப்பரேட் நிறுவனங்கள்!

படம்
பன்னாட்டு நிறுவனங்களின் அரசியல் நிலைப்பாடு பிரிட்டிஷ் ஆட்சிக்காலத்தில் வணிகம் தடையில்லாமல் நடைபெற என்ன அவசியமோ அந்த காரியங்களை ஆங்கிலேயர் செய்தனர். அதில் சில நல்ல விஷயங்களும் நடந்தன. உடன்கட்டை ஏறும் பழக்கம் ஒழிப்பு போன்ற மூடநம்பிக்கை சார்ந்த பிற்போக்குதனங்களும் குறைந்தன. அதேநேரம் இந்த செயற்பாடுகள் கூட படித்த இந்தியர்களின் செல்வாக்கு, உழைப்பு காரணமாகவே சட்டமாக்கப்பட்டன. அதேசமயம் அன்று நிலவிய சமூகப்பழக்க வழக்கங்கள் பற்றி எந்த வர்த்தக நிறுவனங்களும் கவலைப்படவும் இல்லை. அதுபற்றி கருத்துகளைச் சொல்லவும் இல்லை. சமூக வலைத்தளங்கள் வந்தபிறகு காட்சிகள் அனைத்தும் மாறின. வலைத்தளத்தில் பல்வேறு விளம்பரங்கள் இடம்பெறத்தொடங்கின. இதனை விளம்பரத்துபவர்களுக்கு இன்ஃபுளுயன்சர் என்று பெயர். இதற்கு பன்னாட்டு நிறுவனங்கள் ஒப்பந்தம் செய்துகொண்டு பணமும் வழங்குகின்றன. இன்று தேசியமயம், வலதுசாரி பாபுலிச கோஷங்கள் உச்சம் பெற்றுவருகின்றன. இந்நிலையில் பல்வேறு நிறுவனங்களும் அந்தந்த நாட்டு அரசுகளின் நிலைப்பாடு, அல்லது அனைவரும் ஏற்கும்படியான நிலைப்பாடுகளை தங்களின் நிறுவன மதிப்பு கெடாமல் எடுத்து வருகின்றன. முன