இடுகைகள்

நவீன சிற்பி லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

நவீன ஜனநாயக இந்தியாவிற்கான கனவு எளிதாக இருக்கப்போவதில்லை! - ஜவாகர்லால் நேரு

படம்
              விதியுடன் ஒரு போராட்டம் ! பல்லாண்டுகளுக்கு முன்னர் இந்தியா விதியுடனான போராட்டத்தை தொடங்கியது . அதற்கான உறுதிமொழியையும் எடுத்தது . இன்று நாம் அதே நிலையை எட்டியுள்ளோம் . முன்னர் நாம் செய்த உறுதிமொழியைப் போல அல்லாமல் இம்முறை தற்போதைய சூழலுக்கு ஏற்ப போல முடிவெடுக்கலாம் . முழு உலகமும் அமைதியாக உறங்கும் நேரம் இந்தியா தனது சுதந்திரம் மற்றும் வாழ்க்கைக்காக விழித்திருக்கிறது . இத்தனை ஆண்டுகாலமாக கஷ்டப்பட்டு வந்த மக்கள் பழைய காலம் முடிந்து அனைவரும் புதிய உலகில் நுழைகிறோம் . நாம் இந்தியாவிற்கான சேவைக்கு நம்மை ஒப்படைத்துக்கொள்வதோடு , ஏற்பட்டுள்ள பாதிப்புகளை தீர்க்கவும் உறுதிபூணவேண்டும் . இந்தியாவின் வரலாற்றில் நாம் கண்டறிய முடியாத நூற்றாண்டுகளாக வெற்றியும் தோல்வியும் உள்ளன . அதிர்ஷ்டம் அல்லது துரதிர்ஷ்டமான நிகழ்ச்சிகள் நடந்தபோதும் இந்தியா தனது பார்வையை இழக்கவில்லை . அவற்றின் வழியே தன்னை மீண்டும் கண்டுபிடித்துக்கொண்டது . நாம் இன்று இந்தியாவின் சாதனைக்காக கொண்டாடிக்கொண்டிருந்தாலும் இன்னும் பெரும் சாதனைகள் எதிர்காலத்தில் நமக்காக காத்திருக்கின்றன . எதிர்காலத்தில

விபத்தால் இந்து - நேருவின் கதை- சசி தரூர்

படம்
நேரு: தி இன்வென்ஷன் ஆஃப் இந்தியா சசி தரூர் பெங்குயின் புக்ஸ் ரூ.299 (அமேஸானில் 270) கல்வியால் ஆங்கிலேயர் கலாசாரத்தால் முஸ்லீம் விபத்தால் இந்து 1889 ஆம் ஆண்டு நேரு பிறப்பு முதல் 1964 ஆம் ஆண்டுவரை நீளும் நூல் இது. சசி தரூரின் பார்வையில் நீளும் சுயசரிதை, பிற சுய சரிதைநூல்களிலிருந்து எங்கு வேறுபடுகிறது. நேருவின் அரசியல் வாழ்க்கை, அதன் பிரச்னைகளைப் பற்றி பலரும் விவாதித்து உள்ளனர். அதேயளவு அவரின் தனிப்பட்ட வாழ்க்கை, எங்கேயும் விட்டுக்கொடுக்காத சோசலிச கொள்கை, பொருளாதாரக் கொள்கைகளில் அதன் விளைவு, தனிப்பட்ட அவரது குணம், போஸ், காந்தி, படேல், தாண்டன் ஆகியோரிடம் அவரின் உறவு ஆகியவற்றை வரலாற்று நிகழ்ச்சிகளோடு, விமர்சனங்களையும் கலந்து எழுதியுள்ளார் சசி தரூர். நேரு செய்த அடிப்படைக் கட்டமைப்பு சார்ந்த பணிகளைக் கூறும்போது உடனே எட்வினா மவுன்ட்பேட்டன், பத்மஜா நாயுடு ஆகியோருக்கு அவர் எழுதிய காதல் கடிதங்கள், உறவு ஆகியவற்றை எதிர்கட்சிகள் உள்ளிட்ட பலரும் பேசுவார்கள். அதையும் தரூர் விட்டு வைக்காமல் எடுத்து எழுதியிருக்கிறார். அதோடு முக்கியமான பார்வை, நூல் 2003 ஆம் ஆண்டு வெளியா