இடுகைகள்

ரவிசங்கர் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

பக்தகோடிகளை நம்பித் தொடங்கப்படும் சாமியார்களின் கார்ப்பரேட் நிறுவனங்கள்! - பக்தியில் கொள்ளை லாபம்

படம்
  மருத்துவப் பொருட்கள், அழகுசாதனப் பொருட்களை விற்க சினிமா பிரபலங்கள் அதிகம் பயன்படுத்தப்படுகிறார்கள். அத்தோடு கூடுதலாக, துறை சார்ந்த மருத்துவர்களையும் பெருநிறுவனங்கள் பேச வைக்கின்றன. இதனால், மக்களுக்கு இந்த பொருட்களின் மீதுள்ள சந்தேகங்கள் குறையும். பால் சார்ந்த ஊட்டச்சத்து பானங்களில் சர்க்கரை அதிகம் இருக்கும். ஆனால், உண்மையில் அவர்கள் பாட்டிலில், பாக்கெட்டில் அச்சிட்டுள்ள அளவை விட அதிகமாக சர்க்கரை சேர்க்கிறார்களா இல்லையா என்பது யாருக்கும் தெரியாது. மேற்குலகில் எப்படியோ, இந்தியாவில் இதுபற்றிய பொது அறிவு என்பது மிகவும் குறைவு. இதுதொடர்பான உண்மையை இன்ஸ்டாகிராம் அல்லது ஃபேஸ்புக்கில் உள்ளவர் ஆராய்ச்சி செய்து வெளிக்கொண்டு வந்தால் கூட ஊட்டசத்து பான நிறுவனங்கள், குறிப்பிட்ட ஆய்வாளர் மீது வழக்கு தொடுத்து நீதிமன்றத்திற்கு இழுப்பார்கள். ஊட்டச்சத்து பானங்கள், காபித்தூளை விற்கும் நிறுவனங்கள் வேளாண்மை ஆராய்ச்சி நிலையத்திற்கு நிதியளித்து தங்களது விற்பனை பொருட்கள் சார்ந்த ஆய்வுகளை செய்ய வற்புறுத்துகிறார்கள்.   இதன்மூலம் காபி அல்லது ஊட்டச்சத்து பானம் பற்றிய எதிர்மறை செய்திகள் குறைந்து நேர்மறை செய்திக

கலைத்துறையில் சாதித்த இந்தியா! இந்தியா 75

படம்
  கலைகளில் சாதனை சாகித்திய அகாதெமி, இந்தியாவில் நூல்களை பல்வேறு மொழிகளில் வெளியிட்டு வரும் நிறுவனம். இந்த நிறுவனம் அதிகாரப்பூர்வமாக 1953ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. நாட்டில் உள்ள பல்வேறு மாநிலங்களின் கலாசாரங்களை சாகித்திய அகாதெமி ஒன்றிணைக்கிறது. இதுவரை ஆறாயிரத்திற்கும் மேற்பட்ட நூல்களை பதிப்பித்திருக்கிறது. ஆண்டுதோறும் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த எழுத்தாளர்கள், கவிஞர்கள், இளைய எழுத்தாளர்கள், மொழிபெயர்ப்பாளர்களை கௌரவித்து வருகிறது. போடோ, டோக்ரி, கொங்கணி போன்ற மொழிகளிலுள்ள இலக்கியப் பொக்கிஷங்களையும் அனைவரும் அறியும்படியாக மொழிபெயர்க்கும் பணியை சாகித்திய அகாதெமி செய்கிறது.  தூர்தர்ஷன் அறிமுகம் இன்று அனைவரும் ஓடிடியில் வெளியாகும் படங்களை பார்க்கவும், இணையத்தில் உள்ள வெப் சீரிஸ்களையும் பார்த்து வருகிறோம். ஆனால் இந்தியாவில் தொடக்கத்தில் தூர்தர்ஷன்தான் அனைவருக்கும் ஒரே டிவியாக இருந்தது. 1959ஆம்ஆண்டு தூர்தர்ஷன் தொடங்கப்பட்டது. பல்வேறு தொலைக்காட்சிகளை தொடங்கி மூடினாலும் கூட தூர்தர்ஷனிடன்  21 சேனல்கள் உள்ளன. இவை அனைத்தும் இலவசமாக வழங்கப்படுகிறது. கிராமங்களில் தூர்தர்ஷன் மட்டுமே ஒரே டிவியாக முதலில்

இந்தியாவில் நடக்கும் குற்றங்களுக்கு அமெரிக்காவில் சென்று புகார் கொடுக்க முடியாது! - ரவிசங்கர் பிரசாத், ஐடி அமைச்சர்

படம்
                ரவிசங்கர் பிரசாத் , ஐடி அமைச்சர் சமூக வலைத்தளங்களை முறைப்படுத்தும் சட்டத்தை மத்திய அரசு அமல்படுத்திய உள்ளது . இதைப்பற்றி அமைச்சர் பேசினார் . மத்திய அரசு கொண்டு வரும் சட்டத்தை எதிர்த்து சமூக வலைத்தள நிறுவனங்கள் நிற்க காரணம் என்ன ? இந்தியா ஜனநாயக நாடு . சமூக வலைத்தள நிறுவனங்கள் இங்கு முதலீடு செய்து வருமானம் ஈட்டத்தான் வருகின்றன . அவர்கள் குடிமக்களுக்கு நிறைய வாய்ப்புகளை வழங்குகிறார்கள் என்பது உண்மைதான் . ஆனால் சமூக வலைத்தளங்கள் இந்தியாவில் அரசியலமைப்புக்கு உட்பட்டு நடைமுறைப்படுத்தப்படும் சட்டங்களை கடைப்பிடித்துதான் ஆகவேண்டும் . நீங்கள் கூறுகிறபடி விதிகளை அமைத்தால் அரசை விமர்சிக்கும் குரலகளை கூட எளிதாக தணிக்கை செய்யமுடியுமே ? மத்திய அரசு அமல்படுத்தியுள்ள விதிகள் , சமூக வலைத்தளங்களை கையாள்வதற்கானவை அல்ல . அரசு , பிரதமரை விமர்சிக்கும் விமர்சனங்களை அனுமதிக்கிறோம் . ஆனால் சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்தி அவதூறு செய்வது , அதனை தவறாக பயன்படுத்துவது ஆகியவற்றை கட்டுப்படுத்த நினைக்கிறோம் . இளம்பெண்களை மார்பிங் செய்து புகைப்படங்கள