இடுகைகள்

பான்கார்ட் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

பான் கார்ட் திருத்தம் - சிறப்பு சித்திரவதை அனுபவம்

படம்
              பான் கார்ட் திருத்தம் - சிறப்பு சித்திரவதை அனுபவம் முன்னர் வேலை செய்த நாளிதழில் பிஎஃப் பணத்தைப் பெற்றுத்தர உதவுவதாக மனித வள மேலாளர் *****ஜா என்பவர் கூறினார். இதெல்லாம் வேலை செய்யும்போதுதான். வேலையை விட்டு விலகியபிறகு, சொன்ன வாக்குறுதியை நினைவுபடுத்தியபோது அவருக்கு எக்கச்சக்கமாக கோபம் வந்துவிட்டது. உதவி சரி, அதற்காக வேலை செய்யச்சொன்னால் கோபம் வருமா இல்லையா? பெயருக்கு ஒரு கேள்வியை கேட்டுவிட்டு உடனே போனை அணைத்துவிட்டார். பின்னாளில் மின்னஞ்சல் அனுப்பியபோதும் எந்த பதிலுமில்லை. எல்லோரும் இருக்குமிடத்தில் இருப்பதுதான் காரணம் வேறென்ன? அப்போதுதான் பான் கார்டை கவனிக்க நேரிட்டது. அதில் எனது பெயரை இரண்டாக உடைத்து அச்சிட்டிருந்ததைக் கண்டேன். அதை கவனமாக பார்த்து திருத்த நினைக்கும்போது, கார்டை வாங்கி பத்தாண்டுகள் ஆகிவிட்டது நினைவுக்கு வந்தது. 2014ஆம் ஆண்டு, முன்னாள் பால்ய நண்பரை சந்திக்க நேரிட்டது. அவரது, வாடிக்கையாளர் சேவை மைய கணினியில் வேகமாக பான்கார்ட் அப்ளிகேஷனை நிரப்பினேன். பிறகு, வீட்டுக்கு வந்து வங்கி சென்று டிடி எடுத்து டெல்லி அனுப்பி பெற்ற அட்ட...