இடுகைகள்

வீழ்ச்சி லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

இந்தியாவிற்கு தேர்தலை இலக்காக கொள்ளாத தலைமை தேவை! - ரகுராம் ராஜன், பொருளாதார வல்லுநர்

படம்
  பொருளாதார வல்லுநர், முன்னாள் ரிசர்வ் வங்கி தலைவர் ரகுராம்ராஜன்  நேர்காணல்  உலகப் பொருளாதாரம், இந்தியாவின் நிலை என இரண்டையும் எப்படி பார்க்கிறீர்கள்? ஆண்டு தொடங்கும்போது உலகப்பொருளாதாரத்தின் முன் நிறைய கவலைகள் இருந்தன. இந்தியாவைப் பற்றி கவலைப்படவும் நிறைய விஷயங்கள் உள்ளன. அமெரிக்க பொருளாதாரம் மெல்ல வேகம் இழந்ததற்கான அறிகுறிகளை கண்டோம். இந்த பாதிப்பு கடுமையாக அல்லது மென்மையாக இருக்குமா என்பதுதான் கேள்வி. கடினமாக இருக்கும் என்பதுதான் அடையாளம் கண்ட விஷயம். எனவே, முழு உலகமும் இந்த வழியில் பயணிக்கிறது.  பெருந்தொற்று காலத்தில் இருந்து சீன பொருளாதாரம் பெரிதாக முன்னேற்றமடையவில்லை. ஐரோப்பிய பொருளாதாரமும் கூட வேகம் பெறவில்லை. தொய்வடைந்துதான் உள்ளது. இந்தியாவைப் பார்த்தால், இந்தாண்டு சிறிது வளர்ச்சி பெற வாய்ப்புள்ளது. ஆனால் அடுத்த ஆண்டு நிறைய சிக்கல்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். நாம் இந்த விஷயங்கள் எந்தளவு பாதிப்பை ஏற்படுத்தும் என காத்திருந்துதான் பார்க்கவேண்டும்.  எந்தெந்த விஷயங்களை, முக்கிய அம்சங்களை கவனமாக பார்க்கவேண்டும் என நினைக்கிறீர்கள்?  2021ஆம் ஆண்டு தொடங்கி வெளிநாட்டு முதலீடுகள் குற

செபி அமைப்பு பற்றி அறிவீர்களா?

படம்
தெரியுமா? இந்திய அரசு, 1988 ஆம் ஆண்டு பங்குச்சந்தைகளை முறைப்படுத்தும் நோக்கில் செபி (Securities and Exchange Board of India) அமைப்பைத் தொடங்கியது. 1992 ஆம் ஆண்டு நாடாளுமன்றத்தில் செபிக்கான மசோதா தாக்கல் செய்யப்பட்டது. அதிலிருந்து   முறையான அரசு அமைப்பாக வடிவம் பெற்று இயங்கத் தொடங்கியது. செபி அமைப்பின் முதன்மை அலுவலகம் மும்பையில் அமைந்துள்ளது.  டில்லி, கோல்கட்டா, அகமதாபாத், சென்னை ஆகிய இடங்களிலும் இந்த அமைப்புக்கு கிளை அலுவலகங்கள் உண்டு. செபி அமைப்பின் குழுவில் மத்திய நிதித்துறை, ஆர்பிஐ வங்கி ஆகிய அமைப்புகளைச் சேர்ந்த உறுப்பினர்கள் இடம்பெற்றிருப்பார்கள்.  ?

அரசு பொதுத்துறை பங்குகளை விற்பதே சரியானது! - அரவிந்த் பனகரியா

படம்
நியூஸ்கிளிக் வாகனத்துறை, நுகர்வுப்பொருட்கள் ஆகியவற்றின் விற்பனை வீழ்ச்சி இந்தியப் பொருளாதாரத்தைத் தடுமாற வைத்துள்ளது. ஆனால் அரசு, பொதுத்துறை நிறுவனங்களிலுள்ள பங்குகளை குறைத்துக்கொண்டால் இழப்பிலிருந்து தப்பிக்க முடியும் என பொருளாதார வல்லுநர்கள் கூறிவருகின்றனர். வாகனத்துறை உற்பத்தி தேக்கமடையத் தொடங்கியதும், அரசு நிதியளித்து உதவ வேண்டும் என்ற குரல்கள் அத்துறையிலிருந்து எழத் தொடங்கிவிட்டன. உண்மையில் அரசு தாராளமயமாக்கல் கொள்கைக்காக இறக்குமதிக் கொள்கைகளைத் தளர்த்தியுள்ளது. ஆனாலும் உள்நாட்டு உற்பத்தியைக் காக்க, அதிகளவு சுங்கவரியை வசூலித்து வருகிறது. இதன்காரணமாகவே, இந்திய வாகனத்துறை உற்பத்தி தேக்கத்தால் பெரியளவு பாதிக்கப்படவில்லை. வெளிநாடுகளிலிருந்து இறக்குமதியாகும் சொகுசு கார்களுக்கு 100 சதவீத சுங்க வரி உண்டு. அதிலும் 28 லட்சத்திற்கும் குறைவான கார்களுக்கு 60 சதவீத வரியும், பயன்படுத்திய கார்களுக்கு 125 சதவீத வரியும் இந்திய அரசு விதிக்கிறது. இதன் விளைவாக, சிறிய கார்களை உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகள் இந்தியாவில் இன்றும் மூடப்படாமல் இயங்கி வருகின்றன. பொருளாதார தேக்கம் என்பது