அரசு பொதுத்துறை பங்குகளை விற்பதே சரியானது! - அரவிந்த் பனகரியா






Image result for public sector shares
நியூஸ்கிளிக்



வாகனத்துறை, நுகர்வுப்பொருட்கள் ஆகியவற்றின் விற்பனை வீழ்ச்சி இந்தியப் பொருளாதாரத்தைத் தடுமாற வைத்துள்ளது. ஆனால் அரசு, பொதுத்துறை நிறுவனங்களிலுள்ள பங்குகளை குறைத்துக்கொண்டால் இழப்பிலிருந்து தப்பிக்க முடியும் என பொருளாதார வல்லுநர்கள் கூறிவருகின்றனர்.
வாகனத்துறை உற்பத்தி தேக்கமடையத் தொடங்கியதும், அரசு நிதியளித்து உதவ வேண்டும் என்ற குரல்கள் அத்துறையிலிருந்து எழத் தொடங்கிவிட்டன. உண்மையில் அரசு தாராளமயமாக்கல் கொள்கைக்காக இறக்குமதிக் கொள்கைகளைத் தளர்த்தியுள்ளது. ஆனாலும் உள்நாட்டு உற்பத்தியைக் காக்க, அதிகளவு சுங்கவரியை வசூலித்து வருகிறது.

இதன்காரணமாகவே, இந்திய வாகனத்துறை உற்பத்தி தேக்கத்தால் பெரியளவு பாதிக்கப்படவில்லை. வெளிநாடுகளிலிருந்து இறக்குமதியாகும் சொகுசு கார்களுக்கு 100 சதவீத சுங்க வரி உண்டு. அதிலும் 28 லட்சத்திற்கும் குறைவான கார்களுக்கு 60 சதவீத வரியும், பயன்படுத்திய கார்களுக்கு 125 சதவீத வரியும் இந்திய அரசு விதிக்கிறது. இதன் விளைவாக, சிறிய கார்களை உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகள் இந்தியாவில் இன்றும் மூடப்படாமல் இயங்கி வருகின்றன.

பொருளாதார தேக்கம் என்பது அமெரிக்க, சீனா, ஜப்பான்  என உலக நாடுகள் முழுக்க சங்கிலி விளைவாக நடைபெறுகிறது. அதைப் புரிந்துகொண்டு வாகன நிறுவனங்கள் தம் உற்பத்திச்செலவைக் குறைத்து வாகனங்களை விற்க முயலவேண்டும். அரசு சலுகை தந்தால், வரிகட்டும் மக்களின் தலையில் கூடுதல் சுமைதான் அதிகரிக்கும். இன்று நஷ்டம் என்றாலும் இதற்கு முன்பு வாகனத்துறையில் லாபம் கிடைத்திருக்கும்தானே? உற்பத்தி குறைந்த லாபமற்ற தொழிற்சாலைகளை மூடிவிட்டு, வாடிக்கையாளர்களுக்கு சலுகைகளை அறிவித்து விற்பனையை அதிகரிக்கலாம்.

ஊடகங்கள் வாகனத்துறை சரிவு என்கின்றன. ஆனால் ஸ்மார்ட்போன்கள், ஸ்பீக்கர்கள், குளிர்சாதனப்பெட்டி, துணிதுவைக்கும் எந்திரங்கள் ஆகியவற்றின் விற்பனை ஜூன் 2019 வரை(கடந்த ஆண்டை விட) சிறப்பாக அதிகரித்துள்ளன. “பட்டியலிட்ட பொதுத்துறை நிறுவனங்களில் அரசு தன் 65 சதவீத பங்கை 49 சதவீதமாக குறைப்பது அவசியம். துறைரீதியான சீர்திருத்தங்களை அரசு செய்வது சரிவிலிருந்து துறைகளை மீட்கும்” என்கிறார்  கொலம்பிய பல்கலைக்கழக பொருளாதாரப் பேராசிரியர் அரவிந்த் பனகரியா.

கா.சி.வின்சென்ட்.