நூடுல்ஸின் கதை! - உலகம் முழுக்க சாப்பிடப்படும் மலிவு விலை உணவு
தெரிஞ்சுக்கோ!
நூடுல்ஸ் கதை!
ஜப்பானில் போருக்குப் பிறகு 1950 ஆம் ஆண்டு இன்ஸ்டன் நூடுல்ஸ் அறிமுகமானது. முதலில் அதனை காஸ்ட்லி ஐட்டமாகவே மக்கள் பார்த்தனர். இன்று மிக மலிவான உணவாக, வெளிநாடுகளுக்கு ஏற்றுமதியாகும் அளவுக்கு நூடுல்ஸ் தயாரிக்கப்பட்டு வருகிறது.
உலகம் முழுவதும் ராமன் நூடுல்ஸ், பெருமளவு விற்கப்படுகிறது. பிளாட்பார்ம் உணவு என கிண்டலாக கூறப்படுகிறது. ஆனால், இருபதே நிமிடத்தில் தயாரித்து பசியாற்றும் உணவாக உலகெங்கும் சாதனை படைத்துள்ள உணவு இது.
சாதாரண ராமன் நூடுல்ஸ் பாக்கெட்டில் உள்ள சோடியத்தின் அளவு 1820 மில்லி கிராம்.
அமெரிக்காவின் எஃப்டிஏ பரிந்துரைத்துள்ள சோடியத்தின் அளவு 2300 மில்லி கிராம்.
அமெரிக்காவின் நூடுல்ஸ் மார்க்கெட் மதிப்பு 1.7 பில்லியன் ஆகும்.
தொண்ணூறுகளில் பரிமாறப்பட்ட இன்ஸ்டன்ட் நூடுல்ஸின் அளவு - 100 பில்லியன்.
நூடுல்ஸ் மியூசியத்திலுள்ள நூடுல்ஸ் வேறுபட்ட வகைகள் - 5,460
தோராயமான நூடுல்ஸ் பாக்கெட் ஒன்றின் விலை 30 சென்ட்.
டோக்கியோவிலுள்ள நூடுல்ஸ் உணவகங்களின் எண்ணிக்கை 5 ஆயிரம்.
ஒரு பாக்கெட்டிலுள்ள நூடுல்ஸின் தோராய நீளம் 51 மீட்டர்.
ஜார்ஜியாவிலுள்ள ஃபாயெட்லே வில்லாவில் 98 ஆயிரம் டாலர்கள் மதிப்பிலான நூடுல்ஸ் பாக்கெட்டுகள் திருடப்பட்டன. இதன்மூலம், 3 லட்சம் உணவுகளை சமைக்க முடியும்.