இடுகைகள்

சேவை லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

வங்கி ஓடிபியில் பணியாளருக்கு ரேட்டிங்கை வழங்குவது எப்படி? பத்து நிமிட வழிகாட்டி கட்டுரை

 யாவரும் ஏமாளி எக்ஸ்டென்டட் - பலவித அனுபவங்கள்  நான் கணக்கு வைத்துள்ள வங்கி விவசாயிகளுக்கானது. இப்போது மெல்ல படித்த வர்க்கத்தினருக்காக கட்டாயமாக மாறி வருகிறது. படிக்காத வாடிக்கையாளர்களைக் கூட மிரட்டி கட்டாயப்படுத்தி கடன் அட்டையை திணித்து அதன் வழியாக பணத்தை எடுக்கச் சொல்கிறார்கள். அதற்கான சேவைக் கட்டணம் அவர்களுக்கு முக்கியமானதாக படக்கூடும். ஊழியர்களுக்கு ஆண்டு இலக்கு கூட நிர்ணயிக்கப்பட்டிருக்கலாம். இந்தவகையில் அதுவரை வழங்கப்படாத கடன் அட்டை நிறைய பெண்களுக்கு வழங்கப்பட்டது. இந்த பெண்கள் அனைவருமே கல்வியறிவற்றவர்கள். அதுவரை படிவத்தில் காசு வேண்டுமென்றால் அதை வங்கியிலுள்ள சீருடை தரித்த பெண்களிடம் எழுதி வாங்கிக் கொண்டு வந்து காசாளரிடம் கொடுத்துத்தான் பெறுவார்கள். ஆனால், படிவம் எழுதுகிறவர்களைக் கூட, இன்று கட்டாயப்படுத்தி கொடுத்த கடன் அட்டை இருக்கிறதல்லவா, அதைப் பயன்படுத்துங்கள் என வங்கி அதிகாரிகள் கூச்சலிடுகிறார்கள்.  மாற்றங்கள் இந்திய சமூகத்தில் மெதுவாகத்தான் வரும் என்பதை இவர்கள் மறந்துவிட்டார்கள் போல. இதுபற்றி முன்னாள் பிரதமர் இந்திராகாந்தி ஒருமுறை கூறியிருக்கிறார். நூலகம் ஒன்ற...

வங்கி இணைப்பு -    மாற்றங்கள் இவைதான்!

வங்கி இணைப்பு -    மாற்றங்கள் இவைதான்! இந்திய அரசு, பத்து பொதுத்துறை வங்கிகளை ஒன்றிணைத்து நான்காக மாற்றத் திட்டமிட்டுள்ளது. இதன்மூலம் அதன் வணிகம், கடன் வழங்கும் திறனை உயர்த்த திட்டமிட்டுள்ளது. இந்த நடவடிக்கைள்    முழுமையடைய    தோராயமாக ஓராண்டு பிடிக்கும். வங்கிகள் இணைப்பால் வங்கிகளில் வாடிக்கையாளர்களாக உள்ளவர்கள் என்ன விஷயங்களைக் கவனிக்க வேண்டும்? 1.பயனர்களின் வங்கிக் கணக்கு எண் மாற்றப்படலாம். ஒன்றிணையும் இரு வங்கிகளில் வெவ்வேறு கணக்கு எண்களை வைத்திருப்பவர்களுக்கு, ஒரே எண் அளிக்கப்படும். தொலைபேசி எண் மேம்படுத்தும் அறிவுரை கூறப்படலாம். 2.வங்கி கணக்கு எண், ஐஎஃப்எஸ்சி எண் ஆகியவையும் கூடுதலாக மாற்றப்படும். வங்கியில் அளிக்கப்பட்ட செக் புத்தகம், கடன்தொகை    தவணை ஆகியவை மாற்றத்தைச் சந்திக்கலாம். 3. வங்கிகள் இணைக்கப்படுவதால், வங்கிக் கிளைகள் குறைக்கப்பட வாய்ப்புள்ளது. இணைக்கப்படும் வங்கிகள் ஒரே பகுதியில் இரண்டு இருந்தால், சிறிய வங்கியின் கிளைகள் மூடப்படும். ஏடிஎம் வசதிகள் குறைக்கப்பட வாய்ப்பில்லை. முன்னர் இணைக்கப்பட்ட விஜயா, தேனா, பரோடா வங்கிகளின் ஏடிஎம்கள் இன்றும் செயற்பட்டு வருகின்றன. 4. கட...

கிராமம், பழங்குடிகள் வாழும் இடங்களுக்கு சென்று மருத்துவ மாணவர்கள் சிகிச்சையளிக்க முன்வரவேண்டும் - நேரு உரை

படம்
        மருத்துவத்தில் இந்தியா தொன்மையான வரலாற்றைக் கொண்டுள்ளது. நமக்கு முன்னும் பின்னும் ஏராளமான மருத்துவர்கள், அறுவை சிகிச்சை வல்லுநர்கள் புகழ்பெற்றவர்களாக இருந்திருக்கிறார்கள். அவர்களின் தேவையும் சேவையும் இந்தியாவைக் கடந்தும் கூட இருந்துள்ளது. இன்று யோசிக்கும்போது தொன்மை மருத்துவர்கள், வாழ்ந்து வந்த காலத்தில் அவர்களை மக்கள் எப்படி எதிர்கொண்டிருப்பார்கள் என்ற கேள்வி எனக்குள் எழுகிறது. அவர்கள் திறமையான மருத்துவர்களாக இருந்ததோடு, காலத்தால் மேம்பட்ட சிகிச்சை முறையைக் கையாண்டனர். அவர்கள் விட்டுச்சென்ற பொக்கிஷங்களையே நாம் இன்றும் பயன்படுத்தி வருகிறோம். அதேசமயம், நாம் இன்னும் பழைமையான முறைகளை விட்டு நவீனமாக காலத்திற்கு ஏற்ப மாறவில்லை. மக்களுக்கு அதிகளவு உதவி தேவைப்படும் சமயத்தில் கூட அறிவை புத்துயிர்ப்பு கொண்டதாக மாற்றிக்கொள்ளவில்லை. இப்போது செயல்படவிருக்கும் மருத்துவ நிறுவனம், அறிவியலை அடிப்படையாக கொண்டு இயங்கவேண்டும். பழைமையான முறைகளை பயன்படுத்தக்கூடாது என்று நான் கூறவில்லை. அவை சரியானதாக இருந்து லாபம் கிடைக்க கூடியதாக இருந்தால் அதை பின்பற்றலாம். பழை...

சமூகத்தோடு இணைந்து மக்களோடு கூடி இருந்தால் மகிழ்ச்சி பெருகும்!

படம்
  மூன்று வகையான மகிழ்ச்சியான வாழ்க்கை முறைகள் உள்ளன.  சிறந்த வாழ்கை இதில் தனிப்பட்ட வாழ்க்கை வளர்ச்சி இருக்கும். குறிப்பிட்ட திட்டமிட்ட போக்கில் வாழ்க்கை செல்லும்.  அர்த்தமுள்ள வாழ்க்கை  உங்களின் வாழ்க்கை, வளர்ச்சியை விட சேவைகளை செய்வதே முக்கியமானதாக இருக்கும்.  மகிழ்ச்சியான வாழ்க்கை  சமூகத்தோடு இணைந்து வாழ்ந்து அதன் வழியாக மகிழ்ச்சியை அடைவது... இதில் முதல் இரண்டு விஷயங்கள் இருந்தாலே ஒருவர் மகிழ்ச்சியாக இருக்கலாம். ஆனால் ஒருவர் சமூக உறவுகளை உருவாக்கிக்கொள்வது முக்கியம். இதில் ஒருவர் மகிழ்ச்சியை அதிகளவு பெறுவதற்கு உத்தரவாதம் இல்லை. ஆனால், இந்த அம்சம் இல்லாமலும் மகி்ழ்ச்சி சாத்தியம் இல்லை.  இரண்டாம் உலகப்போருக்கு பிறகு மனிதர்களுக்கு ஏற்படும் மன அழுத்தம், பதற்றம் காரணமாக ஒருவருக்கு ஏற்படும துயரமான மனநிலை பற்றிய ஆராய்ச்சிகள் வேகம் பிடித்தன. உளவியலாளர் மார்ட்டின் செலிக்மன் என்பவர், 'லேர்ன்ட் ஹெல்ப்லெஸ்னெஸ்' எனும் கோட்பாட்டை உருவாக்கினார். இதில், மன அழுத்தம் மூலம் ஒருவருக்கு ஏறபடும் எதிர்மறை நிலைகளை அடையாளம் கண்டார்.  ஒருவரின் வாழ்வில் உள்ள பலத்தை அடையா...

வேலையின்மையால் சேவைப் பணியாற்றும் இளைஞர்களை அடிமையாக நடத்தும் சேவை நிறுவனங்கள்!

படம்
  இன்றைய காலம் சூப்பர் ஆப்களின் காலம். தினசரி தேவைகள் அனைத்தையும் ஆப் மூலம் ஆர்டர் செய்து பெறலாம். தேவை கையில் காசு மட்டும்தான். தமிழ்நாட்டில் உள்ள எந்த ஒரு சிறு, குறு நகரத்தில் இருந்தும் பொருட்களை ஆர்டர்   செய்து பெற முடியும். இணையமும் வளர்ந்திருக்கிறது. சரக்கு போக்குவரத்தும் அந்தளவு வேகமாகியிருக்கிறது.   இந்தியாவின் சில்லறை வர்த்தம் 900 பில்லியன் டாலர்கள் எனில் அதில் இ மார்க்கெட்டின் பங்கு தற்போதைக்கு 6 சதவீதமாக உள்ளது. கடந்த ஆண்டு மட்டும் 200 மில்லியன் மக்கள் ஆன்லைனில் ஏதாவது ஒரு பொருளை ஆர்டர் செய்து வாங்கியுள்ளனர். இப்போதைக்கு இது குறைவுதான் என்றாலும் 2027ஆம் ஆண்டு 500 மில்லியன் மக்கள்   இ மார்க்கெட்டிற்கு நகர்ந்து சந்தை பங்களிப்பை 170 பில்லியனாக அதிகரிப்பார்கள் என வல்லுநர்கள் மதிப்பிடுகிறார்கள். இ மார்க்கெட் இப்படி பெரிதாவது பெரு நிறுவனங்களை அதில் நுழைய வைக்கும். இதனால் சேவை தொழிலாளர்களின் எண்ணிக்கை அதிகமாகும் என கருத்துகள் வெளியாகின்றன. ஏற்கெனவே ரிலையன்ஸ், டாடா ஆகிய நிறுவனங்கள் இத்துறையில் இறங்கிவிட்டன. இதன்விளைவாக பொருட்களின் விலை கட்டுப்பாடு என்பது பெருநி...

உக்ரைனில் டெக் ஸ்டார்ட்அப்பில் சாதிக்கும் தொழிலதிபர்கள்!

படம்
  விக்டோரியா ரெபா, பெட்டர்மீ 2022ஆம் ஆண்டு மார்ச் மாதம்,   உக்ரைன் நாட்டில் டெக் துறை சற்று முன்னேற்றம் கண்டது. 2015-2021 காலகட்டத்தில் , டெக் துறையின் வருமானம் மூன்று மடங்காக உயர்ந்தது. வருமானம் 7 பில்லியன்களாக இருந்தது. இதற்கு அந்த நாட்டிலுள்ள பல்கலைக்கழகங்களும், அங்கு படித்த அறிவியல் மாணவர்களும் அளித்த பங்களிப்புதான் முக்கியமான காரணம். உக்ரைன் நாட்டில் பல்வேறு டெக் நிறுவனங்களின் அலுவலகங்கள் திறக்கப்பட்டன. ஆராய்ச்சி மையங்களும் தொடங்கி இயங்கி வந்தன. இதில் செயற்கை நுண்ணறிவு நிறுவனங்களும் உள்ளடங்கும். ரஷ்யாவின் போர் தொடங்கியதில் பாதிக்கப்பட்டது மக்களும், ராணுவமும் மட்டுமல்ல. அங்கு பெரிய கனவுகளோடு தொழிலைத் தொடங்கிய ஸ்டார்ட்அப் நிறுவனர்களும்தான். பல லட்சம் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டனர். நிறைய தொழில்கள் முடங்கின. ரஷ்யா, உக்ரைனின் அடிப்படை கட்டமைப்புகளை முதலில் தகர்க்கும் வேலையைத் தொடங்கியது.   இதன்படி, மின்சாரம், தொலைத்தொடர்பு ஆகியவற்றை தாக்கத் தொடங்கினர். இதனால் அங்கு தொழில் தொடங்கிய உள்நாட்டு குடிமக்கள் தங்கள் தொழிலுக்கான முதலீடு, வாடிக்கையாளர்கள் என பலவற்...

பெண்களை முன்னேற்றும் காய்கறி டெலிவரி நிறுவனம்- வீல்சிட்டி

படம்
  நடுவில் இருப்பவர் இயக்குநர் செல்வம் விஎம்எஸ் செல்வம் விஎம்எஸ் நிறுவனர், இயக்குநர் வீலோசிட்டி   வீலோசிட்டி தமிழ்நாட்டில் தொடங்கப்பட்டுள்ள காய்கறிகளை விற்கும் நிறுவனம். இதன் தனிச்சிறப்பு, காய்கறிகளை வீட்டுக்கு கொண்டு வந்து கொடுப்பவர்கள் உள்ளூரிலுள்ள பெண்கள் என்பதுதான். இவர்கள் காய்கறிகளை கொண்டு வந்து கொடுக்கும் ஆட்டோ, காய்கறிகளை புத்துணர்ச்சியுடன் வைத்திருக்கும் குளிர்பதன வசதி கொண்டது. அது மின்வாகனம் என்பது உங்களுக்கு மகிழ்ச்சி அளிக்கிற செய்தி. ஆர்டர்களை டெலிவரி செய்யும் பெண்களின் போனில் வீலோசிட்டி ஆப் இன்ஸ்டால் செய்யப்படுகிறது. இந்த ஆப்பில், காய்கறிகளின் புத்துணர்ச்சி, தட்பவெப்பம், வண்டியின் வேகம் ஆகிய நிலைகளை பார்த்து அதற்கேற்ப அவற்றை டெலிவரி செய்ய முடியும்.   இந்த வகையில் பெண்களுக்கு ஒருநாளுக்கு 800- 1000 ரூபாய் வரை பணம் கிடைக்கிறது. இதற்கு அவர்கள் ஆறு மணிநேரம் வேலை செய்தால் போதுமானது. விவசாய பொருட்களை விற்கும் ஐடியா எப்படி வந்தது?   ‘’’2027ஆம் ஆண்டு காய்கறி சந்தை மதிப்பு 136 பில்லியன் டாலர்களாக இருக்கும். இப்படி விற்பனை அதிகரித்தாலும், அதை உற்பத்தி ...

ஆதரவற்றோரின் உடல்களை கௌரவமாக அடக்கம் செய்யும் சமூக சேவகர் - உறவுகள் - காலித் முகமது

படம்
  ஆதரவற்றோருக்கு உறவினர் வாழ்க்கையில் பிறப்பு எப்படியோ, இறப்பும் அப்படித்தான். ஆனால் இறப்பு என்பது நிறைய மனிதர்கப் பயப்படுத்துகிறது. பிறப்பில் உள்ள ஆரவார கூச்சல் இறப்பில் ஏற்படுவதில்லை. ஒரு விதமான சுமையான மௌனம் அனைவரின் மனதிலும் உருவாகிறது.   இறந்தவர்களுக்கு உறவினர்கள் பலம். ஏராளமான உறவினர்கள் உள்ளவர்களுக்கு அவர்களின் உடல்களை எளிதாக தகனம் செய்துவிட முடியும். ஆனால் ஆதரவற்றோருக்கு, குடும்பத்தினரால் கைவிடப்பட்டவர்களுக்கு   இறப்பு மிகவும் அவலமாகவே உள்ளது. இறந்தவர்கள் அதைப்பற்றி கவலைப்படபோவதில்லை. ஆனாலும் இறந்த உடல்களை முறையாக எடுத்ததுச்சென்று குறிப்பிட்ட இடத்தில் எரிப்பது, அல்லது புதைப்பது சிறந்தது.   இந்த சமூகப்பணியை 2017ஆம் ஆண்டு தொடங்கி   சென்னையைச் சேர்ந்த காலித் முகமது செய்து வருகிறார். ஆறு ஆண்டுகளில் காலித் முகமது தனது தொண்டு நிறுவனம் மூலம் 7 ஆயிரத்திற்கு மேற்பட்ட பிணங்களை கௌரவமான முறையில் தகனம் செய்துள்ளார். கொரோனா காலத்தில் ஆயிரத்திற்கும் அதிகமாக உடல்கள் வந்திருக்கின்றன. காலித் முகமது முதலில் தனியாக இப்பணியைச் செய்தாலும் இப்போது, ஐநூறுக்கும் மேற்பட்ட த...

மழையிலும் தொடரும் வழிகாட்டுதல் சேவை!

படம்
  அடாத மழையிலும் விடாத சேவை ! அன்புள்ள நண்பர் கதிரவனுக்கு , வணக்கம் . நலமா ? இன்று எங்கள் மயிலாப்பூர் பகுதியில் நல்ல மழை . மழை இடைவேளை விட்டு விட்டு பெய்தது . இதனால் சாலைகள் குட்டைகளாகவே மாறிவிட்டன . சாப்பிட அறைக்கு வரும்போது , பேன்ட் முழங்கால் அளவுக்கு நனைந்துவிட்டது . அடைமழை பெய்யும் நேரத்தில் கூட பெண் ஒருவர் குடை பிடித்துக்கொண்டு என்னிடம் வந்து ஏவிஎம் ராஜேஸ்வரி மண்டபம் செல்ல வழி கேட்டார் . ஆச்சரியம் ... வழி சொல்லிவிட்டுத்தான் நகர்ந்தேன் . அடாத மழையிலும் என்னுடைய தேவை உலகிற்கு இருக்கிறது என நினைத்துக்கொண்டேன் . எங்கள் நாளிதழ் இன்னும் தொடங்கப்படவில்லை . இப்போதெல்லாம் ஆபீசுக்கு வருவதே சிலசமயம் எதற்கு என மறந்துபோய்க் கொண்டிருக்கிறது . உதவி ஆசிரியர் எழுத்தாளர் பாலபாரதி டெங்குவால் பாதிக்கப்பட்டு மீண்டிருக்கிறார் . அலுவலகத்தில் அதற்குள் இன்னொருவர் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு விடுமுறை எடுத்துவிட்டார் . மழைக்கால காய்ச்சல் என நினைக்கிறேன் . ஷோபாடே எழுதிய நூலை தொடர்ச்சியாகப் படித்துக் கொண்டிருக்கிறேன் . மத்திய அரசு , அரிசியில் இரும்புச்சத்து சேர்ப்பது பற்றிய கட்டுரை ஒன்றை ஃபிரன்ட்லைனில் பார...

வாடிக்கையாளர்களை உருவாக்குவதே நிறுவனத்தின் சாமர்த்தியம்!

படம்
  வாடிக்கையாளர் தான் தெய்வம்!   அண்மையில் ஊடகவியலாளர் கோகுலவாச நவநீதன் ஒரு புகைப்படம் ஒன்றை சமூக வலைத்தளத்தில் பகிர்ந்திருந்தார். அதில், மளிகை கடை ஒன்றில் வாடிக்கையாளர்களே தெய்வம். தெய்வத்திற்கு கடன் கொடுக்கும் தகுதி எனக்கில்லை எழுதியிருந்தது. இந்த வாசகத்தை எளிமையாக கடன் கிடையாது என்று எழுதலாம். ஆனால்  என மளிகை கடைக்காரர் கிரியேட்டிவாக யோசித்து வாடிக்கையாளரையும் உயர்த்திப்பிடித்து, தனது கடன் கிடையாது கொள்கையையும் சொல்லிவிட்டார்.   ஹூவெய்யின் வணிக சூத்திரமே இதுதான். ரென்  நடத்தும் நிறுவனம் தொலைத்தொடர்பு சேவை தொடர்பானது. தினசரி ஏராளமான கண்டுபிடிப்புகள், ஆய்வுகள் நடக்கும் துறை. இதில் எப்படி அவர் வாடிக்கையாளர்களை பொருட்படுத்தாமல் இருக்க முடியும். அப்படி செய்தால், அவரது நிறுவனம் விரைவில் வீழ்ந்துவிடும் அல்லவா? இந்த வணிக கொள்கைக்கு பெயர்தான் கஸ்டமர் சென்ட்ரிசிட்டி.   வாடிக்கையாளரின் சூழல், குணம், தேவை புரிந்து பொருட்களை தயாரித்து வழங்குவது. இதைத்தான் ஹூவெய் ரென் தனது ஊழியர்களுக்கு வகுப்பெடுத்து சொல்லித் தருகிறார். அதிக மாறுதல்களை சந்திக்காத அணுசக்தி த...

தோல்வியைக் கண்டு பயப்படாத மனோபாவம்!

படம்
  தோல்வியை நோக்கி திட்டமிடுவோம்!   தலைப்பிலுள்ளதைப் போல ஒருவர் கலந்துரையாடலில் பேச முடியுமா? ரென் அப்படித்தான் பேசினார். எதிர்காலத்தில் ஒருநாள் நாம் தோல்வியை சந்திக்கப் போகிறோம். எனவே, முன்கூட்டியே நாம் அதற்கு தயாராக இருப்போம் என்று பணியாளர்களிடம் பேசினார்.   நடிகர்களைப் பற்றி உலகத்தமிழர்  தேசிய நாளிதழ்களில் என்ன எழுதுவார்கள்? அவரே தன் கையால் தானே சொகுசு கார் கதவைத் திறந்தார். அவரே சோடாவை தன் கையில் வாங்கிக் குடித்தார். பிரியாணி லெக்பீசை தன் வாயால் தானே மென்றார் என எழுதுவார்கள். ரென்னைப் பொறுத்தவரை இப்படி யாராவது நிறுவனரை அல்லது அதிகாரிகளை புகழ்ந்தால் வீட்டுக்குச் சென்று வேறு வேலையைத் தேடுங்கள் என அனுப்பிவிடுவார்.   ரென்னைப் பொறுத்தவரை தனது வேலைகளை தானே செய்வதுதான் அவருக்குப் பிடித்தமானது. மூன்றுமணிநேர விமானப் பயணம் என்றால் கூட அவருக்கு புத்தகம் ஏதாவது இருந்தால் போதும். அதைப்படிப்பார். இடையில் ஒரு முக்கல் முனகல் கூட இருக்காது. ஏதாவது சந்திப்பு இருந்தால், நகரிலுள்ள ஹூவெய் அலுவலகத்திற்கு கூட சொல்ல மாட்டார். நேரடியாக யாரை சந்திக்கவேண்டுமோ அங்கேயே வாடகை டாக்ச...

சிறிய விஷயங்களை பேரன்போடு செய்யமுடியுமா? - அன்னை தெரசா

படம்
  அன்னை தெரசா அன்னை தெரசா  ஊக்கமூட்டும் வாழ்க்கைப் பயணம் அல்பேனியக் குடும்பத்தின் வாரிசு. 1910ஆம் ஆண்டு ஆகஸ்ட் 26 அன்ற பிறந்தார். மாசிடோனியாவில் பிறந்தவரின் இயற்பெயர் ஆக்னஸ் கான்க்ஸா போஜாக்ஸ்ஹியூ. பனிரெண்டு வயதிலேயே மிஷனரி அமைப்பில் சேர்ந்து வேலை செய்யவேண்டும் என்ற முடிவை எடுத்துவிட்டார்.  பதினெட்டு வயதில் அயர்லாந்திலுள்ள லாரெட்டோ அமைப்பில் சேர்ந்து ஆங்கிலத்தை கசடற கற்றுக்கொண்டார். பிறகு தெரசா என பெயர் மாற்றப்பட்டது. 1929ஆம் ஆண்டு முதல் தனது குடும்பத்தை துறந்தார்.  பதினேழு ஆண்டுகள் கன்னியாஸத்ரீயாக பணியாற்றினார். அப்போது அவரை சுற்றி வாழ்ந்த மக்களின் வறுமை அவரது மனத்தை வருத்தியது. எனவே இந்த காலத்தில்தான் அவரது மனதில் கேட்ட குரலுக்கு செவி சாய்த்தார். வறுமையில் வாடுபவர்களுக்கு உதவி தேடுபவர்களுக்கு உதவ நாம் தெருவில் இருக்கவேண்டும் என முடிவெடுத்தார். எனவே வாடிகனில் அனுமதி பெற்று தி மிஷனரிஸ் ஆப் சாரிட்டி  என்ற அமைப்பைத் தொடங்கினார். செயல்பாடு 1950ஆம் ஆண்டு முதலே தொடங்கியது.  இந்த அமைப்பின் நோக்கமே யாரும் கவனிக்காத மக்களை கவனித்துக்கொள்வதுதான். அன்பும், பராமரிப்பும...

கொல்லைப்புறம் வழியாக வங்கிகளாக மாறும் கூகுள், அமேசான்!

படம்
  தலைப்பை இப்படி வைப்பது குற்றமல்ல. ஆனால் நேரடியாக வங்கி நிறுவனமாக இல்லாமல், டெக் நிறுவனங்களாக இருந்துகொண்டே மக்களிடம் டெபாசிட்டுகளை கூகுளும் அமேசானும் பெறவிருக்கின்றன.  அமேசான் நிறுவனத்தில் அமேசான் பே சேவை வழங்கப்பட்டு வருகிறது. இப்போது கூடுதலாக பஜாஜ் ஃபினான்ஸ் சேவையைப் பயன்படுத்தி வைப்புத்தொகையை சேமிக்கலாம்.  கூகுள் நிறுவனம், ஈக்விடாஸ் எஸ்எஃப்பி, சேது ஆகிய நிறுவனங்களுடன் இணைந்து வைப்புத்தொகையை பெறவிருக்கிறது. இதனை முன்பே கூகுள் அறிவித்துவிட்டது.  சட்டப்பூர்வமான சேவை என்றாலும் கொல்லைப்புறம் வழியாக டெக் நிறுவனங்கள் வங்கிச் சேவையில் நுழைவதை ஆர்பிஐ தர்மசங்கடத்துடன் பார்க்கிறது.  அமேசான் பே சேவையுடன் இணைந்து குவேரா.இன் நிறுவனம் பணியாற்றவிருக்கிறது. அமேசான் பே பயனர்கள் எங்களது சேவையைப் பெற்று பணத்தை பல்வேறு முதலீடுகளில் செலுத்த முடியும். 12-23, 24-35, 36-60 என மாதங்கள் குவேரா தளத்தில் பட்டியலிடப்பட்டுள்ளன. இதற்கான வட்டி 5.75 - 6.60 வரை வருகிறது. குறைந்தபட்ச வைப்புத்தொகை ரூ.25 ஆயிரம் ஆகும்.  அமேசான் அல்லது கூகுள் ஆப் வழியாக ஒருவர் தனது பணத்தை கட்டுவதால், அவர் அந...

ஆடியோ மூலமாக என்னென்ன விஷயங்களை செய்யலாம்?

படம்
              ஆடியோவில் ஆடிப்பாடுவோம் ! ஸ்மார்ட்போன்களில் குரல் மூலம் செயல்படும் உதவியாளர் சேவை அறிமுகமாகி பத்தாண்டுகள் ஆகப்போகின்றது . இதனை இன்னும் நாம் சிறப்பாக பயன்படுத்த கற்கவேண்டும் . அப்போதுதான் எழுதுவதை விட எளிதாக பேசி ஒரு விஷயத்தை செய்யமுடியும் என்பதை உணர்வீர்கள் . உதவியாளரால் என்ன செய்யமுடியும் ? ஆப்பிளின் சிரி , கூகுளின் ஆண்ட்ராய்டு சாம்சங்கின் பிக்ஸ்பை ஆகியவை இன்று பெரும்பாலோனாரின் போன்களில் பயன்பாட்டில் உள்ளது . இதனை முழுமையாக பயன்படுத்த அதனைப் பற்றி அறிவது அவசியம் . எனவே இதுபற்றி இணையத்தில் தேடிப் பார்க்கலாம் . அல்லது போனில் உள்ள உதவியாளரிடமே உன்னால் என்ன செய்ய முடியும் என்று கேள்வி கேட்டு பதில் பெறலாம் . என்ன செய்யலாம் ? இன்று வேலைகள் என்னென்ன என்பது உங்களது அற்புதமான காந்தர்வ குரலில் பதிவு செய்து வைத்துக்கொள்ளுங்கள் . போனில் நோட்ஸ் எடுக்கும் ஆப்புகளும் இருக்கும் . அதனைப் பயன்படுத்தலாம் . இல்லையெனில் போனில் கம்பெனியே கொடுத்துளமள ரெக்கார்ட் ஆப்பை பயன்படுத்துங்கள் . பட்டனை அழுத்தி பேசி பதிவுசெய்துகொண்டு அதனை கணினியில ...