இடுகைகள்

திராவிடம் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

திராவிடர்கள் யார், திராவிடம் என்றால் என்ன என்பது பற்றி தெளிவாக விளக்கும் நூல்!

படம்
  திராவிடம் - தமிழ்தேசியம் ஒரு விளக்கம் கா.கருமலையப்பன் பெரியார் திராவிடக்கழகம் இந்த நூலில், கருமலையப்பன், தமிழ் தேசியவாதியான மணியரசனின் பார்ப்பன ஆதரவு அரசியலை கருத்துகளை சாடுகிறார்.இழிவான கருத்துகளால் அல்ல. முறையாக ஆதாரங்களை வைத்தே வாதிடுகிறார். இன்று ஒருவர் பொதுக்காரியங்களில் பொறுப்பான ஒருவரைப் பற்றி கேள்வி கேட்டுவிட்டால், தனிநபரின் அந்தரங்களை சொல்லி திட்டுவது, வசைபாடுவது வழக்கமாகிவிட்டது. இந்தசூழலில் அப்படியான இயல்பு இல்லாமல், முழுக்க ஆதாரங்களை வைத்தே எதிர்த்தரப்பை எதிர்கொள்வது எளிதல்ல.  பெரியார் கூறிய கருத்துகளின் படி, காலத்திற்கேற்ப மாறும் விஷயங்களை கருத்தில் கொண்டும் கருமலையப்பன் பல்வேறு வாதங்களை முன்வைக்கிறார். அடிப்படையில் பெரியார், இந்தியா, இந்து என்ற வகைமையை விரும்பவில்லை. எனவேதான் தனித்தமிழ்நாடு கோரிக்கை உருவானது. அந்த அடிப்படையில் திராவிடர்கள் என்ற கருத்தை உருவாக்கினார். திராவிடர்கள் என்பதும் தமிழர்கள் என்பதும் வேறு வேறல்ல.  தமிழர்கள் என்று சொல்லி திராவிடத்தை வெறுக்கும் மணியரசன், தமிழ்தேசியம் சார்ந்த பத்திரிகை ஒன்றை நடத்துகிறார். அந்த பத்திரிகையை நூலகத்தில் தம...

இரு மின்னூல்கள் வெளியீடு - காணாமல் போவதில்லை புலிகள் - திராவிட திருநாடு

 காணாமல் போவதில்லை புலிகள் (Kaanamal povathillai pulikal): குங்குமம் செய்திக்கட்டுரைகள் (Tamil Edition) Kindle Edition https://www.amazon.in/dp/B0FPX27WB7 திராவிட திருநாடு (Dravida thirunadu): தமிழ்நாட்டின் மேம்பாடும் சீர்திருத்தங்களும் (Tamil Edition) Kindle Edition https://www.amazon.in/dp/B0FPR47YW8

திராவிட தேசியம் - அண்ணாவின் மூன்று உரைகள்

படம்
    திராவிட தேசியம் - மாநில சுயாட்சி சிஎன் அண்ணாதுரை திராவிடர் கழக வெளியீடு விலை ரூ.ஆறு இந்த நூல் மொத்தம் மூன்று உரைகளை உள்ளடக்கியது. 1961, 1967, 1969 என மூன்று ஆண்டுகளி்ல் அண்ணா, பொது மேடையில் பேசிய உரைகளை நூலாக தொகுத்திருக்கிறார்கள். தொடக்க காலகட்ட உரையில் திமுக மாநில சுயாட்சியோடு, திராவிட நாடு கோரிக்கையை முன்வைக்கிறது. அன்று ஆட்சியில் இருந்த காங்கிரஸ், திமுகவை பிரிவினைவாத கட்சி என கூறி விமர்சித்தது. திராவிட நாடு கோரிக்கையை ஏன் அண்ணா எழுப்பினார் என்பதற்கான எளிமையான விடைகளை அவரது உரையில் படித்துப் புரிந்துகொள்ளமுடியும், மையத்தில் அதிகார குவிப்பு, வரிவருவாய் பாகுபாடு, மாகாணங்களில் மக்களால் தேர்ந்தெடுக்கப்படுபவர்களுக்கு குறைந்த அதிகாரம், அனைத்திற்கும் ஒன்றிய அரசின் கைகளை எதிர்பார்த்து நிற்கும் அவலம், இந்திமொழி திணிப்பு ஆகியவற்றை அண்ணா உரையில் சுட்டிக்காட்டுகிறார். ஆட்சிக்கு வந்தபிறகு பிரவினைவாத சட்டத்தில் திமுகவின் ஆட்சியை கலைத்துவிடவாய்ப்புள்ளது என்பதால், திராவிட நாடு கோரிக்கை மட்டும் கைவிடப்பட்டது. ஆனால் அதைக் கேட்பதற்கான காரணங்கள் அப்படியே உள்ளன என அண்ணா தைரியமாக கூறியிருக்க...

கணித்தமிழ் மின்னிதழ் வெளியீடு - தமிழ் இணையக் கல்விக்கழகம்

படம்
      தமிழ் இணையக் கல்விக்கழகத்தில் - டிஜிட்டல் நூலகப்பக்கத்தில் கணித்தமிழ் என்ற மின்னூல் வெளியாகி இருக்கிறது. இருபத்தி இரண்டு பக்கங்கள் கொண்ட இதழில், தமிழ் இணையக் கல்விக்கழகம் மேற்கொண்ட முக்கியமான தமிழ் வளர்ச்சிப் பணிகள் பட்டியலிடப்பட்டுள்ளன. மின்னிதழ் அழகாக வடிவமைக்கப்பட்டுள்ளது. வாய்ப்புள்ளோர் வாசியுங்கள்.   தொகுப்பாற்றுப்படை என்ற பக்கத்தில் சித்த மருத்துவ நூல்கள், அண்ணாவின் படைப்புகள் ஆகியவை உள்ளன. ஆர்வம் இருப்பவர்கள் சென்று நூல்களை வாசியுங்கள். அல்லது தரவிறக்கி வைத்துக்கொள்ளுங்கள்.

ஆதி திராவிடர்களை எப்படிபார்ப்பனியம் அடிமைப்படுத்தியது? - ஜாதியத்தின் தோற்றம் - கொளத்தூர் மணி

படம்
  கொளத்தூர் மணி ஜாதியத்தின் தோற்றம் கொளத்தூர் மணி திராவிடப் பள்ளி கோடம்பாக்கம் ஜாதி என்பது எப்படி வந்தது, அதனை நாம் சாதி என மாற்றி எழுதுவது சரியா, பார்ப்பனர்களுக்கும், ஆதி திராவிடர்களுக்குமான வேறுபாடு, வர்க்க, ஜாதி வேறுபாடுகள் எப்படி உருவாயின, மனு தர்மம் ஜாதி உருவாக்கத்திற்கு என்ன ஊக்கத்தை கொடுத்தது என்பதை அறிந்துகொள்ள இந்த நூலை வாசிக்கலாம்.  கொளத்தூர் மணி எளிமையாக ஜாதியத்தின் தோற்றம் என்பதை மட்டும் எடுத்துக்கொண்டு அதனை பல்வேறு ஆதாரங்களின் மூலம் விளக்கியுள்ளார்.  மனு தர்மம் முழுக்க ஆணாதிக்கத்தின் உச்சத்தில் அன்று நிலவிய தன்மையில் எழுதப்பட்டுள்ளது என்பதற்கும் சான்றுகள் உள்ளன. பார்ப்பன பெண்கள் பற்றிய ஒழுக்கத்தை மனுதர்ம விதிகள் குறிப்பிடுகின்றன. பார்ப்பன ஆண், சூத்திரப் பெண் இணைந்து பெறும் பிள்ளைகள், பார்ப்பன பெண் சூத்திர ஆண் இணைந்து பெறும் பிள்ளைகள் என இரண்டுக்கும் ஏராளமான வேறுபாட்டை மனு வகுத்து வைத்திருக்கிறார். கி.பி. இரண்டாம் நூற்றாண்டில் உருவான மனு, அன்றைய நிலையில் இருந்த ஜாதி விவகாரங்களை ஊக்கப்படுத்தி உறுதிப்படுத்தி குறிப்பிட்ட கட்டுமானத்தில் கொண்டு வந்திருக்கிறார்....

தமிழ்நாடு தினத்தின் வரலாறு!

படம்
  ஓவியர் ஜீவா(வள்ளுவர் வள்ளலார் வட்டம் ) தமிழ்நாடு நாள் நவம்பர் 1,1956 1956 ஆம் ஆண்டு நவம்பர் 1 அன்று, மொழிவாரி மாநிலங்கள் கோரிக்கைப்படி மெட்ராஸ் ராஜதானி பிரிக்கப்பட்டது. இதில் இணைந்திருந்த ஆந்திரம், கர்நாடகம், கேரளம் ஆகியவை தனி மாநிலங்களாக உருவாக்கப்பட்டன. மெட்ராஸ் ஸ்டேட் என்ற பெயர், பின்னாளில் மாநில முதல்வரான சி.அண்ணாத்துரையால், 1968ஆம் ஆண்டு ஜூலை 18 அன்று மெட்ராஸ் ஸ்டேட், தமிழ்நாடு என பெயர்மாற்றம் பெற்றது. நவம்பர் 1ஆம் தேதியை கேரளம், கர்நாடகம், ஆந்திரம் ஆகிய மாநிலங்கள் சிறப்பாக கொண்டாடி வருகின்றன. இந்தவழியில் தமிழ்நாடு அரசு,  இனி வரும் ஆண்டுகளில் தமிழ்நாடு நாளை கொண்டாட உள்ளதாக கடந்த 25ஆம்தேதி அரசாணை வெளியிடப்பட்டது.  மொழிவாரி மாநிலங்கள் சிந்தனை, வங்கப்பிரிவினை காலத்தில் ஆங்கிலேயர்களுக்கு இருந்தது. மொழிவாரி மாநிலமாக 1908 இல் பீகார் மாநிலம் உருவானது. பல்வேறு மாநிலங்களை மொழிவாரியாக  பிரிக்கும் யோசனையை அன்றைய காங்கிரஸ் கட்சி முன் வைத்தது. ஆனால் மக்களை பிரித்தாளும் முயற்சி என தேசியவாதிகள் கூறி இம்முயற்சிக்கு முட்டுக்கட்டை போட முயன்றனர். ஆனால் இந்தியா - பாகிஸ்தான் ஆகிய ...