இடுகைகள்

ரொமிலா தாப்பர் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

மதவாதம் சார்ந்து உருவாகும் அரசதிகாரம் அச்சமூட்டும் ஒன்று! - வரலாற்று ஆய்வாளர் ரொமிலா தாப்பர்

படம்
  ரொமிலா தாப்பர், வரலாற்று ஆய்வாளர் இந்துத்துவா அரசியலை விமர்சனம் செய்பவர்களில் முக்கியமானவர், வரலாற்று ஆய்வாளரான ரொமிலா தாப்பர். இந்தியாவின் பன்மைத்துவ தன்மைக்காக குரல் கொடுத்து இந்துத்துவ சிந்தனைகளுக்கு எதிரான குரலாக ஒலித்து வருகிறார். தற்போது, ‘தி ஃப்யூச்சர் இன் தி பாஸ்ட்’ என்ற நூலை எழுதியிருக்கிறார். வரலாற்று ஆய்வாளராக அவரை மாற்றிய விவகாரங்கள், பல்வேறு பிரச்னைகள் பற்றிய தனது கருத்துகளை கட்டுரைகளை எழுதியிருக்கிறார். அவரது கட்டுரைகளின் தொகுப்புதான் மேற்சொன்ன நூலாக வெளிவந்திருக்கிறது. வரலாற்றை இந்துத்துவா எப்படி அணுகுவதாக நினைக்கிறீர்கள்? வரலாற்றை அணுகுவது என்பது பொதுவாக நிகழ்ச்சிகளுக்கு விளக்கம் கொடுப்பதுதான். ஆதாரங்களை சேகரித்து, அதை ஆய்வு செய்து, கடந்த கால நிகழ்ச்சிகளுக்கு பொருத்தமான விளக்கங்களை கொடுப்பது என புரிந்துகொள்ளலாம். இந்துத்துவா கருத்தியலுக்கு இதெல்லாம் தேவையில்லை. அவர்கள் கடந்த காலத்தைப் பற்றிய சிறு குறிப்பை வைத்திருக்கிறார்கள். அதைக் கொண்டு கருத்தியலை உருவாக்கி நடைமுறைக்கு கொண்டு வருகிறார்கள். ஆதாரங்கள் நம்பகத் தன்மை கொண்டவையா, வாதங்கள் ஏற்புடையவையா என்றெல்லாம் பா