இடுகைகள்

காளை லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

ராகுல்காந்தி ஜல்லிக்கட்டை பார்க்க வந்ததில் எந்த அரசியல் நோக்கமுமில்லை! கே.எஸ். அழகிரி, காங்கிரஸ் கமிட்டி தலைவர்

படம்
                    தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே . எஸ் . அழகிரி ராகுல்காந்தி மதுரையில் நடைபெறும் ஜல்லிக்கட்டு விழாவுக்கு வந்துள்ளது பல்வேறு சர்ச்சைகளுக்கு இடமளித்துள்ளதே ? ஐக்கிய முற்போக்கு கூட்டணி காலத்தில்தான் ஜல்லிக்கட்டு தடை செய்யப்பட்டது ..? ஜல்லிக்கட்டிற்கு பிரச்னை வந்தது 2014 இல்தான் . உச்சநீதிமன்றம் இதற்கான தடை ஆணையை பிறப்பித்தது . பின்னர் இத்தீர்ப்பை எதிர்த்து மனுவும் பதியப்பட்டது . ஐக்கிய முற்போக்கு கூட்டணி தமிழர் விளையாட்டு தொடர்வதற்கான முயற்சிகளை செய்தது . அவர்கள் தொடர்ந்து ஆட்சியில் இருந்திருந்தால் தமிழர் விளையாட்டிற்கு தடை விதிக்கப்பட்டிருக்காது . ஆனால் முன்னாள் அமைச்சரான ஜெய்ராம் ரமேஷ் இதற்கு எதிர்ப்பதமாக கருத்துகளை கூறுகிறாரே ? இந்த விவகாரத்தில் அரசுக்கு பல்வேறு கருத்துகள் இருந்தன . 1960 இல் உருவாக்கப்பட்ட விலங்குகளை துன்புறுத்தும் சட்டம் தொடர்பானவை அவை . ஜெயராம் ரமேஷ் கூறிய கருத்துகள் சட்டத்தின்பாற்பட்டவை . கேபினட் கமிட்டி ஜல்லிக்கட்டை தடை செய்யும் விஷயத்தை ஆதரிக்கவில்லை . இதற்கு காரணம் திமுக , மாநில அரசிடமிருந்து வந்த அழுத்தங்கள்த

காட்டிற்குள் சென்று தான் யார் என்பதை நிரூபித்துக்காட்டும் சிங்கம்! - வைல்ட் - டிஸ்னி

படம்
                  வைல்ட் Directed by Steve "Spaz" Williams Produced by Clint Goldman Beau Flynn Screenplay by Ed Decter John J. Strauss Mark Gibson Philip Halprin Story by Mark Gibson Philip Halprin சாம்சன் என்ற சிங்கம் , ரையான் என்ற மகனுடன் வனவிலங்கு காட்சியகத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தி புகழ்பெற்றிருக்கிறது . ரையோன் குட்டி சிங்கமாக இருந்தாலும் அதற்கு கர்ஜனை செய்யவருவதில்லை . பூனை போல மியாவ் என்றுதான் குரல் வருகிறது . இதனால் ரையோன் மனம் தளர்ந்து போகிறது . கூடவே இருக்கும் பாம்பு , ஒட்டகச்சிவிங்கி , கரடிகளின் கிண்டல் வேறு மனதைக் காயப்படுத்துகிறது . இதனால் வைல்ட் எனும் காட்டிற்கு சென்று வாழ்ந்தால்தான் தன் இயல்பைப் பெறமுடியும் என நம்புகிறது ரையான் இதற்கான முயற்சியில் தவறுதலாக வண்டி ஒன்றில் ஏற , அந்த வண்டி நகருக்கு செல்கிறது . தன் மகனை தேட சாம்சன் தனியாகத்தான் புறப்படுகிறார் . ஆனால் அவரது இம்சை நண்பர்களும் உடன் வர அவர்களின் கோளாறான கோக்குமாக்கு வேலைகளை சமாளித்து எப்படி சாம்சன் தனது மகனைக் கண்டுபிடித்தது என்பதுதான் கதை .    படத்தைப் பார்த்து

சுதேசி பசுக்களை இப்படியும் காப்பாற்றலாம்- இந்திய அரசின் யூடர்ன்!

படம்
சுதேசி பசுக்களை பாதுகாக்கும் புது வழி! பிரேசில் நாட்டில் கிர் எருதுகளுக்கான  விந்தணுக்களை இறக்குமதி செய்ய இந்திய அரசு முடிவு செய்துள்ளது. 2017 ஆம் ஆண்டு பிரேசில் அரசிடம் ஒப்பந்தம் செய்து, விந்தணுக்களை உறைதல் செய்து வாங்க முடிவெடுத்தனர். ஆனால் உள்நாட்டில் இந்த விஷயம் தெரிந்து போராட்டம் வெடிக்க அரசு பின்வாங்கியது. தற்போது பிரேசில் அரசு மூலம் ஒரு லட்சம் விந்தணு ஊசிகளைப் பெற அரசு முடிவு செய்துள்ளது. கிர் காளைகள் விரைவில் இந்தியாவில் உற்பத்தியாகும் என கால்நடைத்துறை அமைச்சர் சஞ்சீவ் பல்யான் கூறியுள்ளார். கிர் எருதுகளுக்கான விந்தணுக்களை பாவ்நகர் ராஜா முன்னர் பிரேசில் நாட்டுக்கு பரிசாக வழங்கினார். அவர்கள் அதனைப் பாதுகாத்து வைத்தனர். தென் அமெரிக்க நாடுகளில் கிர் இன பசுக்கள் பல்வேறு தட்பவெப்ப சூழல்களுக்கு ஏற்ப தம்மை தகவமைத்துக்கொண்டு உள்ளன. மேலும் பாலும் அதிகம் கிடைக்கிறது. அதேசமயம் இந்தியாவில் மேற்கத்திய பசு இனங்கள் பிரபலப்படுத்தப்பட்டன. அதிக பால் என்ற ஒற்றை மந்திரத்தில் கட்டுப்பட்ட மக்கள், நாட்டு மாடுகளை மறந்தனர். காலப்போக்கில் நாட்டு மாடுகள் காணாமல் போயின. தற்போது 15.17 மில்ல