சுதேசி பசுக்களை இப்படியும் காப்பாற்றலாம்- இந்திய அரசின் யூடர்ன்!
சுதேசி பசுக்களை பாதுகாக்கும் புது வழி!
பிரேசில் நாட்டில் கிர் எருதுகளுக்கான விந்தணுக்களை இறக்குமதி செய்ய இந்திய அரசு முடிவு செய்துள்ளது. 2017 ஆம் ஆண்டு பிரேசில் அரசிடம் ஒப்பந்தம் செய்து, விந்தணுக்களை உறைதல் செய்து வாங்க முடிவெடுத்தனர். ஆனால் உள்நாட்டில் இந்த விஷயம் தெரிந்து போராட்டம் வெடிக்க அரசு பின்வாங்கியது.
தற்போது பிரேசில் அரசு மூலம் ஒரு லட்சம் விந்தணு ஊசிகளைப் பெற அரசு முடிவு செய்துள்ளது. கிர் காளைகள் விரைவில் இந்தியாவில் உற்பத்தியாகும் என கால்நடைத்துறை அமைச்சர் சஞ்சீவ் பல்யான் கூறியுள்ளார். கிர் எருதுகளுக்கான விந்தணுக்களை பாவ்நகர் ராஜா முன்னர் பிரேசில் நாட்டுக்கு பரிசாக வழங்கினார். அவர்கள் அதனைப் பாதுகாத்து வைத்தனர். தென் அமெரிக்க நாடுகளில் கிர் இன பசுக்கள் பல்வேறு தட்பவெப்ப சூழல்களுக்கு ஏற்ப தம்மை தகவமைத்துக்கொண்டு உள்ளன. மேலும் பாலும் அதிகம் கிடைக்கிறது.
அதேசமயம் இந்தியாவில் மேற்கத்திய பசு இனங்கள் பிரபலப்படுத்தப்பட்டன. அதிக பால் என்ற ஒற்றை மந்திரத்தில் கட்டுப்பட்ட மக்கள், நாட்டு மாடுகளை மறந்தனர். காலப்போக்கில் நாட்டு மாடுகள் காணாமல் போயின. தற்போது 15.17 மில்லியன் நாட்டு இனங்கள் இருப்பதாக கால்நடைத்துறை கூறியுள்ளது. இதனைக் கணக்கெடுக்கும் பணியைத் தொடங்கியுள்ளது. இதனால் என்ன ஆகும் என கேட்காதீர்கள். எதையாவது அரசு செய்ய வேண்டுமா இல்லையா? அதனால்தான் இப்பணி.
நன்றி: எகனாமிக் டைம்ஸ் - குமார் அன்சுமான்