மாற்றுப்பாலின சாதனையாளர்கள் நூல் தரவிறக்க முகவரி!
இந்த நூலை தினகரன் நாளிதழில் பணியாற்றும் போதே எழுத தொடங்கினேன். ஆனால் சாத்தியம் ஆகவில்லை. காரணம் கடுமையான பணிச்சுமை. இன்றும் நான் நிதானமாக உட்கார முடியவில்லைதான். ஆனால் முன்பை விட தெளிவாக எழுதுவதற்கான நேரத்தை உறுதிப்படுத்திக்கொண்டு வரையறுத்துவிட்டேன். எனவே இனி பிரச்னையில்லை.
மொத்தம் இருபது மாற்றுப்பாலினத்தவர் இந்த நூலில் உள்ளனர். விபச்சாரம், பிச்சை என இரண்டையும் தவிர்த்துவிட்டு தனக்குப் பிடித்த தொழிலைச் செய்துகொண்டு வாழ்கின்றவர்கள் இவர்கள். எனவே இந்த தன்னம்பிக்கை மாற்றுப்பாலினத்தவருக்கு வரவேண்டும் என்பதே என் ஒரே நம்பிக்கை.
ரயிலில் பணத்தை அடித்து பிடுங்குவது, தன் அந்தரங்க இடத்தை சேலையை தூக்கிக் காட்டி அவமானப்படுத்துவது என வாழும் மாற்றுப்பாலினத்தவர்கள் சிலர், அப்பிரிவினருக்கே களங்கமாக இருக்கிறார்கள். இங்கு சமூகம் இன்னும் முதிர்ச்சியடையவில்லை என்பது உண்மை. அவரவருக்கான இடங்கள் இன்னும் கிடைக்கவில்லை. ஆனால் ஒட்டுமொத்த மக்களுக்கும் இழிவைத் தேடித்தருவது நியாயமும் இல்லைதானே!
வாழ்வதற்கான நம்பிக்கை அணுவளவேனும் அவர்களுக்கு கிடைத்தால் போதும். அந்த நம்பிக்கையில் இந்த நூலை மொழிபெயர்த்து எழுதினேன். நூலை வாசித்துவிட்டு உங்கள் கருத்துகளைக் கூறுங்கள். நன்றி.
எனது மின்னஞ்சல் முகவரி Arasukarthick@gmail.com
நண்பர்களே, நாம் சுதந்திரமாக இயங்கத் தடையாக நிறைய அமைப்புகள் உள்ளன. பிடிஎஃப் வழங்கும் டெலிகிராம் சேனல்கள் கூட ஏராளமான கட்டுப்பாடுகளை விதிக்கின்றன. இந்நிலையில் நூல்களைப் படிக்க ஒரே வழி, இணையத்திலுள்ள கோப்புகளை பரிமாறும் தளங்கள்தான். ஆதரவளித்த ஜிப்பிஷேர் வலைத்தளத்திற்கு நன்றி!
நேற்று வெளியிட்ட அட்டைப்பட நூலின் பீடிஎஃப் கோப்பை கீழ்க்காணும் இணைய முகவரியில் சென்று தரவிறக்கம் செய்து கொண்டு படியுங்கள். இல்லையெனில் அத்தளத்திலேயே படியுங்கள். நன்றி.
https://www77.zippyshare.com/v/YhIVlrhW/file.html
மேலே உள்ள ஜிப்பிஷேரில் விளம்பரமாக வருகிறதா? இன்றிலிருந்து 14 நாட்களுக்குள் கீழ்கண்ட முகவரியைப் பயன்படுத்தி நூலை தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள். இது மீடியாஃபயர் வலைத்தள முகவரி.....
http://www.mediafire.com/file/f6zl59eciqvw503/lgbt_achievers.pdf/file
அன்பரசு சண்முகம் மற்றும் கோமாளிமேடை டீம்