இடுகைகள்

வெளிப்பாடு லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

மனிதர்கள் தங்களை எப்படி வெளியுலகத்தில் வெளிப்படுத்திக்கொள்கிறார்கள்?

படம்
  கல்யாணம் என்றால் உற்சாகமான புன்னகை, சிரிப்பு இருக்கும். ஒருவர் இறந்துவிட்டார், அவரின் ஈமச்சடங்களில் வருத்தம், துயரம் இருக்கும். அங்கு போய் இறந்தவருக்கு மனமார்ந்த மகிழ்ச்சியை தெரிவித்துக்கொள்கிறேன் என்று கூற முடியாது. இதெல்லாம் ஒருவர் அனுபவப்போக்கில் கற்றுக்கொள்வதுதான். கற்றபிறகு ஆக்சன் சொல்லாமலேயே நடிக்க வேண்டியதுதான்.  பிடிக்காது என்றாலும் கூட வாழ்க்கையில் நிறைய இடங்களில் டோண்ட் கொஷின் தி எமோஷன் என மனதிற்குள்  சொல்லிக்கொண்டு சில நாடக தருணங்களை செய்யவேண்டியிருக்கும். அதை தவிர்க்க முடியாது. சென்னையில் உள்ள ஜவுளிக்கடைகளில் வாடிக்கையாளர்களை வரவேற்பதற்கென யூனிஃபார்ம் ஆடைகளை அணிந்த பெண்கள், ஆண்கள் இருப்பார்கள். இவர்கள் அணிந்துள்ள ஆடை, நகை, இவர்களை சுற்றியுள்ள பொருட்கள் அனைத்துமே கலை இயக்குநர் தோட்டாதரணி போடும் செட் போலவே இருக்கும். குறையே சொல்ல முடியாது. நட்சத்திர ஹோட்டல்களில் குறிப்பிட்ட பிரபல செஃப் வரும் தினங்களில் இதுபோல வரவேற்பும், மரியாதையும் இருக்கும். எதற்கு இதெல்லாம், இதெல்லாம் உண்மையா என்றால் கிடையாது. ஒருவரின் பாக்கெட்டில் உள்ள பணம் இன்னொருவரின் கையில் வரவேண்டும். அதற்காகத்தான்