இடுகைகள்

ஜார்ஜ் மில்லர் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

ஜார்ஜ் ஆர்மிடேஜ் மில்லர்

  ஜார்ஜ் ஆர்மிடேஜ் மில்லர் இவர் சார்லஸ்டன் என்ற ஊரில் பிறந்தார். 1941ஆம் ஆண்டு ஸ்பீச் பாத்தாலஜி பாடத்தில் எம்ஏ பட்டம் வென்றார். பிறகு, ஹார்வர்டில் உளவியல் பாடத்தில் முனைவர் பட்டம் பெற்றார். ஸ்டான்லி ஸ்மித் ஸ்டீவன்ஸ் ஆய்வகத்தில் ஜெரோம் ப்ரூனர், கார்டன் ஆல்போர்ட் ஆகியோருடன் பணியாற்றினார். இரண்டாம் உலகப்போரின்போது ராணுவம் ரேடியோக்களை இடைமறித்து கேட்கும் பணிகளை செய்து தர கோரியது. 1951ஆம் ஆண்டு எம்ஐடியில் பணியாற்றச்சென்றவர். பிறகு 1955ஆம் ஆண்டு மீண்டும் ஹார்வர்டிற்கு திரும்பினார். அங்கு நோம் சாம்ஸ்கியோடு இணைந்து வேலை  செய்தார். 1960ஆம் ஆண்டு, அறிவாற்றல் படிப்புக்கான மையத்தை துணை நிறுவனராக இருந்து தொடங்கினார். ராக்ஃபெல்லர் பல்கலைக்கழகத்தில் உளவியல் பேராசிரியராக பணியாற்றியுள்ளார். பிரின்ஸ்டன் பல்கலைக்கழகத்தில் வேலை செய்துள்ளவருக்கு 1991ஆம் ஆண்டு தேசிய அறிவியல் பதக்கம் வழங்கப்பட்டது.  முக்கிய படைப்புகள்  1951 language and communication  1956 the magival number seven plus or minus two 1960 plans and the structure of behaviour