இடுகைகள்

நகுலன் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

புத்தாண்டு பரிசாக நகுலன் சிறுகதைகள்! - கடிதங்கள் - கதிரவன்

படம்
  22.12.2021 மயிலாப்பூர் அன்பு நண்பர் கதிரவனுக்கு, வணக்கம்.  நலமா? ஜனவரி 3 அன்று நாளிதழ் தொடங்கப்போவதாக எடிட்டர் சொன்னார். புதிய பகுதிகள் தொடங்கப்பட்டுள்ளன. அதில் கவனம் கொடுத்து பல்வேறு இதழ்களைப் படித்து வருகிறேன். பெண்களின் திருமண வயது 21 ஆக உயர்த்தப்படுவதற்கு ஆதரவு எதிர்ப்பு என இருவகை தரப்பு உருவாகியிருக்கிறது. ஆதரவை விட எதிர்ப்புகள் அதிகம் உருவாகியிருக்கிறது. பெண்களின் மேம்பாடும், கல்வி அறிவும் மேம்படுவதுதான் சட்டத்தின் நோக்கம் என்று சொல்லியிருக்கிறது. இடதுசாரிகள், வலது சாரி அரசு பெண்களின் திருமண வயது 21 என உயர்த்துவது அவர்களை சாதி மறுப்பு திருமணம் செய்வதிலிருந்து தடுக்க உதவும் என வாதிடுகின்றனர்.  பெண்களை சட்டத்தின் பிடியில் வைத்து, அவள் காதல் திருமணம் செய்வதை எளிதாக தடுக்கலாம் என்ற கருத்தும் கூறப்படுகிறது. எனக்கு பாஜக தனது சுயநலம் தவிர வேறெதையும் நாட்டுக்காக எதையும் பிடுங்கிக் கூட போடவில்லை என்றுதான் எனக்குத் தோன்றுகிறது. அவர்களது கட்சியை கருத்தியலை வளர்க்க இத்தகைய சட்டங்கள் உதவும் என நினைக்கிறேன். நன்றி! அன்பரசு  27.12.2021 மயிலாப்பூர் அன்பு நண்பர் கதிரவனுக்கு, வணக்கம்.  முஸ்லீம்

நுட்பமான கதாபாத்திர விவரிப்புகளைக் கொண்ட நகுலனின் கதைகள்! - கடிதங்கள்

படம்
  அன்புள்ள ஆசிரியர் கே.என்.சிவராமன் அவர்களுக்கு, வணக்கம். நலமாக இருக்க இறைவனை பிரார்த்திக்கிறேன்.   எங்கள் நாளிதழுக்கான பதிப்பக வேலைகளை செய்து வருகிறேன். கூட்டுறவு வங்கி பற்றிய தகவல்களை சேகரித்து எழுதி வருகிறேன். ஐந்து வாரங்களில் மினி தொடராக எழுதியதை தொகுத்து பத்து அத்தியாயங்களாக மாற்றியுள்ளேன். தினசரி இதழுக்கான இலக்கணம், பதிப்பக நூலுக்கான இலக்கணம் என்பதை ஒன்றாக வைத்துக்கொள்வதா, தனியாக உருவாக்கிக்கொள்வதா என்பதில் குழப்பம் உள்ளது. வறட்சியான மொழியில் எழுதி நூல்களை எப்படி விற்பனை செய்வார்கள் என்று எனக்கு தெரியவில்லை. இப்படியே நூல்களை தொகுத்தால் இன்னும் சில தொடர்களை விரிவாக்கலாம். ஆனால் அதன் வடிவங்களை நிறைய மாற்றவேண்டும்.  மயிலாப்பூர் காரணீஸ்வர் கோயில் அருகே எப்போதும் தட்டடைதான் வாங்குவேன். ஆனால் இன்று அங்கு முத்து மாரியம்மன் என்ற பழைய புத்தக கடையைப் பார்த்தேன். நகுலன் கதைகள் - காவ்யா பிரசுரம் வைத்திருந்தார் கடைக்காரர். விலையைக் கேட்டதற்கு காவ்யா ஓனரே கண்முன் நிற்பது போல நூலை புரட்டிப் பார்த்துவிட்டு நாற்பது ரூபாய் என்றார். அவரது உடல்மொழி இருக்கிறதே அபாரம்....  நகுலனின் கதைகளை முன்னர் திரு