இடுகைகள்

2025 லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

டைம் சிறந்த கண்டுபிடிப்புகள் 2025

 டைம் சிறந்த கண்டுபிடிப்புகள் 2025 ஆப்பிள் ஏர்பாட்ஸ் 3 இந்த ஏர்பாட், பல மடங்கு முன்னே சென்றுள்ளது. வெறும் காதில் இரைச்சலை நீக்குவது மட்டுமன்றி, உங்கள் இதயத்தின் துடிப்பையும் அளவிடுகிறது. கூடுதலாக மொழிபெயர்ப்பு பணியையும் செய்கிறது. ஆங்கிலம், பிரெஞ்சு, ஜெர்மன், போர்ச்சுகீசு மொழிகளை மொழிபெயர்க்கிறது. அதற்கு அடுத்த கட்டமாக சீனமொழி, கொரியன், ஜப்பானிய மொழி ஆகியவற்றை மொழிபெயர்ப்பதாக கூறியுள்ளது. ஆப்பிள் பொருட்கள் சாதாரண விலையில் கிடைப்பதில்லை. எனவே, இதுபோன்ற வசதிகளைக் கொண்ட பொருளின் விலை என்னவாக இருக்கும் என்பதை நீங்களே ஆப்பிள்.காம் போய் தெரிந்துகொள்ளுங்கள்.  யுனிஹெர்ட்ஸ் செல்போன் ஆண்ட்ராய்ட் போன்தான். அத்தனை ஆப்களும் உண்டு.ஆனால் போன், டெபிட் கார்ட் அளவில் இருக்கும். 3 அங்குல திரைதான். எனவே,உங்களது பிரெயின் ராட் ஸ்க்ரோலிங் அதிகம் செய்யமுடியாது. அளவில் சிறியது என்பதால் எளிதாக எடுத்துச் செல்லலாம். சீன நிறுவனம் இந்தப் போனை தயாரித்து சந்தைப்படுத்தியுள்ளது. போனின் பின்புறம் நத்திங் போனில் அழைப்பு வந்தால் விளக்கு எரியுமே? அதே தொழில்நுட்பம் உள்ளது. சீரியல் பல்ப் கட்டியது மாதிரி அழகாக தெரியு...

மின்னூல் வெளியீடு....

படம்
நூலை வாசிக்க...https://www.amazon.com/dp/B0FX7WC8YV

விரைவில்...

படம்
     

2025ஆம் ஆண்டில் என்ன எதிர்பார்க்கலாம்?

படம்
  புதிய எதிர்பார்ப்புகள் 2024ஆம் ஆண்டு பற்றிய விஷயங்களை பூந்தி, டெய்லிகரன் ஆகியோர் இணைப்பிதழை இலவசமாக கொடுத்து புரிய வைத்துவிடுவார்கள். இனி அதை தனியாக எழுதி நேரத்தை வீணடிக்க வேண்டாம். எதிர்வரும் ஆண்டுக்கான விஷயங்களைப் பார்ப்போம். விமானநிலையம் மக்கள் இந்தியாவில் இருந்து தப்பிச் செல்லவா என்று தெரியவில்லை. பிரமாண்ட விமானநிலையங்கள் நொய்டா, நவி மும்பையில் செயல்பாட்டுக்கு வரவிருக்கின்றன. இவற்றை ஆட்சித்தலைவரின் அபிமான நண்பர் இயக்குவாரா இல்லையா என விரைவில் செய்திகள் சொல்லும். கூட்டுறவு இந்தியா குவாட் அமைப்பில் உள்ளது. அமெரிக்க அதிபராக குடியரசு கட்சியைச் சேர்ந்த டிரம்ப் பதவியேற்கவிருக்கிறார். சீனாவின் டிக்டாக்கை தடைவிதிக்க வேண்டாம் என கூறியுள்ளார். வணிகத்தைப் பொறுத்தவரை அதிகவரி ஏற்றுவதாக வாக்குறுதி கொடுத்துவிட்டார். சீனாவுக்கு எதிராக அமெரிக்கா என்ன வித நடவடிக்கை எடுத்தாலும் இந்தியா அதற்கு மகிழ்ச்சியுறும்.பின்னே நாம் முன்னேறமுடியவில்லை அடுத்தவர்கள் முன்னேறினால் மட்டும் பார்த்துக்கொண்டு சும்மா இருப்போமா என்ன? இந்த வகையில் இந்தியா ஜப்பான், ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளோடு இணைந்துகொண்டு இயங்கும். மின...