இடுகைகள்

கம்யூனிஸ்ட்கட்சி லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

அவமானச்சின்னத்தை அகற்ற முயலும் சீன அரசு!

படம்
  அவமானத்தின் தூண்- ஹாங்காங் சீன கம்யூனிஸ்ட் கட்சி, வரலாற்று ரீதியான களங்கத்தை மறைக்கும் முயற்சியை எப்போதும் செய்துவந்திருக்கிறது. அண்மையில்  ஹாங்காங் பல்கலைக்கழகத்தில்  டென்மார்க் நாட்டைச் சேர்ந்த சிற்பி ஜென்ஸ் கல்சியோட் தியான்மென் சதுக்க படுகொலைகளை சுட்டும் சிற்பத்தை வடிவமைத்தார். இப்போது சீன அரசு அந்த சிற்பத்தை அகற்ற வலியுறுத்தி வருகிறது.  சீனாவில் அனுமதிக்கப்படாத தியான்மென் அடையாளம், ஹாங்காங்கில் மட்டுமே உள்ளது. சீனாவில் இருக்கும் ஜனநாயகத்தை முடக்கும் பிரச்னைகள் ஹாங்காங்கில் எதிரொலிக்க, அங்கு போராட்டங்கள் தொடங்கின. இப்போராட்டங்களை இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் நாளிதழ்களில் பார்த்திருப்பீர்கள்.  தியான்மென் சதுக்கத்தில் மாணவர்கள் நடத்திய போராட்டத்தை அரசு ராணுவம் கொண்டு அடக்கியது. 1989ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் போராட்டங்கள் தொடங்கின. இதனை நினைவுறுத்தவே சிற்பி அவமானத்தின் சின்னம் என்ற பெயரில் சிற்பத்தை உருவாக்கியிருக்கிறார்.  தியான்மென் சதுக்கத்தில் மொத்தம் 7 ஆயிரம் பேர் காயம்பட்டனர். இதில் போராட்டக்கார ர்கள், காவல்துறையினரும் உள்ளடங்குவார்கள்.  36 மாணவர்கள் கொல்லப்பட்டனர். பத்து ராணுவ வீர ர